கர்வம்..


பெருமை எண்ணும்
பெயர் கொண்டு;
அமர்ந்துவிடுவேன்;
உள்ளேச் சென்று;
ஏறிவிட்டக் கனத்தால் இன்று;
எடுத்தெறிந்துக் கதைப்பேன்;
எல்லோரிடமும் சென்று!

அறிவுரைச் சொல்லும்
மனிதனின் பேச்சைக் கேட்டு;
அடைத்துக்கொள்ளச்
செவிகளின் மதிலுக்கு
இடுவேன் பூட்டு!
 
மெல்லமாய் புகுந்து;
ஏற்றுவேன் போதையை – பின்
மூடிக்கொள்வேன்
நேரானப் பாதையை!
நான் தான் என்று;
உதடுகள் உரைக்கும்;
நான் மட்டும்தான் என்று
உள்ளம் கதைக்கும்!

பெருமைக்குக் கட்டுப்பட்டு;
மக்களிடத்தில் குட்டுப்பட்டு;
தனிமனிதனைக் கெடுக்க;
நான் இருக்கிறேன் கர்வமாய்!
உச்சத்தில் இருந்தால்;
மாற்றிவிடுவேன்
மனிதனை மிருகமாய்!

பெருமை எண்ணும்
பெயர் கொண்டு;
அமர்ந்துவிடுவேன்;
உள்ளேச் சென்று;
ஏறிவிட்டக் கனத்தால் இன்று;
எடுத்தெறிந்துக் கதைப்பேன்;
எல்லோரிடமும் சென்று!

அறிவுரைச் சொல்லும்
மனிதனின் பேச்சைக் கேட்டு;
அடைத்துக்கொள்ளச்
செவிகளின் மதிலுக்கு
இடுவேன் பூட்டு!
 
மெல்லமாய் புகுந்து;
ஏற்றுவேன் போதையை – பின்
மூடிக்கொள்வேன்
நேரானப் பாதையை!
நான் தான் என்று;
உதடுகள் உரைக்கும்;
நான் மட்டும்தான் என்று
உள்ளம் கதைக்கும்!

பெருமைக்குக் கட்டுப்பட்டு;
மக்களிடத்தில் குட்டுப்பட்டு;
தனிமனிதனைக் கெடுக்க;
நான் இருக்கிறேன் கர்வமாய்!
உச்சத்தில் இருந்தால்;
மாற்றிவிடுவேன்
மனிதனை மிருகமாய்!

1 comment:

  1. அருமையான சிந்தனை வரிகள் . சிந்திக்கத் தூண்டும் கவிதை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete