ஓயாத ஊழல்அஸ்திவாரத்தின் 
அடியில் இருந்து 
ஒத்த ஒத்த செங்கல்லையும் 
உருவி எடுக்கும் ஊழலில்
பணியாட்களாக
அரசியல்வாதிகள்!

ஊழலோடு ஒட்டிப்பிறந்த
இரட்டைக் குழந்தையாக;
ஓட்டுக்கு மட்டும் 
கைகள் ஒட்டிக்கொண்டு;
வெற்றிக்குப் பின் 
வெறித்தப்படி வெளியில் 
அவர்களின் வருகைக்காக 
நாங்கள்!

பெருத்துவிட்ட ஊழலில் 
கருத்து நிற்கும் எங்கள் முகம்;
கருத்துச் சொல்ல;
எடுத்துச் சொன்னாலும் 
கறுப்புப் பணம் கேட்கும் 
ஆட்சி அதிகாரம்!

கொடுத்துக் கொடுத்துக்
கெடுத்து வைத்திருக்கும் 
நாங்களும் - உத்தமர்களாய்
அவ்வப்போது 
குரல் கொடுத்துக்கொண்டு! 


அஸ்திவாரத்தின் 
அடியில் இருந்து 
ஒத்த ஒத்த செங்கல்லையும் 
உருவி எடுக்கும் ஊழலில்
பணியாட்களாக
அரசியல்வாதிகள்!

ஊழலோடு ஒட்டிப்பிறந்த
இரட்டைக் குழந்தையாக;
ஓட்டுக்கு மட்டும் 
கைகள் ஒட்டிக்கொண்டு;
வெற்றிக்குப் பின் 
வெறித்தப்படி வெளியில் 
அவர்களின் வருகைக்காக 
நாங்கள்!

பெருத்துவிட்ட ஊழலில் 
கருத்து நிற்கும் எங்கள் முகம்;
கருத்துச் சொல்ல;
எடுத்துச் சொன்னாலும் 
கறுப்புப் பணம் கேட்கும் 
ஆட்சி அதிகாரம்!

கொடுத்துக் கொடுத்துக்
கெடுத்து வைத்திருக்கும் 
நாங்களும் - உத்தமர்களாய்
அவ்வப்போது 
குரல் கொடுத்துக்கொண்டு! 

4 comments:

 1. வாழ்த்துக்கள் தெரிவித்த சீனி அவர்களுக்கும் தனபாலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 2. salam,
  //பெருத்துவிட்ட ஊழலில்
  கருத்து நிற்கும் எங்கள் முகம்;
  கருத்துச் சொல்ல;
  எடுத்துச் சொன்னாலும்
  கறுப்புப் பணம் கேட்கும்
  ஆட்சி அதிகாரம்!//நல்ல வரிகள்.

  பொறுப்புள்ள ஒவ்வொரு தமிழனும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு..

  புதிய வரவுகள்: வெற்றி....வெற்றி....வெற்றி....!!
  ....www.tvpmuslim.blogspot.com

  ReplyDelete