மங்கிப்போன வண்ணங்களால்
ஏக்கமாய்;
வாரி சுருட்டிக்கொண்டு
மூச்சிப் பேச்சில்லாமல்;
மூட்டைகளில் உறங்கியப்படி!
பொருத்தமானப்
பொத்தான்களை
இழந்ததால்;
மவுசு இழந்துப்;
பவுசை இழந்து!
ஓரமாய் கிழிந்ததால்;
மூலைக்குப்போன
முகத்தால்;
குப்பைக்கு எத்தனிக்கும்
பழைய ஆடை!
வீசுவதற்கு முன்
சுழற்றுங்கள் விழியை;
ஆடை நமக்குதான்
பழையது!
Tweet
நெகிழ வைத்த கவிதை.
ReplyDeleteஅருமையாகவுள்ளது..
ReplyDeleteபடம் கவிதையின் ஆழத்தை மிகுவிக்கிறது
ReplyDelete