கொடூரமாய் கொலையுண்டு
இன்னொருமுறை
மண்ணிற்கு உரமாகியச்
சமூகம்!
குருதியை முத்தமிடாத பூமி
உலக வரைபடத்தில்
மிச்சமேதுமில்லை;
குரல் கொடுக்க எவருமில்லை!
ஊடகம் ஊமையானது ஏனோ;
எங்கள் உயிர்கள் மட்டும்
உங்களுக்கு ஈனமானது ஏனோ;
உலக நாடுகள்
அமைதிக் காப்பது ஏனோ;
கொடூரமாய் இறக்கும்
எங்களுக்கு இது
அமைதி அஞ்சலி தானோ!
//ஊடகம் ஊமையானது ஏனோ;
ReplyDeleteஎங்கள் உயிர்கள் மட்டும்
உங்களுக்கு ஈனமானது ஏனோ;//
சாட்டையடி கேள்விகள் இவை
உள்ளே கொதிக்கும் ஆற்றாமைகளை முழுவதமாய் கொட்டினால் படிப்பவருக்கு அலுப்பைத் தந்துவிடும் என்ற அச்சத்தினாலே கொஞ்சமாய் பதிவிட்டுள்ளேன். அவர் அவர் இனத்திற்கும் , மொழிக்கும்,தொப்புள் கொடி உறவு என்று பேசி மேடைகளில் முழங்கும் மனித நேயங்கள் மனிதன் என்ற அடிப்படையில் நம்மவர்களை கண்டுக்கொள்வதே இல்லை.
ReplyDeleteunmai sakotharaa!?
ReplyDeleteulakam oomaithaan-
nam samookamo aayiram pilavukalilthaan!
kodumai !
இந்த நிலை எப்போது மாறுமோ....?
ReplyDeleteவேதனை தரும் வரிகள்.....
சீனி உங்களின் கவலைக்கும் என்னுடைய கவலைக்கும் நம்முடைய கவலைக்கும் இன்ஷா அல்லாஹ் என்றாவது ஒர் நாள் விடிவு கிடைக்கும்.
ReplyDeleteதனபாலன் அவர்களுக்கு, வேதனைகளை உள்ளுக்குள்ளே வைத்துக்கொள்ளாமல் என்னோடு பகிர்ந்துக்கொண்டதற்கு மனமார்ந்த நன்றி.
ReplyDeleteகொலைக்களமான பூமி! வேதனையும் கண்ணீரும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்! விரைவில் இதற்கு தீர்வு வர இறைவன் அருள் வேண்டி!
ReplyDeleteசுரேஷ் அவர்களுக்கு- உங்களின் எண்ணத்தில் நெகிழ்ந்தேன்.
ReplyDeleteSALAAM,
ReplyDeleteஅன்பான வேண்டுகோள்:இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே இப்பதிவை(பைத்துல்மால்-திருவாளப்புத்தூர்-அழகிய முன்மாதிரி ஊர்) அவசியம் படித்து நமது சமுதாயத்திற்கு உதவுங்கள்,அல்லாஹ் உங்களுக்கு உதவுவானாக.
Read more: http://tvpmuslim.blogspot.com/2012/07/baitul-maal-thiruvalaputhur-A-beautiful-model.html