வெடித்த நிலமும்;
வெட்டிய மரமும்;
கொளுத்தும் வெயிலும்;
பழித்துக் காட்டும்;
அப்போது நம் நாவு
சப்தமில்லாமல் சரணடைந்து;
பாவமாய் கதறும்;
தாகம் தாகம் என்று!
சேர்த்து வைக்காத
மழை நீரும்;
வளர்க்க மறந்த
மரமும்;
நமுட்டுச் சிரிப்போடு;
நம் விக்கலைக் கண்டு!
தண்ணீர் என்று
புத்தகத்தில் மட்டும்
தடவிப் பார்க்கும்
காலம் வருமுன்னே;
சுதாரித்து விடு;
இல்லையேல்;
ஒருக் குவளை நீருக்காக
உலகம் யுத்தம் காணும்
காட்சியைக் கண்முன்னே
ஓட விடு!
சேர்த்து வைக்காத
ReplyDeleteமழை நீரும்;
வளர்க்க மறந்த
மரமும்;
நமுட்டுச் சிரிப்போடு;
நம் விக்கலைக் கண்டு!//
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உண்மைதான்! நீர் மேலாண்மை நம்மிடமில்லை!அருமையான கவிதை!வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆரோக்கியமானக் கருத்திட்டமையிற்கு திரு ரமணி அவர்களுக்கும் திரு சுரேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteunmaithaan!
ReplyDeletepadamum -
kavithaiyum arumai!
நல்லதொரு பகிர்வு... கருத்துள்ள வரிகள்... தொடர வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி !
ReplyDeleteSALAM,
ReplyDeleteஎனக்கு இப்போ தாகம் அடிக்குது
புதிய வரவுகள்:
வட்டியை தடுக்க 1st இத செய்யுங்க (வட்டியை ஒழிக்க முதல் அடி எடுத்துவைத்துளோம்),ரமலானே வருக -50வது பதிவு
*திருவாளப்புத்தூரில் பைத்துல்மால் அறிமுக பொதுக் கூட்டம்(பதிவை படிக்கவும்),ஊர்வாசிகளுக்கு தெரிவித்து பைத்துல்மாலுக்கு உதவுங்கள்...
உங்கள் கருத்தையும்,ஆலோசனையும் எதிர்நோக்கும் உங்கள் சகோ.