காதல்..


துளிர்விட்டப் பருவத்தால்
குளிர்விட்ட இளமை;
சுணைத் தீட்டும் நண்பர்களால்
கணநேர மதி மாற்றம்;
வெட்கப்பட்ட விழிகள்;
அவனைக் கண்டு மொட்டுவிட்டது;
காதல் வெட்கப்பட்டது!

மாறி மாறிப்
பார்த்துக்கொண்டு;
மாற்றிக்கொண்டோம்
கைப்பேசி இலக்கை;
ஆரம்பித்தோம் தொடக்கை!

விரல் ரேகைகளும்
சோர்ந்துப்போய்;
குறுந்தகவல்களில் மூழ்கிப்போய்;
சந்தோசத்தில் நனைய!

படிப்பு எனத்
தனி அறைகளில்
படுத்துக்கொண்டு;
பெற்றோருக்கு மாதிரியாய்
நடித்துக்கொண்டு!

ஓடி விட;
மனம் எத்தனித்துக்;
காதல் பித்துப் பிடித்துக்;
குறுக்குறுத்த உள்ளத்திற்குக்
குடச்சல் கொடுக்கும்
நண்பர்களும்;
ஆசை வார்த்தைக்கு
அச்சானியாய் அவனும்!

குழப்பத்திலே;
தயக்கத்திலே;
நள்ளிரவில் நான்;
தீராதச் சோகம் சேருமோ;
என் பெற்றோருக்கு;
ஒயாத வலியும்;
ஓடுகாலிப் பட்டமும் எதற்கு;

தூக்கி நின்றப் பெட்டியும்
தூர வீசினேன் மூலைக்கு;
உதித்து நின்ற அறிவிற்கு
தொட்டு முத்தமிட்டேன் மூளைக்கு!

மார்க்கம் தந்த விதிமுறையில்;
இதற்கு இல்லை வழிமுறை;
துள்ளி நிற்கும் இளமைக்கு
அல்லல் படும் தலைமுறை;

மானம் இழந்த ஆசை
மனதிற்கு வேண்டாம்;
தூண்டிலிடும் தவறுக்கு
இலக்காக வேண்டாம்!

துளிர்விட்டப் பருவத்தால்
குளிர்விட்ட இளமை;
சுணைத் தீட்டும் நண்பர்களால்
கணநேர மதி மாற்றம்;
வெட்கப்பட்ட விழிகள்;
அவனைக் கண்டு மொட்டுவிட்டது;
காதல் வெட்கப்பட்டது!

மாறி மாறிப்
பார்த்துக்கொண்டு;
மாற்றிக்கொண்டோம்
கைப்பேசி இலக்கை;
ஆரம்பித்தோம் தொடக்கை!

விரல் ரேகைகளும்
சோர்ந்துப்போய்;
குறுந்தகவல்களில் மூழ்கிப்போய்;
சந்தோசத்தில் நனைய!

படிப்பு எனத்
தனி அறைகளில்
படுத்துக்கொண்டு;
பெற்றோருக்கு மாதிரியாய்
நடித்துக்கொண்டு!

ஓடி விட;
மனம் எத்தனித்துக்;
காதல் பித்துப் பிடித்துக்;
குறுக்குறுத்த உள்ளத்திற்குக்
குடச்சல் கொடுக்கும்
நண்பர்களும்;
ஆசை வார்த்தைக்கு
அச்சானியாய் அவனும்!

குழப்பத்திலே;
தயக்கத்திலே;
நள்ளிரவில் நான்;
தீராதச் சோகம் சேருமோ;
என் பெற்றோருக்கு;
ஒயாத வலியும்;
ஓடுகாலிப் பட்டமும் எதற்கு;

தூக்கி நின்றப் பெட்டியும்
தூர வீசினேன் மூலைக்கு;
உதித்து நின்ற அறிவிற்கு
தொட்டு முத்தமிட்டேன் மூளைக்கு!

மார்க்கம் தந்த விதிமுறையில்;
இதற்கு இல்லை வழிமுறை;
துள்ளி நிற்கும் இளமைக்கு
அல்லல் படும் தலைமுறை;

மானம் இழந்த ஆசை
மனதிற்கு வேண்டாம்;
தூண்டிலிடும் தவறுக்கு
இலக்காக வேண்டாம்!

1 comment:

  1. இறைவன் மீது கொண்ட காதல் சுவனத்தின் வழி

    ReplyDelete