பொறாமை



மனம் சுளித்து;
முகம் கறுத்து;
கொதிக்கும் உள்ளத்திற்குச்;
சுகமாய் சம்மணமிட்டு;
மெல்லமாய் எரிப்பேன்;
செல்லமாய் புகைப்பேன்!

திட்டம் தீட்டிக்;
கட்டம் கட்டி;
வேண்டியவர்களை;
வேண்டாதவனாக்கி;
உள் ஒன்று வைத்து;
புறம் ஒன்று வைத்து;
பகை வளர்ப்பேன்;
வகைச் சேர்ப்பேன்!
 
பொருமித்தள்ளும்
மனதிற்குப் போர்வையாய்;
எச்சச் சந்தோஷத்திற்கு
எச்சில் சொட்டி;
எட்டிப் பார்ப்பேன்;
சிக்கியவனைக் கண்டு
ரசிப்பேன்!

இயலாமையால்;
இல்லாமையாகி;
முயலாமையால்;
முடங்கிப்போய்;
முடமான மூளையால்;
ஒதுங்கிப்போன மூலையில்
சிந்தித்துச் சிந்தித்து
நிந்தித்துக் கொண்டிருப்பவன்
நான்தான் பொறாமை!


மனம் சுளித்து;
முகம் கறுத்து;
கொதிக்கும் உள்ளத்திற்குச்;
சுகமாய் சம்மணமிட்டு;
மெல்லமாய் எரிப்பேன்;
செல்லமாய் புகைப்பேன்!

திட்டம் தீட்டிக்;
கட்டம் கட்டி;
வேண்டியவர்களை;
வேண்டாதவனாக்கி;
உள் ஒன்று வைத்து;
புறம் ஒன்று வைத்து;
பகை வளர்ப்பேன்;
வகைச் சேர்ப்பேன்!
 
பொருமித்தள்ளும்
மனதிற்குப் போர்வையாய்;
எச்சச் சந்தோஷத்திற்கு
எச்சில் சொட்டி;
எட்டிப் பார்ப்பேன்;
சிக்கியவனைக் கண்டு
ரசிப்பேன்!

இயலாமையால்;
இல்லாமையாகி;
முயலாமையால்;
முடங்கிப்போய்;
முடமான மூளையால்;
ஒதுங்கிப்போன மூலையில்
சிந்தித்துச் சிந்தித்து
நிந்தித்துக் கொண்டிருப்பவன்
நான்தான் பொறாமை!

3 comments:

  1. பொறாமை...அது கொண்டவனை மட்டும் அழிக்காது.. சுற்றி உள்ள அனைவருமே இந்த குணத்தால் பதிப்படுவார்கள்
    எதிரிக்கும் வேண்டாம் இந்த குணம்...
    கவிதையில் சொன்ன சகோ கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தெரிவித்த Mums க்கு நன்றி

    ReplyDelete