ஓடும் உடம்பிற்குள்
ஒய்யாரமாய் நான்;
ஓய்ந்துவிட்டால்
ஓய்வெடுக்கும் உயிர்;
மனிதனின் தசைகளை
முத்தமிட்டு
முட்டிக்கொண்டுத்
தொட்டுக்கொண்டு
ஓடுவேன்;
தடைப்போட வரி விதித்துக்
கொழுப்புகள் கொக்கறிக்கும்!
ஓடும் என்னை வழிமறிக்கும்!
மாசுப்படிந்தச் சூழலால்
சோர்ந்துப்போன ஆரோக்கியம்;
தள்ளாடும் எனது ஓட்டத்தால்
தவழத்தொடங்கும் வயது!
என்னைக் கொடுக்கத்
துணிந்த மனிதனுக்கு;
எதிர்ப்புச் சக்தித் தருவேன்;
கொடுத்தப்பின்னே
மனம் உருகி;
நன்றிச் சொல்லும்
நல்ல மனங்களைப் பெறுவேன்!
கொடுக்கக் கொடுக்க
ஊறிக்கொண்டு
ஊற்றாய் நானும் வருவேன்;
சம இடைவெளியில்
கொடுக்கும் உனக்கு
மருந்தாய் இருக்க மறவேன்!
Tweet
No comments:
Post a Comment