இனிய ரமலானேதளர்ந்தத்  தசைகளும்
சிலிர்த்து நிற்கும்;
வறண்ட விழிகளும் 
நனைந்துப் போகும்;
பொன்னான மாதம் 
எனைப் போர்த்தியப்படி!

மணக்கும் இறைவேதமும்
என் மடியில்;
ஒளிரும் என் நெற்றியும்
தரையில்;
ஒளித்த செல்வங்கள்
தர்மத்திற்காக வெளியில்;
நன்மையை நோக்கி
என்  வயிறுப் பசியில்!

ஏக்கத்துடன்;
நன்மையைப் பெரும் 
நோக்கத்துடன்,
பாவமன்னிப்பிற்கானத்
தேட்டத்துடன்;
வல்லோனின் அருளுக்காக
வாட்டத்துடன் என் முகம்!

வளம் நிறைந்த ரமலானே 
உனை வீணடிப்பேனோ;
அடுத்த வருடம் உனையடைய 
நான் இருப்பேனோ!


தளர்ந்தத்  தசைகளும்
சிலிர்த்து நிற்கும்;
வறண்ட விழிகளும் 
நனைந்துப் போகும்;
பொன்னான மாதம் 
எனைப் போர்த்தியப்படி!

மணக்கும் இறைவேதமும்
என் மடியில்;
ஒளிரும் என் நெற்றியும்
தரையில்;
ஒளித்த செல்வங்கள்
தர்மத்திற்காக வெளியில்;
நன்மையை நோக்கி
என்  வயிறுப் பசியில்!

ஏக்கத்துடன்;
நன்மையைப் பெரும் 
நோக்கத்துடன்,
பாவமன்னிப்பிற்கானத்
தேட்டத்துடன்;
வல்லோனின் அருளுக்காக
வாட்டத்துடன் என் முகம்!

வளம் நிறைந்த ரமலானே 
உனை வீணடிப்பேனோ;
அடுத்த வருடம் உனையடைய 
நான் இருப்பேனோ!

6 comments:

 1. புனித ரமளானில் பாவங்களில் இருந்து மீண்டு நன்மைகளை அதிகமதிகம் செய்யும் நல் வாய்ப்பினை உங்களுக்கும் எனக்கும் அந்த அல்லாஹ் தந்தருளுவானாக-ஆமீன்

  புதிய வரவு: குடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியுமா?
  www.tvpmuslim.blogspot.com

  ReplyDelete
 2. நல்ல வரிகள்... ரமலான் வாழ்த்துக்கள்...
  நன்றி...

  ReplyDelete
 3. வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி திரு தனபாலன் அவர்களே.

  ReplyDelete
 4. வரிகளை வாழ்த்துக்களாக்கி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சீனி அவர்களே.

  ReplyDelete