ஆள் தேடி..


உழைத்துக்
களைத்துப்போனதால்;
ஓய்ந்துப்போய்
ஓரமாய் நான்;
நினைவுகளுக்குத் தீனிப்போடத்
தாகித்து இருக்கும்;
மங்கிப்போன என்
விழிகளுக்கு!

இரத்தங்களை
வியர்வையாக்கி;
உணர்வுகளை ஊனமாக்கித்;
திண்ணையில் துணையின்றித்;
தன்னந்தனியாக நான்!

வருஷங்களை
வளைகுடாவில்
அறுவடைச் செய்து;
இறந்துப்போன உறவினருக்குக்
கண்காணத் தேசத்தில்
இருந்தப்படியேக்;
கண்ணீர்துளிகளையும்
கைக்குட்டைக்குள்
ஒளித்துக்கொண்டு!

எலும்புகள் தோய்ந்து
வலு என்னை
வம்பு இழுத்தப்படி;
படிக்கட்டில் நான்;
பேச்சுத் துணைக்கு
ஆள் தேடி!

ஒத்தவயதில்
ஒருவருமில்லாமல்;
கிட்ட வரும் இளசுகளும்;
என்னைக் கண்டு
ஒதுங்கிச் செல்லும்;
பெருசுப் பேச
ஆரம்பித்துவிட்டதென்றால்
என்று!


உழைத்துக்
களைத்துப்போனதால்;
ஓய்ந்துப்போய்
ஓரமாய் நான்;
நினைவுகளுக்குத் தீனிப்போடத்
தாகித்து இருக்கும்;
மங்கிப்போன என்
விழிகளுக்கு!

இரத்தங்களை
வியர்வையாக்கி;
உணர்வுகளை ஊனமாக்கித்;
திண்ணையில் துணையின்றித்;
தன்னந்தனியாக நான்!

வருஷங்களை
வளைகுடாவில்
அறுவடைச் செய்து;
இறந்துப்போன உறவினருக்குக்
கண்காணத் தேசத்தில்
இருந்தப்படியேக்;
கண்ணீர்துளிகளையும்
கைக்குட்டைக்குள்
ஒளித்துக்கொண்டு!

எலும்புகள் தோய்ந்து
வலு என்னை
வம்பு இழுத்தப்படி;
படிக்கட்டில் நான்;
பேச்சுத் துணைக்கு
ஆள் தேடி!

ஒத்தவயதில்
ஒருவருமில்லாமல்;
கிட்ட வரும் இளசுகளும்;
என்னைக் கண்டு
ஒதுங்கிச் செல்லும்;
பெருசுப் பேச
ஆரம்பித்துவிட்டதென்றால்
என்று!

No comments:

Post a Comment