விஞ்ஞானிகள் நாங்கள்


பசித்துப்போன மனிதனால்;
புசிக்கப்படும் பசுமைக்கு;
வறட்சிக்கண்டப் பூமி;
வெடித்து நிற்கும் காட்சி!

கொட்டித் தீர்க்கும் மழையைக்
கைக்கட்டி நின்றுப் பார்ப்போம்;
காய்ந்துப்போனப் பூமிக்குக்
குடைப்பிடித்து நிற்போம்!

வெட்டிவிடும் மரத்திற்கு;
மாற்று மருந்திட
மறந்திடுவோம்;
நீர் மூழ்கி
இயந்திரங்கொண்டு;
அடிவயிறு வரை
உறிஞ்சிடுவோம்!

புத்தம் புது
எருவைக் கொண்டு;
மண்ணின் கருவைக்
கலைத்திடுவோம்!

சுட்டெறிக்கும்
சூரியனுக்கும்
முகம் சுருக்கி;
உச்சி நனைக்கும்
மழைக்கும் உச் கொட்டி;
விளங்காத விளக்கம்கெட்ட
விஞ்ஞானிகள் நாங்கள்!

பசித்துப்போன மனிதனால்;
புசிக்கப்படும் பசுமைக்கு;
வறட்சிக்கண்டப் பூமி;
வெடித்து நிற்கும் காட்சி!

கொட்டித் தீர்க்கும் மழையைக்
கைக்கட்டி நின்றுப் பார்ப்போம்;
காய்ந்துப்போனப் பூமிக்குக்
குடைப்பிடித்து நிற்போம்!

வெட்டிவிடும் மரத்திற்கு;
மாற்று மருந்திட
மறந்திடுவோம்;
நீர் மூழ்கி
இயந்திரங்கொண்டு;
அடிவயிறு வரை
உறிஞ்சிடுவோம்!

புத்தம் புது
எருவைக் கொண்டு;
மண்ணின் கருவைக்
கலைத்திடுவோம்!

சுட்டெறிக்கும்
சூரியனுக்கும்
முகம் சுருக்கி;
உச்சி நனைக்கும்
மழைக்கும் உச் கொட்டி;
விளங்காத விளக்கம்கெட்ட
விஞ்ஞானிகள் நாங்கள்!

2 comments:

  1. உங்கள் கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமை

    ReplyDelete
  2. விளங்காத விளக்கம்கெட்ட
    விஞ்ஞானிகள் நாங்கள்!

    ReplyDelete