விவசாயம்..


வளர்ந்துவிட்டக்
கணிணி உலகத்தில்;
சாயம் போகும்
விவசாயம்!

ஒடிந்துப்போன
முதுகெலும்பால்;
படுத்தப்படுக்கையாய்
வயல்கள்!

பெருகிவரும் ஆசையால்
சுருங்கிவரும் நிலங்கள்;
அடிக்கல்லை வைத்து
அடிக்கணக்கில் விலைப்பேசி;
மடிநிறையப் பணம் கட்டும்
புது வியாபாரம்!

வாய்க்காலுக்கு
வாய் பார்த்து;
நதி நீருக்கு
விதி நொந்து;
அறுவடைச் செய்தாலும்
அடிமாட்டு விலைக்கு!

வளர்ந்து வரும் வேகத்தில்;
பள்ளிப் பாடத்தில்
மட்டும் வரும்
பின்னொருக்காலத்தில்;
விவசாயம் என்றத் தொழில்...

வளர்ந்துவிட்டக்
கணிணி உலகத்தில்;
சாயம் போகும்
விவசாயம்!

ஒடிந்துப்போன
முதுகெலும்பால்;
படுத்தப்படுக்கையாய்
வயல்கள்!

பெருகிவரும் ஆசையால்
சுருங்கிவரும் நிலங்கள்;
அடிக்கல்லை வைத்து
அடிக்கணக்கில் விலைப்பேசி;
மடிநிறையப் பணம் கட்டும்
புது வியாபாரம்!

வாய்க்காலுக்கு
வாய் பார்த்து;
நதி நீருக்கு
விதி நொந்து;
அறுவடைச் செய்தாலும்
அடிமாட்டு விலைக்கு!

வளர்ந்து வரும் வேகத்தில்;
பள்ளிப் பாடத்தில்
மட்டும் வரும்
பின்னொருக்காலத்தில்;
விவசாயம் என்றத் தொழில்...

3 comments:

 1. நாம் ஒரு காலத்தில் விவசாயம்தான் செய்தோம் .அந்த பசுமையான நாட்கள் போய் இப்பொழுது வறண்ட பாலைவனத்தில் பணத்திற்காக அலைகின்றோம் அருமையாக கவிதை எழுதியுள்ளீர்கள்.
  குளிர்ந்த நீர் தருகின்றேன் வீட்டுக்கு வாருங்கள் .

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும்,

  தங்களுடைய எல்லா கவிதைகளும் நன்றாக உள்ளது,இதனை தொடருங்கள் அல்லாஹ் அருள் புரிவான்.

  ReplyDelete
 3. http://suraavali.blogspot.com/2011/11/4.html
  விவசாயிகள் நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்-4
  http://suraavali.blogspot.com/2011/11/4.html
  விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் 3
  http://suraavali.blogspot.com/2011/11/3.html
  விவசாயிகள்: நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் 2http://suraavali.blogspot.com/2011/11/2_10.html

  ReplyDelete