விலைமகன்



பிறந்த வீட்டிலே
அடைப்பட்டு;
அழுதுக்கொண்டு;
தர முடியாத்
தட்சணையால்;
தாட்சண்யம் இழந்து;
முதிர்கன்னி என்று
முத்திரையிட்டப்
பத்திரை மாற்றுத்
தங்கம் நான்!

கண்ணீருக்குத் துணையாய்;
கல்யாணம் எனக்குக் கனவாய்;
கேட்பாரற்றுக் கேள்விக்குறியாய்
நான் இங்கே;

நொண்டியடிக்கும் சமூகம்
முண்டியடித்துக் கேட்கும்
வரதட்சணைக்கு;
நான் போவது எங்கே!

பொருள் கேட்டுத்
தலை நிமிறும் தலைமகன்
நீ மணமகனா;
அல்லது
தனக்கே விலைப்பேசி
கரம் பிடிக்க நினைக்கும்
நீ விலைமகனா!


பிறந்த வீட்டிலே
அடைப்பட்டு;
அழுதுக்கொண்டு;
தர முடியாத்
தட்சணையால்;
தாட்சண்யம் இழந்து;
முதிர்கன்னி என்று
முத்திரையிட்டப்
பத்திரை மாற்றுத்
தங்கம் நான்!

கண்ணீருக்குத் துணையாய்;
கல்யாணம் எனக்குக் கனவாய்;
கேட்பாரற்றுக் கேள்விக்குறியாய்
நான் இங்கே;

நொண்டியடிக்கும் சமூகம்
முண்டியடித்துக் கேட்கும்
வரதட்சணைக்கு;
நான் போவது எங்கே!

பொருள் கேட்டுத்
தலை நிமிறும் தலைமகன்
நீ மணமகனா;
அல்லது
தனக்கே விலைப்பேசி
கரம் பிடிக்க நினைக்கும்
நீ விலைமகனா!

2 comments:

  1. மிக நல்லக் கவிதை... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. மொஹம்மத் சித்திக்December 11, 2010 at 2:10 PM

    நன்மையை ஏவி தீமையை தடுக்க இதுவும் நல்ல வழி!!
    அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக ! ஆமீன் !!!

    ReplyDelete