தூரல்கள்

கவிதைக்காக நான் பெரும் முயற்சியோ அல்லது இப்படிதான் கவிதை இருக்கும் என்று மற்றவர்களின் கவிதையைக் கண்டு அதைப்போல் மாதிரியோ எடுத்துக் கொண்டதுக் கிடையாது;எல்லாம் வல்ல இறைவனின் மாபெருங் கருணையால் என்னை அறியாமலே நான் கவிதை எழுத ஆரம்பித்தேன். நான் முதன் முதல் கவிதை எழுதும் போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

தொடக்கத்தில் நண்பன் ஒருவனுக்குப் போட்டியாக எழுத தொடங்கியது;பின் படிப்படியாக தோன்றியதை எல்லாம் எழுதத் தொடங்கினேன்.எந்த அளவிற்கு என்றால் எட்டு  அல்லது ஒன்பது நாட்குறிப்பு (Diary) பிதுங்கும் அளவிற்கு.

பொய்யானக் கற்பனைக்கு அழகுப் பார்த்து கவிதை என்றுப் பெயர் இடுவதில் எனக்கு உடன்பாடில்லை;அது உண்மையில் அழகாய் இருக்கும் பட்சத்திலும் சரியே.எண்ணிலடங்கா உண்மை சம்பங்களும் சங்கடங்களும் இருக்கும் போது பொய்யின் பக்கம் போகவும் அவசியமில்லை. 

பொதுவாகக் கவிதைகள் நிறைய எழுதினாலும் வெளிநாட்டுச் சோகம் சம்பந்தப்பட்டக் கவிதைகள் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. பெரும்பாலானவர்களின் தேட்டமும் அதுவாக இருந்ததால் என்னவோ?
ஆரம்பத்தில் இதுப்போன்றக் கவிதைகள் மட்டும்தான் எழுதிக்கொண்டிருந்தேன்;பின் பலச் சகோதர்ர்களின் ஆலோசனையும்,    ஒருச் சில சகோதரர்களின் சலிப்பும் என்னை வேறுப்பக்கம் திரும்பச் செய்தது.அதன் பலனாக சமுதாயச் சிந்தனைக்கொண்ட கவிதைகள், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணையால் எழுதத் தொடங்கினேன்.
எல்லாக் கவிதைகளைப்போல் உண்மையையும் உணர்வுகளையும் எழுதித்தள்ளினாலும் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது வெளிநாட்டுச் சோகக் கவிதைகள்தான். இந்தக் கவிதை எழுதத் தூண்டிய சம்பவமும் மிகச் சுவாரசயமானது. ஒரு வார இதழில் வெளிவந்தக் கதையைக் படித்தேன்; அந்தக் கதை இதுதான்....

தொடரும்..