அலைவரிசையைத்
தெரிந்துக்கொண்டுச்
சீர் செய்வோம் வரிசையை;
கூடி நின்றுப் பேசிக்
கும்மாளமாய் வருவோம்;
முட்டி மோதி சென்றாலும்
தொட்டுப்பார்த்தே நடப்போம்!
கொட்டிக்கிடக்கும்
இனிப்பினைக்
கட்டியணைக்க வருவோம்;
மிச்சமீதிக் கிடந்ததையும்
முத்தமிட்டு உண்போம்!
உற்சாகத்திற்கு
உதாரணமாய்
உலகிற்கு இருப்போம்;
கூட்டாஞ்சோறு உண்ணக்
கூட்டமாய்தான் வாழ்வோம்!
வழியைத் தடுக்கிற
மனிதனைக் கடித்துவிட்டுச்
சிரிப்போம்;
கடுப்பாகி அவன் கரத்தினால்
சிலநேரத்தில் மிதிப்பட்டுக்
கிடப்போம்!
பல வண்ணம் கொண்ட
எனக்கு மனிதன்
எண்ணம் போல்
பெயர் வைப்பான்;
எங்கள் எண்ணிக்கைக் கண்டுப்
பிடிக்காமல் அவனே
மருந்து வைத்து
முகம் சிரிப்பான்!
Tweet
No comments:
Post a Comment