முட்டும் மூச்சிற்கு
விக்கித்துப் போகும் உடல்;
வறண்டத் தொண்டையால்
வந்து நிற்கும் கண்ணீர்!
தடுமாறும் திசுக்களால்
தடம் மாறும் சுவாசம்;
கரம் கொண்டுத்
தலைக் கோதினாலும்
தவணைமுறையில்
திக்கும் நாவு!
தொப்புள் கொடி வெட்டி;
குருதிக் கழுவக் குளியல்;
பிறந்தப்போது;
தொடர்பை அறுத்து
தொலைத் தூரப்பயணத்திற்குக்;
குளியல் உனக்கு;
இறந்தப்போது
ஒத்திகைக் காணா;
ஓசையில்லாப் பயணத்திற்கு;
இருள் சூழ்ந்தப் புகுந்தவீடும்;
கட்டியணைக்கும் வெள்ளை ஆடையும்;
கண்ணீருடன் வாசல் வரைத்
தொட்டுச்செல்லும் துணையும்;
செல்லப்பெயர் எத்துனை
இருந்தாலும்;
நாங்கள் சொல்லும்
பெயர் ஒன்றுதான் உனக்கு;
ஜனாஸா!
Tweet
No comments:
Post a Comment