மனிதன் மாயம்..


வறண்டு
வெடித்துப்போன
இதயங்களின் நடுவே;
நடவுச் செய்யப்பட்டு;
கானல் நீருக்காகக்;
கால் கடுத்து;
உதடு வெடித்து;
வயோதிகத்தில் மனிதநேயம்!

அண்டை வீட்டாரின்
அடிவயிறு பசியில் கொதிக்க;
வேடிக்கைப் பார்த்து;
வேதனையை நினைக்க மறந்த;
மந்தமான மனிதநேயம்!

உற்றாருக்கும்
உறவினருக்கும்
ஒளிந்து ஒவ்வாமை;
பாராட்டி மார்தட்டி
மாயமான மனிதநேயம்!

இறக்கப்பட்டு
ஈரமாகாத விழிகளும்;
சிலைகளாகச் சிரித்தப்படி;
உலாவரும் மனிதநேயம்!

மதங்களை
மட்டும் கண்டு;
மனம் உருகும்;
மலடானா மனிதநேயம்!

வறண்டு
வெடித்துப்போன
இதயங்களின் நடுவே;
நடவுச் செய்யப்பட்டு;
கானல் நீருக்காகக்;
கால் கடுத்து;
உதடு வெடித்து;
வயோதிகத்தில் மனிதநேயம்!

அண்டை வீட்டாரின்
அடிவயிறு பசியில் கொதிக்க;
வேடிக்கைப் பார்த்து;
வேதனையை நினைக்க மறந்த;
மந்தமான மனிதநேயம்!

உற்றாருக்கும்
உறவினருக்கும்
ஒளிந்து ஒவ்வாமை;
பாராட்டி மார்தட்டி
மாயமான மனிதநேயம்!

இறக்கப்பட்டு
ஈரமாகாத விழிகளும்;
சிலைகளாகச் சிரித்தப்படி;
உலாவரும் மனிதநேயம்!

மதங்களை
மட்டும் கண்டு;
மனம் உருகும்;
மலடானா மனிதநேயம்!

1 comment: