இஸ்லாமியச் சட்டம்


மாற்றுச் சட்டங்கள்
ஏமாற்றும் உலகை;
கற்பழித்தாலும்
கரம்காட்டிச் சிரிப்பான்;
என்னக் கொடுமை!

ஓட்டையுள்ளச் சட்டம்
ஒழிக்காதுத் தீமை;
தடுக்க நினைத்தாலும்
போகும் வேகம் ஆமை!

குறையில்லாத
மறைத் தந்த வேதம்;
இல்லாதச் சட்டமில்லை;
வெல்லாத நீதியில்லை!

எட்டுத்திக்கும் ஒலிக்கும்
ஒயாத நேர்மை;
எல்லோரையும் ஒன்றாகக் காணும்
இஸ்லாமியப் பார்வை!

இரும்பாய் தோணும்
சட்டங்கள் கயவனுக்கு;
கடுமையானச் சட்டங்கள்
முகம் சிரிக்கும் நல்லவனுக்கு!

கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல்;
கயமைக்குக் கொடுமை;
நேர்மைக்கு இனிமை!

கிடைக்கும் நேரம்
படித்திடுங்கள் மறைவேதம்;
சவால் விட்டுச்சொல்லும்
கண்டுபிடியுங்கள் குறையேதும்!

மாற்றுச் சட்டங்கள்
ஏமாற்றும் உலகை;
கற்பழித்தாலும்
கரம்காட்டிச் சிரிப்பான்;
என்னக் கொடுமை!

ஓட்டையுள்ளச் சட்டம்
ஒழிக்காதுத் தீமை;
தடுக்க நினைத்தாலும்
போகும் வேகம் ஆமை!

குறையில்லாத
மறைத் தந்த வேதம்;
இல்லாதச் சட்டமில்லை;
வெல்லாத நீதியில்லை!

எட்டுத்திக்கும் ஒலிக்கும்
ஒயாத நேர்மை;
எல்லோரையும் ஒன்றாகக் காணும்
இஸ்லாமியப் பார்வை!

இரும்பாய் தோணும்
சட்டங்கள் கயவனுக்கு;
கடுமையானச் சட்டங்கள்
முகம் சிரிக்கும் நல்லவனுக்கு!

கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல்;
கயமைக்குக் கொடுமை;
நேர்மைக்கு இனிமை!

கிடைக்கும் நேரம்
படித்திடுங்கள் மறைவேதம்;
சவால் விட்டுச்சொல்லும்
கண்டுபிடியுங்கள் குறையேதும்!

புகை..

 

புகை நமக்குப்
பகை என்றுப்
படம் போட்டாலும்
பணம் கொடுத்துப்
பயணத்திற்கு ஏற்பாடு
சொந்த செலவில்!

ஆண்மைக்கு விலைவைத்து
அடிநுனியில் பற்றவைத்து;
உள்ளே இழுத்ததால்
உறவுகளுக்கு மூச்சி முட்டும்;
மரணம் கதவைத் தட்டும்!


வெறுக்கும் துர்நாற்றம்
கறுக்கும் மனைவியின் முகம்;
கொடுக்கும் கிழட்டுத் தோற்றம்!

இதயத்திற்கு கனம் கொடுக்கும்;
முற்றிவிட்டால் மண்ணோ
இடம் கொடுக்கும்!

சிறிதுச் சிறிதாய் அழிக்கும் சிகரெட்;
குடும்பத்தைக் கொளுத்தும் சீக்ரெட்!
உடனேச் செய்யுங்கள் ரிக்ரெட்;
இல்லையென்றால் உன் வாழ்விற்கு வெக்கெட்!

புகை நமக்குப்
பகை என்றுப்
படம் போட்டாலும்
பணம் கொடுத்துப்
பயணத்திற்கு ஏற்பாடு
சொந்த செலவில்!

ஆண்மைக்கு விலைவைத்து
அடிநுனியில் பற்றவைத்து;
உள்ளே இழுத்ததால்
உறவுகளுக்கு மூச்சி முட்டும்;
மரணம் கதவைத் தட்டும்!


வெறுக்கும் துர்நாற்றம்
கறுக்கும் மனைவியின் முகம்;
கொடுக்கும் கிழட்டுத் தோற்றம்!

இதயத்திற்கு கனம் கொடுக்கும்;
முற்றிவிட்டால் மண்ணோ
இடம் கொடுக்கும்!

சிறிதுச் சிறிதாய் அழிக்கும் சிகரெட்;
குடும்பத்தைக் கொளுத்தும் சீக்ரெட்!
உடனேச் செய்யுங்கள் ரிக்ரெட்;
இல்லையென்றால் உன் வாழ்விற்கு வெக்கெட்!

தொலைக்காட்சிப் பெட்டி..விலைக்கொடுத்து
விஷச்செடியை
நடுவீட்டில் நட்டுவைத்து;
காசுக்கொடுத்து
கண்ணைக் கசக்கும்
குடும்பப் பெண்கள்!

உணவுப் பரிமாற்றம்
செய்தி வேளையில்;
பிள்ளைகள் முகத்தைக்
காண்பது இடைவெளியில்!

கவர்ச்சிக்குக் கண்ணை
மூடியக் காலங்கள் காலமாகி;
ஆபாசத்தைக் குடும்பத்தோடுக்
கண்டுக்களிக்கும் சின்ன வாண்டுகள்!

மென்று விழுங்கும்
கலாச்சாரத்தை அரங்கேற்றி;
அனாச்சாரத்தை அமுலாக்கும்;
புன்னகைத்துப் புண்ணாக்கும்
வண்ணத் தொலைக்காட்சி!

பெட்டிக்குள் கட்டிப்போட்டு
உறக்கத்திற்குப் பிறகும்
ஓடுகாலியாக;
உங்கள் வீட்டிலும்
என் வீட்டிலும்!


விலைக்கொடுத்து
விஷச்செடியை
நடுவீட்டில் நட்டுவைத்து;
காசுக்கொடுத்து
கண்ணைக் கசக்கும்
குடும்பப் பெண்கள்!

உணவுப் பரிமாற்றம்
செய்தி வேளையில்;
பிள்ளைகள் முகத்தைக்
காண்பது இடைவெளியில்!

கவர்ச்சிக்குக் கண்ணை
மூடியக் காலங்கள் காலமாகி;
ஆபாசத்தைக் குடும்பத்தோடுக்
கண்டுக்களிக்கும் சின்ன வாண்டுகள்!

மென்று விழுங்கும்
கலாச்சாரத்தை அரங்கேற்றி;
அனாச்சாரத்தை அமுலாக்கும்;
புன்னகைத்துப் புண்ணாக்கும்
வண்ணத் தொலைக்காட்சி!

பெட்டிக்குள் கட்டிப்போட்டு
உறக்கத்திற்குப் பிறகும்
ஓடுகாலியாக;
உங்கள் வீட்டிலும்
என் வீட்டிலும்!

எங்கே வெட்கம்..


இருக்க வேண்டிய அழகை
மறக்கடித்த மனிதர்கள்;
வளர்ந்துவரும் சமூகத்தில்
இறந்துப்போன வெட்கம்!

வெட்கத்தை ஒழிக்க
மாற்றுப் பெயரிட்டப்
பூச்சிக்கொல்லி மருந்துத்
தன்னம்பிக்கை!

வீரம் என நினைத்து
சோரம் போகும் அழகான
வெட்கம்!

கெட்டுப்போன வெட்கத்திற்குப்
பெயர் சூட்டுவிழா நாகரீகம்;
குட்டுப்பட்டு முகம்
சுளித்தாலும் தீராத மோகம்!

உறவினரிடம் மட்டும்
ஓடி ஒளிந்துக்கொண்டு
மாற்றாரிடம் முகம் திறக்கும்;
அகம் கொல்லும் விஷம்
எனப் புரியாதப் பாவைகள்!

மலறும் வயதில் தூவும்
விதைகள் மனம் விட்டுச் செல்லாது;
பூப்பெய்தப்பின் நம்மைக் கொல்லாது!

இருக்க வேண்டிய அழகை
மறக்கடித்த மனிதர்கள்;
வளர்ந்துவரும் சமூகத்தில்
இறந்துப்போன வெட்கம்!

வெட்கத்தை ஒழிக்க
மாற்றுப் பெயரிட்டப்
பூச்சிக்கொல்லி மருந்துத்
தன்னம்பிக்கை!

வீரம் என நினைத்து
சோரம் போகும் அழகான
வெட்கம்!

கெட்டுப்போன வெட்கத்திற்குப்
பெயர் சூட்டுவிழா நாகரீகம்;
குட்டுப்பட்டு முகம்
சுளித்தாலும் தீராத மோகம்!

உறவினரிடம் மட்டும்
ஓடி ஒளிந்துக்கொண்டு
மாற்றாரிடம் முகம் திறக்கும்;
அகம் கொல்லும் விஷம்
எனப் புரியாதப் பாவைகள்!

மலறும் வயதில் தூவும்
விதைகள் மனம் விட்டுச் செல்லாது;
பூப்பெய்தப்பின் நம்மைக் கொல்லாது!

தூக்கம் விற்ற திர்ஹம்ஸ்..கற்றதை விற்கக்
கடவுச் சீட்டுக்
கரத்தில்;
மிரட்சியில் விழிகள்;
மிரண்டது
விசாவா இல்லை
வெளியேற முடியா
மிசாவா!

முட்டியக் கண்ணீரால்
சொந்தங்களை
முகர்ந்துவிட்டு
விட்டுச் செல்கிறேன்
எல்லாவற்றையும்
எடுத்துக் கொண்டு
இதயத்தைப் பிடித்துக் கொண்டு!

கட்டிய மனைவி
கண்ணீருடன்;
ஆறுதல் சொல்ல
அருகில் சென்று
அழுதுவிட்டு நானும் வருவேன்!

உறவுகள் வாசலில்
முகாமிட;
பொங்கி வரும்
அழுகையைக்
கைக்குட்டைக்குச்
சமர்பிக்க!

கட்டி உருண்ட
நண்பர்களோ
கட்டிப்பிடித்து
என் சட்டையை நனைக்க!

கை அசைத்து
காருக்குள் நான்;
கனத்துப் போய்
வெறுத்துப் போய்;
எரியும் இமைகளை
இறுக்க மூடி;
மிச்சமுள்ளக் கண்ணீரையும்
கரைச்சேர்ப்பேன்!

உதடுத் தொட்டு
முத்தங்களை
கைப்பேசிக்குக் கொடுக்க
குதுகலிக்கும் குடும்பம்!

நகமும் சதையுமான
நண்பர்கள் நகர்ந்து
ஆளுக்கொருத் தேசத்தில்!

மச்சான் மாப்பிளே
குரல் போய்;
விரல் தொடும்
இயந்திர வாழ்க்கையில்
இணையத்தில்!

அழும் குழந்தையின் குரலை
ஆடியோவில் கேட்க;
புகைப்படம் கண்டு
பொருத்தம் பார்ப்போம்
அம்மா ஜாடையா
அத்தா ஜாடையா!

அழுது அழுது
மரத்துப்போனதால்
மறைத்துவிடுவேன்
மனைவியிடமிருந்து!

மாறி மாறி
மெய் மறைத்து;
பொய்யுறைப்போம்;
சந்தோஷம் என்று!

வலிக்கொடுக்கும்
வளைகுடாவில்
விழிப்பிதிங்கி
வழியில்லாமல்;
தூக்கம் தொலைத்து
துக்கம் அடைத்து;
திரைக் கடல் தாண்டி
திர்ஹம்ஸிர்க்காக!


கற்றதை விற்கக்
கடவுச் சீட்டுக்
கரத்தில்;
மிரட்சியில் விழிகள்;
மிரண்டது
விசாவா இல்லை
வெளியேற முடியா
மிசாவா!

முட்டியக் கண்ணீரால்
சொந்தங்களை
முகர்ந்துவிட்டு
விட்டுச் செல்கிறேன்
எல்லாவற்றையும்
எடுத்துக் கொண்டு
இதயத்தைப் பிடித்துக் கொண்டு!

கட்டிய மனைவி
கண்ணீருடன்;
ஆறுதல் சொல்ல
அருகில் சென்று
அழுதுவிட்டு நானும் வருவேன்!

உறவுகள் வாசலில்
முகாமிட;
பொங்கி வரும்
அழுகையைக்
கைக்குட்டைக்குச்
சமர்பிக்க!

கட்டி உருண்ட
நண்பர்களோ
கட்டிப்பிடித்து
என் சட்டையை நனைக்க!

கை அசைத்து
காருக்குள் நான்;
கனத்துப் போய்
வெறுத்துப் போய்;
எரியும் இமைகளை
இறுக்க மூடி;
மிச்சமுள்ளக் கண்ணீரையும்
கரைச்சேர்ப்பேன்!

உதடுத் தொட்டு
முத்தங்களை
கைப்பேசிக்குக் கொடுக்க
குதுகலிக்கும் குடும்பம்!

நகமும் சதையுமான
நண்பர்கள் நகர்ந்து
ஆளுக்கொருத் தேசத்தில்!

மச்சான் மாப்பிளே
குரல் போய்;
விரல் தொடும்
இயந்திர வாழ்க்கையில்
இணையத்தில்!

அழும் குழந்தையின் குரலை
ஆடியோவில் கேட்க;
புகைப்படம் கண்டு
பொருத்தம் பார்ப்போம்
அம்மா ஜாடையா
அத்தா ஜாடையா!

அழுது அழுது
மரத்துப்போனதால்
மறைத்துவிடுவேன்
மனைவியிடமிருந்து!

மாறி மாறி
மெய் மறைத்து;
பொய்யுறைப்போம்;
சந்தோஷம் என்று!

வலிக்கொடுக்கும்
வளைகுடாவில்
விழிப்பிதிங்கி
வழியில்லாமல்;
தூக்கம் தொலைத்து
துக்கம் அடைத்து;
திரைக் கடல் தாண்டி
திர்ஹம்ஸிர்க்காக!

திரும்பாதப் பக்கங்கள்திரும்பாதப் பக்கங்கள்;
முடித்துவிட எத்தனித்து
முற்றுப்புள்ளி வைத்து;
தொடர்கதையானக்
கறுப்புச் சரித்திரங்கள்!

விளையும் கதிரை
அறுவடைச் செய்து;
மவுனமாய் அஞ்சலி
மட்டும் செலுத்திவிட்டு;
மரணித்துப்போகும்
மனித நேயங்கள்!

பெட்டிற்குள் வைத்து
மண்ணிற்குள் புதைக்கும்
மொட்டுகள் விதைகளா
இல்லை தொடர்கதைகளா!

வாய்விட்டுக் கதறும்
உணர்ச்சிப்பெருக்கிற்கு
வாயடைத்துப் போகும்
வரலாறுகள்!

கொன்றவன் கொடியவன்;
தடுக்காமல் குரல் கொடுக்காமல்
உலக நாடுகளின்
மயான அமைதி அதனினும்
கொடியது!


திரும்பாதப் பக்கங்கள்;
முடித்துவிட எத்தனித்து
முற்றுப்புள்ளி வைத்து;
தொடர்கதையானக்
கறுப்புச் சரித்திரங்கள்!

விளையும் கதிரை
அறுவடைச் செய்து;
மவுனமாய் அஞ்சலி
மட்டும் செலுத்திவிட்டு;
மரணித்துப்போகும்
மனித நேயங்கள்!

பெட்டிற்குள் வைத்து
மண்ணிற்குள் புதைக்கும்
மொட்டுகள் விதைகளா
இல்லை தொடர்கதைகளா!

வாய்விட்டுக் கதறும்
உணர்ச்சிப்பெருக்கிற்கு
வாயடைத்துப் போகும்
வரலாறுகள்!

கொன்றவன் கொடியவன்;
தடுக்காமல் குரல் கொடுக்காமல்
உலக நாடுகளின்
மயான அமைதி அதனினும்
கொடியது!

உனக்காக..
துரோகங்கள் ஏதுமில்லாத்
தியாகி உன் அன்னை
கதறி அழுதாள்
கைப்பேசியில்!

விற்றுவிட்டதாய் சொல்லி;
விட்டு வர மறுக்கிறாயா
விடுதியை விட்டு!

உறவுகளைப் பூட்டி
உணர்வுகளை வாட்டி;
கறுத்த என் தோலின்
வெள்ளை வியர்வையை
அந்நிய நாட்டில் தெளித்து
உழைக்கிறதின் நோக்கம்
தெரியுமா உனக்கு!

ஏறாதக் கல்வியால்
என்னை ஏற்றிவிட்டனர்
மாற்றான் தேசத்திற்கு;
உழைப்பாளி என்றாலும்
உபயோகமில்லாச் சம்பளம்;!

கணநேரம் யோசித்து
கனமாக்கி மனதை;
எங்களை உரமாக்கி
உன்னை உருவாக்க
விட்டு வந்தோம்
விடுதியில்!

கற்காதக் கல்வியைக்
கற்பிக்கத் தெரியாது
உன்னிடத்தில்;
விடுதியில் விட்டாலும்
பரவாயில்லை ஒளிருவாய்
எதிர்காலத்தில்!துரோகங்கள் ஏதுமில்லாத்
தியாகி உன் அன்னை
கதறி அழுதாள்
கைப்பேசியில்!

விற்றுவிட்டதாய் சொல்லி;
விட்டு வர மறுக்கிறாயா
விடுதியை விட்டு!

உறவுகளைப் பூட்டி
உணர்வுகளை வாட்டி;
கறுத்த என் தோலின்
வெள்ளை வியர்வையை
அந்நிய நாட்டில் தெளித்து
உழைக்கிறதின் நோக்கம்
தெரியுமா உனக்கு!

ஏறாதக் கல்வியால்
என்னை ஏற்றிவிட்டனர்
மாற்றான் தேசத்திற்கு;
உழைப்பாளி என்றாலும்
உபயோகமில்லாச் சம்பளம்;!

கணநேரம் யோசித்து
கனமாக்கி மனதை;
எங்களை உரமாக்கி
உன்னை உருவாக்க
விட்டு வந்தோம்
விடுதியில்!

கற்காதக் கல்வியைக்
கற்பிக்கத் தெரியாது
உன்னிடத்தில்;
விடுதியில் விட்டாலும்
பரவாயில்லை ஒளிருவாய்
எதிர்காலத்தில்!

ஓயாமல் ஒலிக்கும்தடம் மாறி
தடுமாறி
மனம் மாறி
இடம் மாறி
வலுவிழந்துப்
பாலையில் நான்!

உன்னை நினைத்து
இதயம் கனத்து
உன் நினைவுகள் மறித்து
தூக்கம் மறுத்து;
இருளும் வெளுத்தது!

ஏக்கம் கொண்டு
வாட்டம் கொண்டு
உன் நினைவைக் கொண்டு
நெடுநாளாய் நானிங்கே!

வரமாட்டேன்
வளைகுடாவிற்கு எனத்
தேசம் சென்றாலும்;
பாசத்திற்காகப் பைசா
எடுக்கச் சுவற்றில் அடித்தப்
பந்தாய் பந்தாவாக
மீண்டும் நான்!

சலித்துப் போனச்
சவால்களால் களைத்துப்போன
நண்பர்கள்!

உள்மனது மட்டும்
ஓயாமல் ஒலிக்கும்
என்றாவது ஒரு நாள்
திரும்பாது என் பாதம்
விரும்பாத வளைகுடாவிற்கு!தடம் மாறி
தடுமாறி
மனம் மாறி
இடம் மாறி
வலுவிழந்துப்
பாலையில் நான்!

உன்னை நினைத்து
இதயம் கனத்து
உன் நினைவுகள் மறித்து
தூக்கம் மறுத்து;
இருளும் வெளுத்தது!

ஏக்கம் கொண்டு
வாட்டம் கொண்டு
உன் நினைவைக் கொண்டு
நெடுநாளாய் நானிங்கே!

வரமாட்டேன்
வளைகுடாவிற்கு எனத்
தேசம் சென்றாலும்;
பாசத்திற்காகப் பைசா
எடுக்கச் சுவற்றில் அடித்தப்
பந்தாய் பந்தாவாக
மீண்டும் நான்!

சலித்துப் போனச்
சவால்களால் களைத்துப்போன
நண்பர்கள்!

உள்மனது மட்டும்
ஓயாமல் ஒலிக்கும்
என்றாவது ஒரு நாள்
திரும்பாது என் பாதம்
விரும்பாத வளைகுடாவிற்கு!

மூட்டைப் பூச்சிகடன் அரிப்பாலே
கடல் கடந்துப் பாலையில்;
இங்கு வேலையில்;
மூட்டை முடிச்சுடன்!

கனமான நினைவுகளுடன்
கட்டிலில் சாய்ந்தால்
முத்தமிட நம்மை
முட்டித்தள்ளும்
மூட்டைப் பூச்சி!

வெளிச்சம் கண்டு
வெட்கம் கொண்டு
ஒளிந்துக் கொண்டு;
இரவைக்கண்டு
இருளைக் கொண்டு
இடுக்கில் மூட்டை!  

ஒழிப்பதற்கு
விழித்திருந்தாலும்
கடித்துவிட்டுக்
கடுபேற்றிவிட்டுச் செல்லும்!

இரக்கமே இல்லாமல்
இமை மூட மறுக்கும்
உறக்கத்திற்கு;
கட்டித்தழுவும் நேரத்திலே
கொட்டிவிட்டுச் செல்லும்;
குருதியைக் குடித்துவிட்டுச் செல்லும்!


கடன் அரிப்பாலே
கடல் கடந்துப் பாலையில்;
இங்கு வேலையில்;
மூட்டை முடிச்சுடன்!

கனமான நினைவுகளுடன்
கட்டிலில் சாய்ந்தால்
முத்தமிட நம்மை
முட்டித்தள்ளும்
மூட்டைப் பூச்சி!

வெளிச்சம் கண்டு
வெட்கம் கொண்டு
ஒளிந்துக் கொண்டு;
இரவைக்கண்டு
இருளைக் கொண்டு
இடுக்கில் மூட்டை!  

ஒழிப்பதற்கு
விழித்திருந்தாலும்
கடித்துவிட்டுக்
கடுபேற்றிவிட்டுச் செல்லும்!

இரக்கமே இல்லாமல்
இமை மூட மறுக்கும்
உறக்கத்திற்கு;
கட்டித்தழுவும் நேரத்திலே
கொட்டிவிட்டுச் செல்லும்;
குருதியைக் குடித்துவிட்டுச் செல்லும்!

ஹாஸ்டலில் இருந்து...உன்னைக் கட்டிப்பிடிக்கும்
காலங்களில் விடுதியில்
விட்டுச்சென்றாய்- என்னைப்
படிப்புக்காக விற்றுச்சென்றாய்!

என் கால்கள் இரண்டும்
உனக்காக முண்ட;
கத்தி அழுதேன் நீயோ
உன் காதை பொத்திச்சென்றாய்;
விழியால் கதறிச் சென்றாய்!

இருள் சூழ்ந்த இரவில் உன்
அணைப்பிற்கு ஏங்கி அழுவேன்;
உன்னால் தலைக்கோதி
இமைமூட வேண்டிய என்னை;
கம்புடன் கண்ணை மூடச்சொல்லும்
விடுதி ஊழியன்!

அழுது அழுது
அழுத்துப்போன;
கனத்துப்போன மனம் - இனி
விடுப்பேக் கிடைத்தாலும்
விருப்பமில்லை
வீட்டிற்க்குச் செல்ல!

பழகிப்போனப் பிரிவோ
எனக்கு மரத்துவிட்டது;
உங்களைக் காணத் தடுத்துவிட்டது!

விண்ணப்பம் என்று
ஒன்றுமில்லை;
விருப்பமிருந்தால செய்யுங்கள்
அனுப்பி விடாதீர்கள் தம்பியையும்
பள்ளி விடுதிக்கு!


உன்னைக் கட்டிப்பிடிக்கும்
காலங்களில் விடுதியில்
விட்டுச்சென்றாய்- என்னைப்
படிப்புக்காக விற்றுச்சென்றாய்!

என் கால்கள் இரண்டும்
உனக்காக முண்ட;
கத்தி அழுதேன் நீயோ
உன் காதை பொத்திச்சென்றாய்;
விழியால் கதறிச் சென்றாய்!

இருள் சூழ்ந்த இரவில் உன்
அணைப்பிற்கு ஏங்கி அழுவேன்;
உன்னால் தலைக்கோதி
இமைமூட வேண்டிய என்னை;
கம்புடன் கண்ணை மூடச்சொல்லும்
விடுதி ஊழியன்!

அழுது அழுது
அழுத்துப்போன;
கனத்துப்போன மனம் - இனி
விடுப்பேக் கிடைத்தாலும்
விருப்பமில்லை
வீட்டிற்க்குச் செல்ல!

பழகிப்போனப் பிரிவோ
எனக்கு மரத்துவிட்டது;
உங்களைக் காணத் தடுத்துவிட்டது!

விண்ணப்பம் என்று
ஒன்றுமில்லை;
விருப்பமிருந்தால செய்யுங்கள்
அனுப்பி விடாதீர்கள் தம்பியையும்
பள்ளி விடுதிக்கு!

பிணந்திண்ணிகள்


மண்ணுக்கு
விடைக்கொடுத்த உறவுகள்;
வினாவாக நாங்கள் இன்னும்!

சொந்த நாட்டை மீட்டெடுக்க
கூட்டம் சேர்ந்தால்;
வரலாறு வீரன்
என்றேச் சொல்லும்!

அந்தக் கொள்கையை
அமுல்படுத்தினால் எங்களை
பயங்கரவாதி என்றேச் சொல்லும்!

சுற்றி நின்று
படம் எடுக்கும்
சுரணைக் கெட்ட உலகம்!

வலிக்கொண்டு
ஒலிக்கொடுத்தால்
எங்களை விட்டு விலகும்!

கொன்றுக் குவித்து
மென்றுத் திண்ணும் 
பிணந்திண்ணிகள்
பணம் கொண்டு
படைத்திரட்டும்!

தடுக்க முடியா
தரணியோ "உச்" என்றுப்
பேட்டிக் கொடுக்கும்!

ஈரமில்லா எதிரிகளுக்கு
எங்கள் வீரம் மட்டுமே
மூலதனம்!

மண்ணுக்கு
விடைக்கொடுத்த உறவுகள்;
வினாவாக நாங்கள் இன்னும்!

சொந்த நாட்டை மீட்டெடுக்க
கூட்டம் சேர்ந்தால்;
வரலாறு வீரன்
என்றேச் சொல்லும்!

அந்தக் கொள்கையை
அமுல்படுத்தினால் எங்களை
பயங்கரவாதி என்றேச் சொல்லும்!

சுற்றி நின்று
படம் எடுக்கும்
சுரணைக் கெட்ட உலகம்!

வலிக்கொண்டு
ஒலிக்கொடுத்தால்
எங்களை விட்டு விலகும்!

கொன்றுக் குவித்து
மென்றுத் திண்ணும் 
பிணந்திண்ணிகள்
பணம் கொண்டு
படைத்திரட்டும்!

தடுக்க முடியா
தரணியோ "உச்" என்றுப்
பேட்டிக் கொடுக்கும்!

ஈரமில்லா எதிரிகளுக்கு
எங்கள் வீரம் மட்டுமே
மூலதனம்!

கடைசி நிமிடம்..இமை மூடும் 
விழியால்
இருள் சூழும்!

முடியும் நேரம்
தெரிந்ததும்
முட்டிக் கண்ணீர் திக்கும்;
தொண்டை விக்கித்து நிற்கும்!

உதறிப் போடும்
உடலிலே உயிரும்
ஓடி ஆடும்!

சப்தம் கொடுத்துக் 
கதறிப் பார்த்தாலும்
நிசப்தம் மட்டும்
நிலவும்!

வாழ்ந்தக் காலங்களை 
வழியனுப்பச் சொந்தம்
சிந்தும் கண்ணீர்!

அச்சம் கொடுக்கும்
மரணமோ
அச்சுப் பிசகாமல்
நிற்கும்;

இறுதித் தருணம்
நினைக்கையிலே
இருதயம் கனத்துப் போகும்!

விட்டுப் பிரியும்
உயிரை
விரட்ட முடியாது
எவரும்!


இமை மூடும் 
விழியால்
இருள் சூழும்!

முடியும் நேரம்
தெரிந்ததும்
முட்டிக் கண்ணீர் திக்கும்;
தொண்டை விக்கித்து நிற்கும்!

உதறிப் போடும்
உடலிலே உயிரும்
ஓடி ஆடும்!

சப்தம் கொடுத்துக் 
கதறிப் பார்த்தாலும்
நிசப்தம் மட்டும்
நிலவும்!

வாழ்ந்தக் காலங்களை 
வழியனுப்பச் சொந்தம்
சிந்தும் கண்ணீர்!

அச்சம் கொடுக்கும்
மரணமோ
அச்சுப் பிசகாமல்
நிற்கும்;

இறுதித் தருணம்
நினைக்கையிலே
இருதயம் கனத்துப் போகும்!

விட்டுப் பிரியும்
உயிரை
விரட்ட முடியாது
எவரும்!

அனாதை விடுதி..இறுகிப்போன இதயமும்
சுருங்கிப்போன முகமும்;
காலாற நடைப்போட
கரம் இன்னொரு தோள் தேட!
வயதாகிவிட்டதென பல்
பல் இளிக்க!

கனமாக உள்ளேன் என்று
கண்காணாத் ஆசிரமத்தில்
என்னை இறக்கிவிட்டு
பறக்கத் துடித்தான்
நான் சுமந்தப் பிள்ளை!

அவனைச் சுமந்தக் காலங்கள்
சுகமாய் நினைத்து;
வலியால் விழிக் கக்கும்
நீரையும் துடைத்துவிட்டு
பின் சிரித்துவிட்டு! 

மலர்ந்த நினைவுகள்
இறந்துப் போக ;
வளர்ந்தப் பிள்ளையின்
மனமோ கல்லாகிப் போக!

விம்மிய அழுகையை
விரலில் பொத்திக் கொண்டு;
கம்மியக் குரலில்
மெல்லமாய் அழைத்துவிட்டு
அவனை அணைத்துவிட்டு 
அழுதுவிட்டு சொன்னேன்
"உடம்பைக் கவனிச்சிக்கோ"


இறுகிப்போன இதயமும்
சுருங்கிப்போன முகமும்;
காலாற நடைப்போட
கரம் இன்னொரு தோள் தேட!
வயதாகிவிட்டதென பல்
பல் இளிக்க!

கனமாக உள்ளேன் என்று
கண்காணாத் ஆசிரமத்தில்
என்னை இறக்கிவிட்டு
பறக்கத் துடித்தான்
நான் சுமந்தப் பிள்ளை!

அவனைச் சுமந்தக் காலங்கள்
சுகமாய் நினைத்து;
வலியால் விழிக் கக்கும்
நீரையும் துடைத்துவிட்டு
பின் சிரித்துவிட்டு! 

மலர்ந்த நினைவுகள்
இறந்துப் போக ;
வளர்ந்தப் பிள்ளையின்
மனமோ கல்லாகிப் போக!

விம்மிய அழுகையை
விரலில் பொத்திக் கொண்டு;
கம்மியக் குரலில்
மெல்லமாய் அழைத்துவிட்டு
அவனை அணைத்துவிட்டு 
அழுதுவிட்டு சொன்னேன்
"உடம்பைக் கவனிச்சிக்கோ"

உண்மையான அன்பு..
முகம் இரண்டும்
விலகிச் செல்ல;
முதுகு இரண்டும்
ஒட்டிக் கொள்ள;
கட்டுப்பட்டோம் ஆங்கிலத்திற்கு;
“ஈகோஎன்ற ஒர் எழுத்துக்கு!

துண்டுப்பட்ட மனம் மட்டும்
விம்மி விம்மிக் கதற;
மெண்டு விழுங்கும்
நினைவுகளோ உன்னைக்
கண்டப்படித் தேட!

வீங்கிப்போனப் பாசத்தாலே
வெடித்து நிற்கும் பிரிவு;
நீர்த்துப்போகும் சண்டை
மட்டும் அணுதினமும் வரவு!

தனித்து நின்று
நினைத்துப் பார்த்தால்
சினம்கூடத் தணிந்துப் போகும்;
கனம்கூட இனித்துப் போகும்!

முற்றிப்போன அன்பினாலே
தொட்டதெற்கெல்லாம் வம்பு;
கண்பட்டவுடன் கலைந்துப் போகும்
மாயமென்ன இயம்பு!

தோற்று ஓடட்டும்
நாற்றமெடுக்கும் கோபம்;
மனம் கசந்து முகம் சிவந்தால்
யாருக்கென்ன இலாபம்!முகம் இரண்டும்
விலகிச் செல்ல;
முதுகு இரண்டும்
ஒட்டிக் கொள்ள;
கட்டுப்பட்டோம் ஆங்கிலத்திற்கு;
“ஈகோஎன்ற ஒர் எழுத்துக்கு!

துண்டுப்பட்ட மனம் மட்டும்
விம்மி விம்மிக் கதற;
மெண்டு விழுங்கும்
நினைவுகளோ உன்னைக்
கண்டப்படித் தேட!

வீங்கிப்போனப் பாசத்தாலே
வெடித்து நிற்கும் பிரிவு;
நீர்த்துப்போகும் சண்டை
மட்டும் அணுதினமும் வரவு!

தனித்து நின்று
நினைத்துப் பார்த்தால்
சினம்கூடத் தணிந்துப் போகும்;
கனம்கூட இனித்துப் போகும்!

முற்றிப்போன அன்பினாலே
தொட்டதெற்கெல்லாம் வம்பு;
கண்பட்டவுடன் கலைந்துப் போகும்
மாயமென்ன இயம்பு!

தோற்று ஓடட்டும்
நாற்றமெடுக்கும் கோபம்;
மனம் கசந்து முகம் சிவந்தால்
யாருக்கென்ன இலாபம்!

ஐந்து ரூபாய் மிட்டாய்..


பெட்டிகளைப் பார்ததும்
குழந்தைக் குதுகலிக்கும்;
வாசம் வீசும்
வளைகுடாப் பையை
முகர்ந்துப் பார்த்தே
புன்முறுவல் கொடுப்பான்!

அன்றேத் திறக்கச்சொல்லி
அடம்பிடிக்கும் குழந்தையின்
அழுகையை
ஆறுதல் சொல்லி
அழகாய் ரசிப்பேன்!

எட்டி நிற்கும் பிள்ளை
பெட்டித் திறந்ததும்
வட்டமடிக்கும் அவன்
விழிகள்!

விலையுயர்ந்த சாமன்கள்
அவனிடம் விலைப்போகாததால்
கோவித்துகொண்டு அழ ஆரம்பிப்பான்
அவனுக்குப்பிடித்த ஐந்து ரூபாய்
மிட்டாய் இல்லாததால்!

மாற்றம் கண்டேன்
மறு நாளே – எனைக் கண்டு
ஓட்டமெடுப்பான்
பேசமறுப்பான்!

சோர்ந்துப் போன
தோள்களைத் தொங்கவிட்டு;
மனதோடு சொல்லிக்கொள்வேன்
என் அத்தாவிற்கும்
இப்படித்தானே வலித்திருக்கும்!


பெட்டிகளைப் பார்ததும்
குழந்தைக் குதுகலிக்கும்;
வாசம் வீசும்
வளைகுடாப் பையை
முகர்ந்துப் பார்த்தே
புன்முறுவல் கொடுப்பான்!

அன்றேத் திறக்கச்சொல்லி
அடம்பிடிக்கும் குழந்தையின்
அழுகையை
ஆறுதல் சொல்லி
அழகாய் ரசிப்பேன்!

எட்டி நிற்கும் பிள்ளை
பெட்டித் திறந்ததும்
வட்டமடிக்கும் அவன்
விழிகள்!

விலையுயர்ந்த சாமன்கள்
அவனிடம் விலைப்போகாததால்
கோவித்துகொண்டு அழ ஆரம்பிப்பான்
அவனுக்குப்பிடித்த ஐந்து ரூபாய்
மிட்டாய் இல்லாததால்!

மாற்றம் கண்டேன்
மறு நாளே – எனைக் கண்டு
ஓட்டமெடுப்பான்
பேசமறுப்பான்!

சோர்ந்துப் போன
தோள்களைத் தொங்கவிட்டு;
மனதோடு சொல்லிக்கொள்வேன்
என் அத்தாவிற்கும்
இப்படித்தானே வலித்திருக்கும்!

நாங்கள்தான் சிறுபான்மையினர்..நிரந்தரமாய்
இறந்துப்போனச்
சட்டங்கள்;
விழித்திருந்தாலும்
விழி மூடிவிடும் 
எங்களைக் கண்டு!

குரல் கொடுக்க
விரல் விட்டு
எண்ணும் கூட்டம்;
அதுவும் விரல் வேண்டும் 
ஓட்டுக்கு என்பதால்!

தேர்தல் மைப் பூசி
ஒளி மங்க;
பொய்ப் பேசி
மெய் மறைக்கும்!

காவியுடன்
கைக்கோர்த்து
காவல்காரர்கள்
கனைத்துவிட்டு
குரல்கொடுப்பார்கள்
"சட்டம் தன்
கடமையைச் செய்யும்"!

மாசுக் கொண்ட
நீதிமன்றம்;
பாசி(ஸ)க் கொண்டுக்
கிடக்கும் - எங்களுடைய
வழக்கு வழுக்கும்!

பாவப்பட்ட நாங்கள்
இரண்டாந்தாரமாய்
இந்தியாவில்!


நிரந்தரமாய்
இறந்துப்போனச்
சட்டங்கள்;
விழித்திருந்தாலும்
விழி மூடிவிடும் 
எங்களைக் கண்டு!

குரல் கொடுக்க
விரல் விட்டு
எண்ணும் கூட்டம்;
அதுவும் விரல் வேண்டும் 
ஓட்டுக்கு என்பதால்!

தேர்தல் மைப் பூசி
ஒளி மங்க;
பொய்ப் பேசி
மெய் மறைக்கும்!

காவியுடன்
கைக்கோர்த்து
காவல்காரர்கள்
கனைத்துவிட்டு
குரல்கொடுப்பார்கள்
"சட்டம் தன்
கடமையைச் செய்யும்"!

மாசுக் கொண்ட
நீதிமன்றம்;
பாசி(ஸ)க் கொண்டுக்
கிடக்கும் - எங்களுடைய
வழக்கு வழுக்கும்!

பாவப்பட்ட நாங்கள்
இரண்டாந்தாரமாய்
இந்தியாவில்!

வயதான வெளிநாட்டுக் கணவன்மூட்டை முடிச்சும்
முட்டுவலியும்
மூச்சிப்பிடிப்புடன்
வீடு வந்து சேர்ந்தேன்
வளைகுடாவிலிருந்து
விடுதலையாகி வந்தேன்!

மணக்கும் மனைவியின்
முகமோ சுருக்கம் கண்டு;
சுறுக்கமாய் முதுமைக் கொண்டு!  
முன்னாடி நிற்கும் எனைத்தெரிய
கண்ணாடு போடும்
திரை மறைத்த விழி!

நரைக்கொண்டு
கரைப்படிந்து;
உழைத்தக் காசை
செலவுச் செய்ய
வியாதியுடன் வந்திருக்கிறேன்
வயோதிகத்தில் வந்து நிற்கிறேன்!

இளமைக்கு வேட்டு வைத்து
கடமைக்கு ஓட்டுப் போட்டு
கடனுக்கு ஒட்டுப்போட்டு;
பாலையிலேப் பலக்காலம்!

செழிப்பான வாலிபத்தை
மாதச் சம்பளத்திற்கு
விற்றுவிட்டு;
நமக்கென்று துணைவேண்டி
ஓடிவரமுடியாமல்
ஊன்றி வருகிறேன்
குச்சினை!

எட்டி உதைக்கும்
பிள்ளை வேண்டி
ஏங்கி நிற்கும் வயதான
வெளிநாட்டுக் கணவன்
உள்நாட்டில் உன்னோடு!


மூட்டை முடிச்சும்
முட்டுவலியும்
மூச்சிப்பிடிப்புடன்
வீடு வந்து சேர்ந்தேன்
வளைகுடாவிலிருந்து
விடுதலையாகி வந்தேன்!

மணக்கும் மனைவியின்
முகமோ சுருக்கம் கண்டு;
சுறுக்கமாய் முதுமைக் கொண்டு!  
முன்னாடி நிற்கும் எனைத்தெரிய
கண்ணாடு போடும்
திரை மறைத்த விழி!

நரைக்கொண்டு
கரைப்படிந்து;
உழைத்தக் காசை
செலவுச் செய்ய
வியாதியுடன் வந்திருக்கிறேன்
வயோதிகத்தில் வந்து நிற்கிறேன்!

இளமைக்கு வேட்டு வைத்து
கடமைக்கு ஓட்டுப் போட்டு
கடனுக்கு ஒட்டுப்போட்டு;
பாலையிலேப் பலக்காலம்!

செழிப்பான வாலிபத்தை
மாதச் சம்பளத்திற்கு
விற்றுவிட்டு;
நமக்கென்று துணைவேண்டி
ஓடிவரமுடியாமல்
ஊன்றி வருகிறேன்
குச்சினை!

எட்டி உதைக்கும்
பிள்ளை வேண்டி
ஏங்கி நிற்கும் வயதான
வெளிநாட்டுக் கணவன்
உள்நாட்டில் உன்னோடு!

அடுத்தவருடம் வரைவிடுப்பட்ட அம்பாய்
சூடானக் கண்ணீர் – வழிந்தாலும்
நிரம்பிக்கொண்டே இருக்கும்
உன் நினைவுகள் மட்டும்!

கடும் பளுச் சுமக்கும்
என் தோள்களும்;
தோற்றுத் துவண்டுத்தான் போகும்
உன்னை நினைக்கையிலே!

உண்ண நேரமில்லா
நாட்டிலே உன்னை
எண்ணிக் கொண்டிருப்பேன்;
நாட்களைத் தள்ளிக்கொண்டிருப்பேன்!

போர்வைக்குள் புகுந்தப்பின்னே
முட்டி நிற்கும் அழுகை;
சத்தமில்லாச் சரவெடி!

இரவினில் இமையைத் தொடும்
உறக்கமும் தர்ணா செய்ய;
விழித்துக்கொண்டே
உன்னை நினைத்துக்கொண்டிருப்பேன்;
விழிகளை நனைத்துக்கொண்டிருப்பேன்!

பணம் புரட்டப் பாலையில்
மனம் தவிக்கும் வேலையில்
புன்னகைக்கும் உன்
புகைபடம் மட்டும் ஆறுதலாய்
அடுத்தவருடம் வரை!


விடுப்பட்ட அம்பாய்
சூடானக் கண்ணீர் – வழிந்தாலும்
நிரம்பிக்கொண்டே இருக்கும்
உன் நினைவுகள் மட்டும்!

கடும் பளுச் சுமக்கும்
என் தோள்களும்;
தோற்றுத் துவண்டுத்தான் போகும்
உன்னை நினைக்கையிலே!

உண்ண நேரமில்லா
நாட்டிலே உன்னை
எண்ணிக் கொண்டிருப்பேன்;
நாட்களைத் தள்ளிக்கொண்டிருப்பேன்!

போர்வைக்குள் புகுந்தப்பின்னே
முட்டி நிற்கும் அழுகை;
சத்தமில்லாச் சரவெடி!

இரவினில் இமையைத் தொடும்
உறக்கமும் தர்ணா செய்ய;
விழித்துக்கொண்டே
உன்னை நினைத்துக்கொண்டிருப்பேன்;
விழிகளை நனைத்துக்கொண்டிருப்பேன்!

பணம் புரட்டப் பாலையில்
மனம் தவிக்கும் வேலையில்
புன்னகைக்கும் உன்
புகைபடம் மட்டும் ஆறுதலாய்
அடுத்தவருடம் வரை!

போலி என்கவுண்டர்..சுட்டுப் பார்க்க நாங்கள்
குருவிகளாய்;
தோட்டாக்களுக்கு நாங்கள்
கருவிகளாய்!

கொன்று விட்டு
வென்றதாய் சொல்கிறாய்;
பிதைத்து விட்டு
பதக்கம் கேட்கிறாய்!

பேட்டிக் கொடுக்க
வாட்டி எடுக்கிறாய்;
எங்களை ஒழித்துக்கட்டி
ஒளிந்துக்கொண்டேன் என்கிறாய்!

ஓடவிட்டு சுட்டுத்
தள்ளுகிறாய்;
சுட்டப்பின்னே  ஓடினேன்
என்கிறாய்! 

வாய்மூடி ஜனநாயகம்
வாய் பார்க்க;
வாயைக்கட்டி  எங்களை
உண்மையைக் கக்கு என்கிறாய்!

வாக்கெடுக்க உரிமையுண்டு
ஒட்டுப்போடு என்கிறாய்;
சுட்டப்பின்ன பாகிஸ்தான்
தீவிரவாதி என்கிறாய்!


சுட்டுப் பார்க்க நாங்கள்
குருவிகளாய்;
தோட்டாக்களுக்கு நாங்கள்
கருவிகளாய்!

கொன்று விட்டு
வென்றதாய் சொல்கிறாய்;
பிதைத்து விட்டு
பதக்கம் கேட்கிறாய்!

பேட்டிக் கொடுக்க
வாட்டி எடுக்கிறாய்;
எங்களை ஒழித்துக்கட்டி
ஒளிந்துக்கொண்டேன் என்கிறாய்!

ஓடவிட்டு சுட்டுத்
தள்ளுகிறாய்;
சுட்டப்பின்னே  ஓடினேன்
என்கிறாய்! 

வாய்மூடி ஜனநாயகம்
வாய் பார்க்க;
வாயைக்கட்டி  எங்களை
உண்மையைக் கக்கு என்கிறாய்!

வாக்கெடுக்க உரிமையுண்டு
ஒட்டுப்போடு என்கிறாய்;
சுட்டப்பின்ன பாகிஸ்தான்
தீவிரவாதி என்கிறாய்!

ஊதி அணைக்க முடியாது..தடுத்திடத் துடித்து
எடுத்திட நினைத்து
பழிப்போட்டாய்
பயங்கரவாதி என்று!

வெள்ளை மாளிகையில் 
முகாமிட்டு எங்களுக்கு
முத்திரையிட்டாய்
முஸ்லிம்கள்
முகத்திரையிட்டால்!

அழித்திட அதற்கு  நீ
விழித்திட;
வெட்ட நினைத்த 
கோடரி உன் கரத்திலிருக்க;
வெட்கப்பட்டு மொட்டுவிட்டு
மார்க்கம் கண்டது உன்
மச்சினி என்றது!

களைய நினைத்தாய்
விளைய வைத்தான்;
ஒடுக்க நினைத்தாய்
மினுக்கிட  வைத்தான்!

புதைக்க நினைத்த இடத்திலே
விதைக்க வைப்பான்!
இணையில்லை என்றும்
இறைவனுக்கு;
எவனுமில்லை அவனை
எதிர்ப்பதற்கு!


தடுத்திடத் துடித்து
எடுத்திட நினைத்து
பழிப்போட்டாய்
பயங்கரவாதி என்று!

வெள்ளை மாளிகையில் 
முகாமிட்டு எங்களுக்கு
முத்திரையிட்டாய்
முஸ்லிம்கள்
முகத்திரையிட்டால்!

அழித்திட அதற்கு  நீ
விழித்திட;
வெட்ட நினைத்த 
கோடரி உன் கரத்திலிருக்க;
வெட்கப்பட்டு மொட்டுவிட்டு
மார்க்கம் கண்டது உன்
மச்சினி என்றது!

களைய நினைத்தாய்
விளைய வைத்தான்;
ஒடுக்க நினைத்தாய்
மினுக்கிட  வைத்தான்!

புதைக்க நினைத்த இடத்திலே
விதைக்க வைப்பான்!
இணையில்லை என்றும்
இறைவனுக்கு;
எவனுமில்லை அவனை
எதிர்ப்பதற்கு!

விடமாட்டேன்..நாட்டிற்கு நீ வந்தாலும்
வாட்டமாய் என் முகம்;
உன்னிடம் ஓட்ட முடியாமல்
ஒதிங்கி நிற்பேன்;
உன்னை ஒட்டியிருக்கும்
உறவினர்களால்! 

ஓரக் கண்ணில் நீ
பார்த்ததும் 
ஈரம் பூக்கும் என்
விழிகள்!
புன்னைகைக்கும் என்
உதடுகள்!

களையிழந்த  நான் 
ஒளிருவேன் உனக்காக
ஒரு மாதம் மட்டும்!

வெறுத்துப் போகும்
உன் நண்பர்களைக் கண்டு;
கொத்த்திச் செல்வார்கள்;
உன்னைக் கொத்தாக
கொண்டுச் செல்வார்கள்!

ஓடும் நாட்களை
உன்னோடு கழிக்க
என்னோடு இரு;
பேசாவிட்டாலும்
பார்த்துக் கொண்டிரு!

எனக்கான மாதம்
உன் விடுமுறையை
விட்டுக்கொடுக்க மாட்டேன்;
என்னை  விட்டுவிலக
விடமாட்டேன்!


நாட்டிற்கு நீ வந்தாலும்
வாட்டமாய் என் முகம்;
உன்னிடம் ஓட்ட முடியாமல்
ஒதிங்கி நிற்பேன்;
உன்னை ஒட்டியிருக்கும்
உறவினர்களால்! 

ஓரக் கண்ணில் நீ
பார்த்ததும் 
ஈரம் பூக்கும் என்
விழிகள்!
புன்னைகைக்கும் என்
உதடுகள்!

களையிழந்த  நான் 
ஒளிருவேன் உனக்காக
ஒரு மாதம் மட்டும்!

வெறுத்துப் போகும்
உன் நண்பர்களைக் கண்டு;
கொத்த்திச் செல்வார்கள்;
உன்னைக் கொத்தாக
கொண்டுச் செல்வார்கள்!

ஓடும் நாட்களை
உன்னோடு கழிக்க
என்னோடு இரு;
பேசாவிட்டாலும்
பார்த்துக் கொண்டிரு!

எனக்கான மாதம்
உன் விடுமுறையை
விட்டுக்கொடுக்க மாட்டேன்;
என்னை  விட்டுவிலக
விடமாட்டேன்!

ஒயாமல் ஓடும்முடிந்துப்போன நிமிடங்கள்
நினைவுகளில்;
ஒயாமல் ஓடும் காலத்தால்
கால் ஊன்றமுடியாக்
கடிகாரம்!

தொட்டுவிட்டுச் செல்லும்
விட்டால் தொடமுடியா
தூரத்திற்கு!

முடிந்துப்போன
நேரங்கள் முத்தமிட்டு
மூடிவைக்கப்பட்டு!

இருக்கும் போதே
இறுக்கமாய் பிடித்துகொள்
வாழ்க்கையைப் படித்துக்கொள்!

வலிக்கும் மனதிற்கு
மறக்க மருந்தாய்;
மறைத்தந்த அவகாசம்
நேரம்தான் நம் விலாசம்!

காற்று இருக்கும் போதே
தூற்றிக்கொள்;
காலம் இருக்கும் போதே
தொழுதுக்கொள்!


முடிந்துப்போன நிமிடங்கள்
நினைவுகளில்;
ஒயாமல் ஓடும் காலத்தால்
கால் ஊன்றமுடியாக்
கடிகாரம்!

தொட்டுவிட்டுச் செல்லும்
விட்டால் தொடமுடியா
தூரத்திற்கு!

முடிந்துப்போன
நேரங்கள் முத்தமிட்டு
மூடிவைக்கப்பட்டு!

இருக்கும் போதே
இறுக்கமாய் பிடித்துகொள்
வாழ்க்கையைப் படித்துக்கொள்!

வலிக்கும் மனதிற்கு
மறக்க மருந்தாய்;
மறைத்தந்த அவகாசம்
நேரம்தான் நம் விலாசம்!

காற்று இருக்கும் போதே
தூற்றிக்கொள்;
காலம் இருக்கும் போதே
தொழுதுக்கொள்!

சுதந்திரமா...
அரைக்குறை ஆடை
சுதந்திரமா;
நிர்வாணப்படுத்திப் பார்க்கும்
உலகத்தின் தந்திரமா!

கண்காட்சி உனக்கிட்டப் பெயர்
கலாச்சாரமா;
கண்களுக்குக் கிடைக்கும்
விபச்சாரமா!

கவர்ச்சிக் காட்டிக்
கிளர்ச்சியூட்ட நீ
என்ன போதையா;
வன்கொடுமைக்கு
அழைத்துச் செல்லும் பாதையா!

முன்னேறிவிட்டோம் என
முழக்கமிட்டுக் கொண்டு;
இன்னும் 33 சதவீதம்
கேட்கிறாய் இன்று!

கண்ணியம் காக்கும் பெண்மைக்கு
மருந்தொன்று உண்டு;
மணக்கும் இஸ்லாத்தைக் கொண்டு!
நுழைந்து விடு இன்று!
அரைக்குறை ஆடை
சுதந்திரமா;
நிர்வாணப்படுத்திப் பார்க்கும்
உலகத்தின் தந்திரமா!

கண்காட்சி உனக்கிட்டப் பெயர்
கலாச்சாரமா;
கண்களுக்குக் கிடைக்கும்
விபச்சாரமா!

கவர்ச்சிக் காட்டிக்
கிளர்ச்சியூட்ட நீ
என்ன போதையா;
வன்கொடுமைக்கு
அழைத்துச் செல்லும் பாதையா!

முன்னேறிவிட்டோம் என
முழக்கமிட்டுக் கொண்டு;
இன்னும் 33 சதவீதம்
கேட்கிறாய் இன்று!

கண்ணியம் காக்கும் பெண்மைக்கு
மருந்தொன்று உண்டு;
மணக்கும் இஸ்லாத்தைக் கொண்டு!
நுழைந்து விடு இன்று!

ஈரமான இமைகள்..சூடானப் பக்கங்கள்
சுடும் நெஞ்சத்தை ;
கன்னத்தோடுக்
கண்ணீர் வந்துக்
கவிதைச் சொல்ல;
விழுங்க முடியாமல்
விழுந்துவிடும்
வார்த்தைகள்!

இரவோடு தலையணையும்
அணைத்துக்கொள்ள
உறக்கம் மட்டும்
ஏங்கி நிற்கும்
தழுவாமல் நான்
தனித்து நிற்பதைக் கண்டு!

உன் புகைப்படமும்
புன்னகைத்து நிற்க;
வெட்கப்பட்டு வெளியில்
வழியும் கண்ணீர்த் துளிகள்!

மனமுரண்டுச் செய்து
மனமுடைத்துக்  கொண்டாலும்;
மனம் முழுதும் நீ இருப்பதால்
சரணடைவேன் சூடானச் 
சினத்துடன்!

திக்கிப் பேசும் நம்
குழந்தையோ
தித்திப்பாய்ப் பேச;
அடக்கி வைத்த
அழுகையோ
அணையின்றி
முட்டி மோதும்!

நனைந்துப் போன
என் இமைகள்
என்னை வெட்கப்படவைக்க;
புரிந்துக்கொண்ட நண்பர்கள்
புன்னகைத்துவிட்டுப் போவார்கள்!


சூடானப் பக்கங்கள்
சுடும் நெஞ்சத்தை ;
கன்னத்தோடுக்
கண்ணீர் வந்துக்
கவிதைச் சொல்ல;
விழுங்க முடியாமல்
விழுந்துவிடும்
வார்த்தைகள்!

இரவோடு தலையணையும்
அணைத்துக்கொள்ள
உறக்கம் மட்டும்
ஏங்கி நிற்கும்
தழுவாமல் நான்
தனித்து நிற்பதைக் கண்டு!

உன் புகைப்படமும்
புன்னகைத்து நிற்க;
வெட்கப்பட்டு வெளியில்
வழியும் கண்ணீர்த் துளிகள்!

மனமுரண்டுச் செய்து
மனமுடைத்துக்  கொண்டாலும்;
மனம் முழுதும் நீ இருப்பதால்
சரணடைவேன் சூடானச் 
சினத்துடன்!

திக்கிப் பேசும் நம்
குழந்தையோ
தித்திப்பாய்ப் பேச;
அடக்கி வைத்த
அழுகையோ
அணையின்றி
முட்டி மோதும்!

நனைந்துப் போன
என் இமைகள்
என்னை வெட்கப்படவைக்க;
புரிந்துக்கொண்ட நண்பர்கள்
புன்னகைத்துவிட்டுப் போவார்கள்!

உணருங்கள் உண்மை..மறைந்திருந்து
மகுடி ஊதும்
மனிதவளங்களுக்குத் 
திரை என்றும்
சிறையல்ல எங்களுக்கு!

சட்டம் போடுவதற்கு முன்னே
சரித்திரம் படைத்துச்;

சொத்துரிமைக்குச் சொந்தமாக்கிப்
பெண் குழந்தையைப்
பாக்கியமாக்கிய
நறுமணம் வீசும் இஸ்லாம்!

அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பு எதற்கு குரல் ஒலித்த
காலத்திற்கு முன்னே;
ஒளிக்கொடுத்து மங்கைக்கு
வழிக்கொடுத்த
நேசம் கொண்ட இஸ்லாம்!

மொட்டு என்றும் காணாமல்
கள்ளிக் கொடுத்துக் கொள்ளிவைக்கும்
காலத்திற்கு முன்னே
ஒழுக்கத்துடன் வளர்த்தால்
வழுக்காது சுவர்க்கம் என
அறிக்கைச் செய்த
இனிக்கும் இஸ்லாம்!

முந்திக் கொண்டு
முதியோர் இல்லத்திற்கு
தள்ளிக்கொண்டுச் செல்லும்
இக்காலத்தில்;
பெற்றோரைக் காக்க மறந்தால்
தூக்கி எரிவாய் நரகத்தில் என
முழக்கமிட்ட முத்தான இஸ்லாம்!

பெண்மைக் காக்க
உரிமைக் கொடுத்து
வழியும் கொடுத்து
மணக்கும் இஸ்லாம்
மறுக்காது ஒருநாளும்
தடுக்காது  பெண்ணின்
பெருமை - உணருங்கள்
இந்த உண்மை!


மறைந்திருந்து
மகுடி ஊதும்
மனிதவளங்களுக்குத் 
திரை என்றும்
சிறையல்ல எங்களுக்கு!

சட்டம் போடுவதற்கு முன்னே
சரித்திரம் படைத்துச்;

சொத்துரிமைக்குச் சொந்தமாக்கிப்
பெண் குழந்தையைப்
பாக்கியமாக்கிய
நறுமணம் வீசும் இஸ்லாம்!

அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பு எதற்கு குரல் ஒலித்த
காலத்திற்கு முன்னே;
ஒளிக்கொடுத்து மங்கைக்கு
வழிக்கொடுத்த
நேசம் கொண்ட இஸ்லாம்!

மொட்டு என்றும் காணாமல்
கள்ளிக் கொடுத்துக் கொள்ளிவைக்கும்
காலத்திற்கு முன்னே
ஒழுக்கத்துடன் வளர்த்தால்
வழுக்காது சுவர்க்கம் என
அறிக்கைச் செய்த
இனிக்கும் இஸ்லாம்!

முந்திக் கொண்டு
முதியோர் இல்லத்திற்கு
தள்ளிக்கொண்டுச் செல்லும்
இக்காலத்தில்;
பெற்றோரைக் காக்க மறந்தால்
தூக்கி எரிவாய் நரகத்தில் என
முழக்கமிட்ட முத்தான இஸ்லாம்!

பெண்மைக் காக்க
உரிமைக் கொடுத்து
வழியும் கொடுத்து
மணக்கும் இஸ்லாம்
மறுக்காது ஒருநாளும்
தடுக்காது  பெண்ணின்
பெருமை - உணருங்கள்
இந்த உண்மை!

இப்படிக்குப் கைப்பேசி!கேட்கும்போதே
முணுமுணுக்கும்;
மனதோடு மணியடிக்கும்

தூரத்தைப் பாரமாக்காமல்
நேரத்தை விரயமாக்காமல்
பெருகிவிட்டச் சனத்தொகையில்
சுருங்கிவிட்டத் தொலைத்தொடர்பு!

சிரித்தப்படிச் சிணுங்கினாலும்
அகம் கனத்து
சினம் கொண்டு
புறம் நோக்குவார்கள்
எரிச்சலோடு எச்சிலை விழுங்கியவாறு
பெண்ணைப் பெற்றோர்!

கிள்ளுப்பிராண்டி கியாப்பிராண்டி
மறந்துப்போனப் பள்ளி மொட்டுகளும்;
சொல்லி விளையாடும்
செல் விளையாட்டு;
செல்லாத விளையாட்டு – யாருக்கும்
சொல்லாத விளையாட்டு!

ஒட்டிக்கொண்ட என்னை
வெட்டிவிட முடியாமல்
கட்டியழும் கல்லூரிக் கொழுந்துகள்!

அசிங்கங்களைப் படமெடுத்து
அதற்கும் படையெடுத்து;
துர்நாற்றத்தை சுவாசங்கொண்டு
அதற்கு விரசம் கொள்ளும்!

வளர்ச்சிக் காணும் உலகில்
கவர்ச்சிக் காட்டி
உங்கள் கைகளாலே
உங்கள் கண்ணைக் குத்தும்
விஞ்ஞான வாரிசு!

இப்படிக்குக் கைப்பேசி!


கேட்கும்போதே
முணுமுணுக்கும்;
மனதோடு மணியடிக்கும்

தூரத்தைப் பாரமாக்காமல்
நேரத்தை விரயமாக்காமல்
பெருகிவிட்டச் சனத்தொகையில்
சுருங்கிவிட்டத் தொலைத்தொடர்பு!

சிரித்தப்படிச் சிணுங்கினாலும்
அகம் கனத்து
சினம் கொண்டு
புறம் நோக்குவார்கள்
எரிச்சலோடு எச்சிலை விழுங்கியவாறு
பெண்ணைப் பெற்றோர்!

கிள்ளுப்பிராண்டி கியாப்பிராண்டி
மறந்துப்போனப் பள்ளி மொட்டுகளும்;
சொல்லி விளையாடும்
செல் விளையாட்டு;
செல்லாத விளையாட்டு – யாருக்கும்
சொல்லாத விளையாட்டு!

ஒட்டிக்கொண்ட என்னை
வெட்டிவிட முடியாமல்
கட்டியழும் கல்லூரிக் கொழுந்துகள்!

அசிங்கங்களைப் படமெடுத்து
அதற்கும் படையெடுத்து;
துர்நாற்றத்தை சுவாசங்கொண்டு
அதற்கு விரசம் கொள்ளும்!

வளர்ச்சிக் காணும் உலகில்
கவர்ச்சிக் காட்டி
உங்கள் கைகளாலே
உங்கள் கண்ணைக் குத்தும்
விஞ்ஞான வாரிசு!

இப்படிக்குக் கைப்பேசி!

அனாதை நாட்டிலிருந்து..கலங்கியக் கண்ணீரை
விளங்காத உலகம்;
குளம் கண்டக் கண்கள்
பசிக்கொண்ட ஏக்கம்!

குண்டுச்சத்தங்கள் எங்கள்
செவிப்பரையைக் கிழிக்க;
கொத்துக் கொத்தாய்
எங்களை அழிக்க!

மனவியாதிக் கொண்ட
தலைமுறை உருவெடுக்க;
ஒட்டுமொத்த உலகத்தின்
மனிதநேயங்களை கருவறுக்க!

படிக்கவேண்டிய நாங்கள்
பசிக்குத் துடித்துக்கொண்டிருக்க;
பத்திரிக்கைகளோப் படம் எடுத்துப்
பணம் படைத்துக்கொண்டிருக்க!

அழுவதற்குப் பலமில்லாமல்
பழுதுப்பட்ட வயிறுடன்
பாவப்பட்டப் பார்வையுடன்
ஏங்கிக் கொண்டிருக்கும்
ஏழைக்குழந்தை;
அங்கீகாரம் அளிக்கப்பட்ட
அனாதை நாட்டிலிருந்து;
ஆப்கானிஸ்தானிலுருந்து!


கலங்கியக் கண்ணீரை
விளங்காத உலகம்;
குளம் கண்டக் கண்கள்
பசிக்கொண்ட ஏக்கம்!

குண்டுச்சத்தங்கள் எங்கள்
செவிப்பரையைக் கிழிக்க;
கொத்துக் கொத்தாய்
எங்களை அழிக்க!

மனவியாதிக் கொண்ட
தலைமுறை உருவெடுக்க;
ஒட்டுமொத்த உலகத்தின்
மனிதநேயங்களை கருவறுக்க!

படிக்கவேண்டிய நாங்கள்
பசிக்குத் துடித்துக்கொண்டிருக்க;
பத்திரிக்கைகளோப் படம் எடுத்துப்
பணம் படைத்துக்கொண்டிருக்க!

அழுவதற்குப் பலமில்லாமல்
பழுதுப்பட்ட வயிறுடன்
பாவப்பட்டப் பார்வையுடன்
ஏங்கிக் கொண்டிருக்கும்
ஏழைக்குழந்தை;
அங்கீகாரம் அளிக்கப்பட்ட
அனாதை நாட்டிலிருந்து;
ஆப்கானிஸ்தானிலுருந்து!

சுருங்கிப் போன சருமத்தில்..நரை விழுந்துத்
தடைப் போடும் நடை
வந்தாலும் குடையாக;
நிழற் கொடுக்க வேண்டும்!

நீ வெட்கப்பட்ட
நாட்களை நான்
சொல்லிக்காட்ட வேண்டும்
நீ மீண்டும் வெட்கப்பட வேண்டும்!

வாழத் தவறிய
நாட்களுக்கு மாற்றாக
உன் தோளில் சாய வேண்டும்;
நம் பொய்ச்சாயம்
கழைய வேண்டும்!

உன் சுருங்கிப் போன
சருமத்தில் நான்
சாய்ந்துக் கொள்ளவேண்டும்;
முடியாத உன் சுவாசம்
எனக்குத் தலைச் சீவவேண்டும்!

ஓடி ஆடி விளையாட முடியா
குழந்தையாக இன்று;
குழந்தைப் பெற வேண்டிய
வயதில்; வளைகுடாவில் அன்று!


நரை விழுந்துத்
தடைப் போடும் நடை
வந்தாலும் குடையாக;
நிழற் கொடுக்க வேண்டும்!

நீ வெட்கப்பட்ட
நாட்களை நான்
சொல்லிக்காட்ட வேண்டும்
நீ மீண்டும் வெட்கப்பட வேண்டும்!

வாழத் தவறிய
நாட்களுக்கு மாற்றாக
உன் தோளில் சாய வேண்டும்;
நம் பொய்ச்சாயம்
கழைய வேண்டும்!

உன் சுருங்கிப் போன
சருமத்தில் நான்
சாய்ந்துக் கொள்ளவேண்டும்;
முடியாத உன் சுவாசம்
எனக்குத் தலைச் சீவவேண்டும்!

ஓடி ஆடி விளையாட முடியா
குழந்தையாக இன்று;
குழந்தைப் பெற வேண்டிய
வயதில்; வளைகுடாவில் அன்று!

ஓய்வுப்பெறும் வயது..விக்கித்துப்போகும்
வியாதிகளை
ஒளித்துக்கொண்டு
என்னோடுச் சிரித்துக்
கொண்டு நீ!

வினவினாலும்
விடையாய் உன் சிரிப்பைச் 
சிறகாய் விரிப்பாய்!

புரிந்துக்கொண்டேன்;
வலியில்லை என
வளைகுடாவில்; 
நான் உரைப்பதுப் போல!

உறவுகளுக்காக
விறகாய் நான் இங்கே;
எனக்காக மட்டுமே
உறவுகளுடன்
விறகாய் நீ அங்கே!

விரயமான காலங்கள்
வருமானமாய் நிற்கும்;
நரைத்த நம் தலைமுடிகள் 
நம் இளமைக்காக தவிக்கும்!

ஓடிவிளையாடும் வயதில்
முடங்கிவிட்டோம்
ஆளுக்கொரு தேசத்தில்;
நேசத்தைத் தேடி
குச்சை ஊண்டும் வயதில்
ஓடிவருகிறேன் உனைத் தேடி!

பருவத்தை
பாலையில்
பயிர்செய்து;
முதுமையால்
முடிந்துப் போன
வேலையால்;
நாட்டிற்கு வருகிறேன் உன்
நாதிக்காக வருகிறேன்!


விக்கித்துப்போகும்
வியாதிகளை
ஒளித்துக்கொண்டு
என்னோடுச் சிரித்துக்
கொண்டு நீ!

வினவினாலும்
விடையாய் உன் சிரிப்பைச் 
சிறகாய் விரிப்பாய்!

புரிந்துக்கொண்டேன்;
வலியில்லை என
வளைகுடாவில்; 
நான் உரைப்பதுப் போல!

உறவுகளுக்காக
விறகாய் நான் இங்கே;
எனக்காக மட்டுமே
உறவுகளுடன்
விறகாய் நீ அங்கே!

விரயமான காலங்கள்
வருமானமாய் நிற்கும்;
நரைத்த நம் தலைமுடிகள் 
நம் இளமைக்காக தவிக்கும்!

ஓடிவிளையாடும் வயதில்
முடங்கிவிட்டோம்
ஆளுக்கொரு தேசத்தில்;
நேசத்தைத் தேடி
குச்சை ஊண்டும் வயதில்
ஓடிவருகிறேன் உனைத் தேடி!

பருவத்தை
பாலையில்
பயிர்செய்து;
முதுமையால்
முடிந்துப் போன
வேலையால்;
நாட்டிற்கு வருகிறேன் உன்
நாதிக்காக வருகிறேன்!

வலிமையான அரசை..தடுக்காமல்
குடிக்கச் சொல்லி
கேடுக்குக் கோடுப்போடும்
கேடுக்கெட்டத்  தலைமை
இதுதான் எங்களின் நிலைமை!

திரைக்குப்பின்
உறைப்போட்டு
களைக்கட்டக் கவர்மெண்டின்
அக்கறை விளம்பரம்
ஆணுறை!

வீழ்ச்சியிலும்
நெடு நெடுவென்று வளர்ந்து;
மலைப்போல் உயரும்
விலைக்கு எங்கள்
தலை உயரும் மலைப்பில்!

நீதிகேட்டுக் குரல் கொடுத்தால்
பாதி வயதுக்குப் பின்
எதிரொலிக்கும்!

வழக்குகள் வயதாகி
பொய்யிர்க்காக
மெய்யை விலைப்பேசி;
மூன்றில் ஒன்று என மூச்சிவிட்டு
பள்ளியை ஏப்பம்விட்ட
வழக்குமன்றங்கள்!
    
நாடு முன்னேற
என் வியர்வையை
முதலீடு செய்யும் பங்குதாரர்
எனக்கு என்னவோ
பட்டம் பயங்கரவாதி!

கடுமையான சட்டங்கள்
கொடுமையை விலக்கும்;
வலிமையான அரசை
இஸ்லாம் மட்டுமே கொடுக்கும்!


தடுக்காமல்
குடிக்கச் சொல்லி
கேடுக்குக் கோடுப்போடும்
கேடுக்கெட்டத்  தலைமை
இதுதான் எங்களின் நிலைமை!

திரைக்குப்பின்
உறைப்போட்டு
களைக்கட்டக் கவர்மெண்டின்
அக்கறை விளம்பரம்
ஆணுறை!

வீழ்ச்சியிலும்
நெடு நெடுவென்று வளர்ந்து;
மலைப்போல் உயரும்
விலைக்கு எங்கள்
தலை உயரும் மலைப்பில்!

நீதிகேட்டுக் குரல் கொடுத்தால்
பாதி வயதுக்குப் பின்
எதிரொலிக்கும்!

வழக்குகள் வயதாகி
பொய்யிர்க்காக
மெய்யை விலைப்பேசி;
மூன்றில் ஒன்று என மூச்சிவிட்டு
பள்ளியை ஏப்பம்விட்ட
வழக்குமன்றங்கள்!
    
நாடு முன்னேற
என் வியர்வையை
முதலீடு செய்யும் பங்குதாரர்
எனக்கு என்னவோ
பட்டம் பயங்கரவாதி!

கடுமையான சட்டங்கள்
கொடுமையை விலக்கும்;
வலிமையான அரசை
இஸ்லாம் மட்டுமே கொடுக்கும்!

எங்கள் எலும்புகள்..விதைக்கப்பட்ட எங்கள்
தியாகங்கள் இன்று
இருட்டறையில் அடைக்கப்பட்டு;
வரலாற்றில் அழிக்கப்பட்டு!

எங்கள் எலும்புகள்
கொடிக்கு கம்பமாய்;
வெற்றிக்கு பிம்பமாய்;
தியாகிகள் என்றப் பெயருக்கு
ஜம்பமாய்!

அடிமையை எதிர்த்து
கொடுமைக்குக் கொதித்து;
புனிதப்போர் என முழக்கமிட்டு  
முழந்தாளிட்டு முத்தமிட்டு
உயிர்விட்ட உத்தம சமூகம்!


செதுக்கப்பட்ட எங்கள் வரலாறுகள்
புதைக்கப்பட்டு இன்று
நாங்கள் புறந்தள்ளப்பட்டு;
அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டு!

சோரம் போன வீரமும்
மாண்டுப்போன நீதியும்
சேர்ந்துப் போனதால்
உரிமைக்குக் குரல்கொடுத்து
இன்று வீதியில் நாங்கள்!


விதைக்கப்பட்ட எங்கள்
தியாகங்கள் இன்று
இருட்டறையில் அடைக்கப்பட்டு;
வரலாற்றில் அழிக்கப்பட்டு!

எங்கள் எலும்புகள்
கொடிக்கு கம்பமாய்;
வெற்றிக்கு பிம்பமாய்;
தியாகிகள் என்றப் பெயருக்கு
ஜம்பமாய்!

அடிமையை எதிர்த்து
கொடுமைக்குக் கொதித்து;
புனிதப்போர் என முழக்கமிட்டு  
முழந்தாளிட்டு முத்தமிட்டு
உயிர்விட்ட உத்தம சமூகம்!


செதுக்கப்பட்ட எங்கள் வரலாறுகள்
புதைக்கப்பட்டு இன்று
நாங்கள் புறந்தள்ளப்பட்டு;
அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டு!

சோரம் போன வீரமும்
மாண்டுப்போன நீதியும்
சேர்ந்துப் போனதால்
உரிமைக்குக் குரல்கொடுத்து
இன்று வீதியில் நாங்கள்!

அன்புள்ள அத்தாவிற்கு..காற்றில் பறந்தக்
காலத்தைப் பிடிக்க முடியாமல்;
படிக்க முடியாக்
காலத்தை எண்ணிப்
படித்துக் கொண்டிருக்கிறேன்
அனுபவமாக!

முரட்டுக் குரலில்
விரட்டுவீர்கள் என்னை;
பற்றிப்பிடித்த அம்மாவின்
முந்தாணைக் கவசமாக
என் முன்னால்!

வருடத்திற்கு ஒரு முறை
உங்கள் வசந்தம் நாட்டிற்கென்றாலும்
பாரமாக இருக்கும்;
படிக்கச் சொல்வதினால்!

படிக்காத எனைத்
துரத்தித் துரத்தி அடித்ததினால்;
பிடிக்காமல் போனது
படிப்போடு உங்களையும்!

தோளுக்கு மேல் வளர்ந்ததால்
காதுக்கொடுத்துக் கேட்கமாட்டேன்
உங்கள் குரலோசையை!

அதட்டினாலும் அலட்சியம் செய்து
மிரட்டினாலும் முறைத்துவிட்டு;
திமிர் கொண்ட சிரிப்பால்
திரும்பாமல் நடப்பேன்!

கையில் பிடித்தக்
கடவுச் சீட்டுடன்
காலரைத் தூக்கி
மிடுக்கு நடையுடன்
கடல் கடந்துக் கால்பதித்தேன்
வெளிநாட்டில்!

கலங்கியக் கண்ணீரை
கரம் துடைத்து;
மனம் புடைத்து;
வென்று ஒரு முறை
அழுதேன் உங்களை அழைத்து!

இல்லாக் கல்வியால்
சொல்லாத் துயரம்;
வயதை விதைத்து
வாலிபத்தை அறுவடைச் செய்யும்;
நவீன உலகம்!

புரிந்துப் போனது
வரிந்துக்கொண்டு என்னை
விரட்டியதற்கானக் மூலக்காரணி!

பதிக்காதப் புத்தகத்தில்
பதக்கம் கொண்டு
இதயத்தில் புதைத்துவிட்டேன்;
வரிகளை வைரமாக்கி
வாழ்த்துக்கள் உங்களுக்கு
சுயநலமில்லாச் சுத்தமானத் தியாகி!


காற்றில் பறந்தக்
காலத்தைப் பிடிக்க முடியாமல்;
படிக்க முடியாக்
காலத்தை எண்ணிப்
படித்துக் கொண்டிருக்கிறேன்
அனுபவமாக!

முரட்டுக் குரலில்
விரட்டுவீர்கள் என்னை;
பற்றிப்பிடித்த அம்மாவின்
முந்தாணைக் கவசமாக
என் முன்னால்!

வருடத்திற்கு ஒரு முறை
உங்கள் வசந்தம் நாட்டிற்கென்றாலும்
பாரமாக இருக்கும்;
படிக்கச் சொல்வதினால்!

படிக்காத எனைத்
துரத்தித் துரத்தி அடித்ததினால்;
பிடிக்காமல் போனது
படிப்போடு உங்களையும்!

தோளுக்கு மேல் வளர்ந்ததால்
காதுக்கொடுத்துக் கேட்கமாட்டேன்
உங்கள் குரலோசையை!

அதட்டினாலும் அலட்சியம் செய்து
மிரட்டினாலும் முறைத்துவிட்டு;
திமிர் கொண்ட சிரிப்பால்
திரும்பாமல் நடப்பேன்!

கையில் பிடித்தக்
கடவுச் சீட்டுடன்
காலரைத் தூக்கி
மிடுக்கு நடையுடன்
கடல் கடந்துக் கால்பதித்தேன்
வெளிநாட்டில்!

கலங்கியக் கண்ணீரை
கரம் துடைத்து;
மனம் புடைத்து;
வென்று ஒரு முறை
அழுதேன் உங்களை அழைத்து!

இல்லாக் கல்வியால்
சொல்லாத் துயரம்;
வயதை விதைத்து
வாலிபத்தை அறுவடைச் செய்யும்;
நவீன உலகம்!

புரிந்துப் போனது
வரிந்துக்கொண்டு என்னை
விரட்டியதற்கானக் மூலக்காரணி!

பதிக்காதப் புத்தகத்தில்
பதக்கம் கொண்டு
இதயத்தில் புதைத்துவிட்டேன்;
வரிகளை வைரமாக்கி
வாழ்த்துக்கள் உங்களுக்கு
சுயநலமில்லாச் சுத்தமானத் தியாகி!

இதயம் திக்கும்..வாழ வழியில்லாமல்
வழிக் காட்டும்
வலிக் கொடுக்கும்
வெளிநாட்டில் நான்!

விட்டுச் சென்ற
நம் நினைவுகள்;
இரவினில் கதவைத் தொட்டு
இமைகளை தட்டும் – கண்ணீரால்
இதயம் திக்கும்!

வாயில்லாத் தலையணை
வசதியாய் இருக்கும்
வாய்பொத்தி அழுவதற்கு!

நீண்ட நேரம்
பேசினாலும் சுற்றிச் சுற்றி
வருவாய் சுருக்கமாய் முடிப்பாய்;
வலைப்போடும் வளைகுடாவிலிருந்து
வருவது எப்போது – உன்
விடுமுறை எப்போது!

சோர்ந்துப் போய்
சாய்ந்து உட்காரும் நேரத்தில்
மருந்தாய் மனதிற்கு
விருந்தாய் உன் நினைவுகள்!

காதோடு சூடேற்றும் கைப்பேசியும்
மடியோடு முகாமிட்டிறுக்கும்
மடிக்கணிணியும் மாற்றுச்சீட்டாய்
வெட்டுப்படும் தனிமைக்குத்
துணையாய்!


வாழ வழியில்லாமல்
வழிக் காட்டும்
வலிக் கொடுக்கும்
வெளிநாட்டில் நான்!

விட்டுச் சென்ற
நம் நினைவுகள்;
இரவினில் கதவைத் தொட்டு
இமைகளை தட்டும் – கண்ணீரால்
இதயம் திக்கும்!

வாயில்லாத் தலையணை
வசதியாய் இருக்கும்
வாய்பொத்தி அழுவதற்கு!

நீண்ட நேரம்
பேசினாலும் சுற்றிச் சுற்றி
வருவாய் சுருக்கமாய் முடிப்பாய்;
வலைப்போடும் வளைகுடாவிலிருந்து
வருவது எப்போது – உன்
விடுமுறை எப்போது!

சோர்ந்துப் போய்
சாய்ந்து உட்காரும் நேரத்தில்
மருந்தாய் மனதிற்கு
விருந்தாய் உன் நினைவுகள்!

காதோடு சூடேற்றும் கைப்பேசியும்
மடியோடு முகாமிட்டிறுக்கும்
மடிக்கணிணியும் மாற்றுச்சீட்டாய்
வெட்டுப்படும் தனிமைக்குத்
துணையாய்!

விலங்கிட்ட வீரசாகசம்போர்த்த வேண்டியப் பகுதியைக்
காட்டி வருகிறாய்;
ஒப்புக்கு ஆடைக் கட்டி வருகிறாய்!

மறைக்க மறந்த
அவயத்தைத் திறந்துவிட்டாய்;
கவர்ச்சிக்குத் தீ மூட்டினாய்;
இளமைக்குக் குளிரூட்டினாய்!

குறைந்த ஆடையால்;
குடையும் ஆடவர்களை
தூண்டிவிட்டாய்
தூண்டிலிட்டாய்!

கணவன் பார்க்கும்
மேனியை
காணி நிலமாக்கினாய்;
காலி இடமாக்கினாய்!

குறையுண்ட ஆடை
நரைக்கொண்ட வயோதிகனையும்
வழிமாறச் செய்யும்;
தடம் பிரளச் செய்யும்!

குறைமதிக்கண்ட
மனிதருக்கு
நிறைக்கொண்ட ஆடை
பர்தாவைப் பாரு;
நிகரேதுக் கூறு!

தலை மறைத்த அழகும்;
உடல் மறைத்த கண்ணியமும்
பெண்ணியம் காக்கும் கவசம்;
வித்திட்ட விரசத்திற்கு
விலங்கிட்ட வீரசாகசம்!போர்த்த வேண்டியப் பகுதியைக்
காட்டி வருகிறாய்;
ஒப்புக்கு ஆடைக் கட்டி வருகிறாய்!

மறைக்க மறந்த
அவயத்தைத் திறந்துவிட்டாய்;
கவர்ச்சிக்குத் தீ மூட்டினாய்;
இளமைக்குக் குளிரூட்டினாய்!

குறைந்த ஆடையால்;
குடையும் ஆடவர்களை
தூண்டிவிட்டாய்
தூண்டிலிட்டாய்!

கணவன் பார்க்கும்
மேனியை
காணி நிலமாக்கினாய்;
காலி இடமாக்கினாய்!

குறையுண்ட ஆடை
நரைக்கொண்ட வயோதிகனையும்
வழிமாறச் செய்யும்;
தடம் பிரளச் செய்யும்!

குறைமதிக்கண்ட
மனிதருக்கு
நிறைக்கொண்ட ஆடை
பர்தாவைப் பாரு;
நிகரேதுக் கூறு!

தலை மறைத்த அழகும்;
உடல் மறைத்த கண்ணியமும்
பெண்ணியம் காக்கும் கவசம்;
வித்திட்ட விரசத்திற்கு
விலங்கிட்ட வீரசாகசம்!