தாய் வாசம்..


அழுது அடம்பிடிக்கும்
என்னை மிரட்டலோடு;
விரல் நீட்டி;
அள்ளி அணைப்பாய்;

என் பிஞ்சி விரல்கள்
நசுங்கிப்போகும்;
உன் உதட்டின்  
நடுவேச் சிக்கி!

நீருப்பூத்த என்
விழிகளைத் துடைத்துவிட்டு;
சில்லைறைகளால்
சமாதனம் செய்து
பள்ளிக்கு அனுப்பி;
விம்மி அழுவாய்;
நான் பார்க்காதப் போது!

அரும்பு மீசை
துளிர் விட்டாலும்;
துளியும் விடாத
உன் அன்பு!

கல்லூரிக்குள் என்
பாதம் படிந்தாலும்;
மடியாத உன்
மணமான தாய் வாசம்!

எதை நினைத்து
அழுதாயோ நான்
மணவாளனாய்
நிற்கும் போது;
குழந்தையாக நீ!

சுருக்கம் விழுந்த
உன் கைரேகை;
என் முகத்தைக் கீறினாலும்;
மாறாது என் மனம்;
மறவாது உன் மணம்!

அழுது அடம்பிடிக்கும்
என்னை மிரட்டலோடு;
விரல் நீட்டி;
அள்ளி அணைப்பாய்;

என் பிஞ்சி விரல்கள்
நசுங்கிப்போகும்;
உன் உதட்டின்  
நடுவேச் சிக்கி!

நீருப்பூத்த என்
விழிகளைத் துடைத்துவிட்டு;
சில்லைறைகளால்
சமாதனம் செய்து
பள்ளிக்கு அனுப்பி;
விம்மி அழுவாய்;
நான் பார்க்காதப் போது!

அரும்பு மீசை
துளிர் விட்டாலும்;
துளியும் விடாத
உன் அன்பு!

கல்லூரிக்குள் என்
பாதம் படிந்தாலும்;
மடியாத உன்
மணமான தாய் வாசம்!

எதை நினைத்து
அழுதாயோ நான்
மணவாளனாய்
நிற்கும் போது;
குழந்தையாக நீ!

சுருக்கம் விழுந்த
உன் கைரேகை;
என் முகத்தைக் கீறினாலும்;
மாறாது என் மனம்;
மறவாது உன் மணம்!

No comments:

Post a Comment