பர்மாவில் நாங்கள்கொடூரமாய் கொலையுண்டு 
இன்னொருமுறை 
மண்ணிற்கு உரமாகியச் 
சமூகம்!

குருதியை முத்தமிடாத பூமி
உலக வரைபடத்தில் 
மிச்சமேதுமில்லை;  
குரல் கொடுக்க எவருமில்லை!

ஊடகம் ஊமையானது ஏனோ;
எங்கள்  உயிர்கள் மட்டும் 
உங்களுக்கு ஈனமானது ஏனோ;
உலக நாடுகள் 
அமைதிக் காப்பது ஏனோ;
கொடூரமாய் இறக்கும் 
எங்களுக்கு இது 
அமைதி அஞ்சலி தானோ! 


கொடூரமாய் கொலையுண்டு 
இன்னொருமுறை 
மண்ணிற்கு உரமாகியச் 
சமூகம்!

குருதியை முத்தமிடாத பூமி
உலக வரைபடத்தில் 
மிச்சமேதுமில்லை;  
குரல் கொடுக்க எவருமில்லை!

ஊடகம் ஊமையானது ஏனோ;
எங்கள்  உயிர்கள் மட்டும் 
உங்களுக்கு ஈனமானது ஏனோ;
உலக நாடுகள் 
அமைதிக் காப்பது ஏனோ;
கொடூரமாய் இறக்கும் 
எங்களுக்கு இது 
அமைதி அஞ்சலி தானோ! 

இனிய ரமலானேதளர்ந்தத்  தசைகளும்
சிலிர்த்து நிற்கும்;
வறண்ட விழிகளும் 
நனைந்துப் போகும்;
பொன்னான மாதம் 
எனைப் போர்த்தியப்படி!

மணக்கும் இறைவேதமும்
என் மடியில்;
ஒளிரும் என் நெற்றியும்
தரையில்;
ஒளித்த செல்வங்கள்
தர்மத்திற்காக வெளியில்;
நன்மையை நோக்கி
என்  வயிறுப் பசியில்!

ஏக்கத்துடன்;
நன்மையைப் பெரும் 
நோக்கத்துடன்,
பாவமன்னிப்பிற்கானத்
தேட்டத்துடன்;
வல்லோனின் அருளுக்காக
வாட்டத்துடன் என் முகம்!

வளம் நிறைந்த ரமலானே 
உனை வீணடிப்பேனோ;
அடுத்த வருடம் உனையடைய 
நான் இருப்பேனோ!


தளர்ந்தத்  தசைகளும்
சிலிர்த்து நிற்கும்;
வறண்ட விழிகளும் 
நனைந்துப் போகும்;
பொன்னான மாதம் 
எனைப் போர்த்தியப்படி!

மணக்கும் இறைவேதமும்
என் மடியில்;
ஒளிரும் என் நெற்றியும்
தரையில்;
ஒளித்த செல்வங்கள்
தர்மத்திற்காக வெளியில்;
நன்மையை நோக்கி
என்  வயிறுப் பசியில்!

ஏக்கத்துடன்;
நன்மையைப் பெரும் 
நோக்கத்துடன்,
பாவமன்னிப்பிற்கானத்
தேட்டத்துடன்;
வல்லோனின் அருளுக்காக
வாட்டத்துடன் என் முகம்!

வளம் நிறைந்த ரமலானே 
உனை வீணடிப்பேனோ;
அடுத்த வருடம் உனையடைய 
நான் இருப்பேனோ!

ஓயாத ஊழல்அஸ்திவாரத்தின் 
அடியில் இருந்து 
ஒத்த ஒத்த செங்கல்லையும் 
உருவி எடுக்கும் ஊழலில்
பணியாட்களாக
அரசியல்வாதிகள்!

ஊழலோடு ஒட்டிப்பிறந்த
இரட்டைக் குழந்தையாக;
ஓட்டுக்கு மட்டும் 
கைகள் ஒட்டிக்கொண்டு;
வெற்றிக்குப் பின் 
வெறித்தப்படி வெளியில் 
அவர்களின் வருகைக்காக 
நாங்கள்!

பெருத்துவிட்ட ஊழலில் 
கருத்து நிற்கும் எங்கள் முகம்;
கருத்துச் சொல்ல;
எடுத்துச் சொன்னாலும் 
கறுப்புப் பணம் கேட்கும் 
ஆட்சி அதிகாரம்!

கொடுத்துக் கொடுத்துக்
கெடுத்து வைத்திருக்கும் 
நாங்களும் - உத்தமர்களாய்
அவ்வப்போது 
குரல் கொடுத்துக்கொண்டு! 


அஸ்திவாரத்தின் 
அடியில் இருந்து 
ஒத்த ஒத்த செங்கல்லையும் 
உருவி எடுக்கும் ஊழலில்
பணியாட்களாக
அரசியல்வாதிகள்!

ஊழலோடு ஒட்டிப்பிறந்த
இரட்டைக் குழந்தையாக;
ஓட்டுக்கு மட்டும் 
கைகள் ஒட்டிக்கொண்டு;
வெற்றிக்குப் பின் 
வெறித்தப்படி வெளியில் 
அவர்களின் வருகைக்காக 
நாங்கள்!

பெருத்துவிட்ட ஊழலில் 
கருத்து நிற்கும் எங்கள் முகம்;
கருத்துச் சொல்ல;
எடுத்துச் சொன்னாலும் 
கறுப்புப் பணம் கேட்கும் 
ஆட்சி அதிகாரம்!

கொடுத்துக் கொடுத்துக்
கெடுத்து வைத்திருக்கும் 
நாங்களும் - உத்தமர்களாய்
அவ்வப்போது 
குரல் கொடுத்துக்கொண்டு! 

தாகம்..தாகம்..வெடித்த நிலமும்;
வெட்டிய மரமும்;
கொளுத்தும் வெயிலும்;
பழித்துக் காட்டும்;
அப்போது நம் நாவு 
சப்தமில்லாமல் சரணடைந்து;
பாவமாய் கதறும்;
தாகம் தாகம் என்று!

சேர்த்து வைக்காத 
மழை நீரும்;
வளர்க்க மறந்த 
மரமும்;
நமுட்டுச் சிரிப்போடு; 
நம் விக்கலைக் கண்டு!

தண்ணீர் என்று 
புத்தகத்தில் மட்டும் 
தடவிப் பார்க்கும் 
காலம் வருமுன்னே;
சுதாரித்து விடு;
இல்லையேல்;
ஒருக் குவளை நீருக்காக 
உலகம் யுத்தம் காணும்
காட்சியைக் கண்முன்னே 
ஓட விடு!


வெடித்த நிலமும்;
வெட்டிய மரமும்;
கொளுத்தும் வெயிலும்;
பழித்துக் காட்டும்;
அப்போது நம் நாவு 
சப்தமில்லாமல் சரணடைந்து;
பாவமாய் கதறும்;
தாகம் தாகம் என்று!

சேர்த்து வைக்காத 
மழை நீரும்;
வளர்க்க மறந்த 
மரமும்;
நமுட்டுச் சிரிப்போடு; 
நம் விக்கலைக் கண்டு!

தண்ணீர் என்று 
புத்தகத்தில் மட்டும் 
தடவிப் பார்க்கும் 
காலம் வருமுன்னே;
சுதாரித்து விடு;
இல்லையேல்;
ஒருக் குவளை நீருக்காக 
உலகம் யுத்தம் காணும்
காட்சியைக் கண்முன்னே 
ஓட விடு!

பிறந்து இறந்த நான்ரணமாகும் அந்நியத் தேசத்து 
வாழ்க்கையில் - நீயும் நானும் 
மனம் வீச அப்பாவோடு!

கருவில் குட்டிக்கரணமிட்டு
முட்டிச் செல்லமாய்;
மெல்ல மெல்ல
உனை மகிழ்ச்சியில் தள்ள;
களிப்பில் உன் முகம் 
வெளுப்பாய்!

பாசம் மிகுந்த உனை;
பார்க்கத் துடித்து;
எனக்கு வழிக் கொடுக்கும் 
உன் வழியில் - நீயோ வலியில்!

அழு மூஞ்சியாய் வந்த எனை 
ஆனந்தமாய்  அணைத்தப்படி நீ ;
அரவணைப்பின் உச்சப்படியில் நான் ;

மூச்சி முட்டும்
உன் அன்பில் ;
மூச்சித் திணறி நான்;
ஒரு மணி நேரமே 
உன்னோடு உறவாடியக் 
களிப்போடுக் காலமாகிறேன்!
காரணம் நீ இல்லையம்மா 
எனும் வாக்குமூலத்தோடு!

கவிதைக்குக் கருக்கொடுத்தவர்: 
திருமதி சுதா (அமீரகம்)


ரணமாகும் அந்நியத் தேசத்து 
வாழ்க்கையில் - நீயும் நானும் 
மனம் வீச அப்பாவோடு!

கருவில் குட்டிக்கரணமிட்டு
முட்டிச் செல்லமாய்;
மெல்ல மெல்ல
உனை மகிழ்ச்சியில் தள்ள;
களிப்பில் உன் முகம் 
வெளுப்பாய்!

பாசம் மிகுந்த உனை;
பார்க்கத் துடித்து;
எனக்கு வழிக் கொடுக்கும் 
உன் வழியில் - நீயோ வலியில்!

அழு மூஞ்சியாய் வந்த எனை 
ஆனந்தமாய்  அணைத்தப்படி நீ ;
அரவணைப்பின் உச்சப்படியில் நான் ;

மூச்சி முட்டும்
உன் அன்பில் ;
மூச்சித் திணறி நான்;
ஒரு மணி நேரமே 
உன்னோடு உறவாடியக் 
களிப்போடுக் காலமாகிறேன்!
காரணம் நீ இல்லையம்மா 
எனும் வாக்குமூலத்தோடு!

கவிதைக்குக் கருக்கொடுத்தவர்: 
திருமதி சுதா (அமீரகம்)

விலைவாசிஅன்றாடத் தேவைகள்
திண்டாட்டமாய்;
அரசு சாதனையெனக்
கொண்டாட்டமாய்;
எரிபொருளின் விலையால்
வயிறுப் பத்தி எரிய;
பத்தி எரிய வேண்டிய
எரிவாயு உருளைக்கோ 
குடும்பக்கட்டுப்பாடு!

ரூபாய் நோட்டு 
அதிகப் புலக்கம் கொண்டதால்
புழுக்கம் கொண்ட விலைவாசி;
பாமரனுக்கும் பவ்வியமாய்
மனதில் பதியவைக்கும் அரசின்
புது முயற்சியோ;
பரவாயில்லை காட்டுவாசி!

கூட்டம் முட்டும் 
பேருந்தின் சீட்டு விலை
மட்டும் மூச்சு முட்ட;
படி உடைந்து;பல் இளித்து 
என் ஊர் பேருந்து
இன்னும் அப்படியே!


அன்றாடத் தேவைகள்
திண்டாட்டமாய்;
அரசு சாதனையெனக்
கொண்டாட்டமாய்;
எரிபொருளின் விலையால்
வயிறுப் பத்தி எரிய;
பத்தி எரிய வேண்டிய
எரிவாயு உருளைக்கோ 
குடும்பக்கட்டுப்பாடு!

ரூபாய் நோட்டு 
அதிகப் புலக்கம் கொண்டதால்
புழுக்கம் கொண்ட விலைவாசி;
பாமரனுக்கும் பவ்வியமாய்
மனதில் பதியவைக்கும் அரசின்
புது முயற்சியோ;
பரவாயில்லை காட்டுவாசி!

கூட்டம் முட்டும் 
பேருந்தின் சீட்டு விலை
மட்டும் மூச்சு முட்ட;
படி உடைந்து;பல் இளித்து 
என் ஊர் பேருந்து
இன்னும் அப்படியே!