உறக்கத்தோடு
உறவுக்கொள்ள
இமைகளுக்கு இடம்
கொடுத்து;
அவசரத்திற்குக்
கவசமிட்டு;
அமைதிக்கு
அனுமதிக்கொடுத்துத்;
தவழ்ந்து வரும்
ஓய்வுக்கு;
ஓய்வு இடமாய் இரவு!
விளக்குகளுக்கு
மதிப்புக்கொடுத்து;
வெளிச்சத்திற்கு இடம்
கொடுக்கும் இனிமையான
இரவு!
மிரண்டவனுக்குப்
பயம் கொடுத்து;
கோழைக்குக் காலை
வாரும் இருள் சூழ்ந்த இரவு!
ஒளிச் சூழ்ந்து
வெளிப்படையாய்
இருந்தாலும்;
இருட்டில் அதற்குத்
துண்டுப்போட்டு
இடம் கொடுக்கும்
இரவின் அழகு!
Tweet
kavithai nantru.
ReplyDeletemullaiamuthan.