வாக்காளன் நான்என் விரல் நுனியில்
மையிட;
விலை நடக்கும்;
இடம் கொடுத்தால்
பை நிறையும்!

போட்டிப் போட்டுப்
போஸ்டர்கள்;
வாட்டி எடுக்கும்;
என் வீட்டுச் சுவர்கள்
காட்டிக் கொடுக்கும்!

வீசி எறியும்
வாக்குறுதிகள்
காற்றோடுக் கலந்துவிடும்;
காத்திருந்துக் காத்திருந்து
எங்கள் வயதுக்
காலமாகிவிடும்!

மறந்துப்போன
என் நினைவுகள்
மலர்ந்து விடும்;
ஓயாத ஒலிப்பெருக்கியின்
ஓலங்கள் செவிப்பறயை
எட்டி உதைக்கும்;
யாரென்றுத் தெரியாமலே;
கட்சி என்னைக்
கட்டியணைக்கும்!


என் விரல் நுனியில்
மையிட;
விலை நடக்கும்;
இடம் கொடுத்தால்
பை நிறையும்!

போட்டிப் போட்டுப்
போஸ்டர்கள்;
வாட்டி எடுக்கும்;
என் வீட்டுச் சுவர்கள்
காட்டிக் கொடுக்கும்!

வீசி எறியும்
வாக்குறுதிகள்
காற்றோடுக் கலந்துவிடும்;
காத்திருந்துக் காத்திருந்து
எங்கள் வயதுக்
காலமாகிவிடும்!

மறந்துப்போன
என் நினைவுகள்
மலர்ந்து விடும்;
ஓயாத ஒலிப்பெருக்கியின்
ஓலங்கள் செவிப்பறயை
எட்டி உதைக்கும்;
யாரென்றுத் தெரியாமலே;
கட்சி என்னைக்
கட்டியணைக்கும்!

No comments:

Post a Comment