கர்பிணியின் கருணைமனு..


பூத்துக் குலுங்கும்
புதுப்பெண்;
பட்டம் கொடுத்து
பறந்து விட்டாய்;
பிள்ளைக் கொடுத்து
பெயர் அனுப்பி விட்டாய்!

கலங்கும் வலிக் கண்டு
வினவும் அன்னை - உன்
நினைவுதான் என்று
சொல்லாமல் புரியும்;
அனுபவசாளிக்கு
சொல்லித்தானாத் தெரியும்!

பிடித்ததைக் கேள் என்று
காதோடும் ரீங்காரமிடும்
உன் குரலோசை;
உனைத்தான் எனத்
தெரிந்துக் கொண்டே! 

எட்டி உதைக்கும் பிள்ளையும்
எட்டி நிற்கும் நீயும்;
தொட்டுப்பார்க்க வந்துவிடு
தொட்டில்கட்ட உன் கரம் கொடு!

வலிவந்தப் போதும்
விழி உன்னைத் தேடும்;
கத்தும் நம் குழந்தையின்
முதல் குரல் கேட்கட்டும்;
ஆனந்தக் கண்ணீரால் முட்டட்டும்!

பெயர்ச் சொல்ல பிள்ளை என்று
பெயரை மட்டுமே அனுப்பாதே;
விழிமூடி வலிக்காக நான்
அழும்போது பிடித்துக்கொள்ள
உன் கரம் வேண்டும்;
வருடிவிட அருகில் நீ வரவேண்டும்!

பூத்துக் குலுங்கும்
புதுப்பெண்;
பட்டம் கொடுத்து
பறந்து விட்டாய்;
பிள்ளைக் கொடுத்து
பெயர் அனுப்பி விட்டாய்!

கலங்கும் வலிக் கண்டு
வினவும் அன்னை - உன்
நினைவுதான் என்று
சொல்லாமல் புரியும்;
அனுபவசாளிக்கு
சொல்லித்தானாத் தெரியும்!

பிடித்ததைக் கேள் என்று
காதோடும் ரீங்காரமிடும்
உன் குரலோசை;
உனைத்தான் எனத்
தெரிந்துக் கொண்டே! 

எட்டி உதைக்கும் பிள்ளையும்
எட்டி நிற்கும் நீயும்;
தொட்டுப்பார்க்க வந்துவிடு
தொட்டில்கட்ட உன் கரம் கொடு!

வலிவந்தப் போதும்
விழி உன்னைத் தேடும்;
கத்தும் நம் குழந்தையின்
முதல் குரல் கேட்கட்டும்;
ஆனந்தக் கண்ணீரால் முட்டட்டும்!

பெயர்ச் சொல்ல பிள்ளை என்று
பெயரை மட்டுமே அனுப்பாதே;
விழிமூடி வலிக்காக நான்
அழும்போது பிடித்துக்கொள்ள
உன் கரம் வேண்டும்;
வருடிவிட அருகில் நீ வரவேண்டும்!

No comments:

Post a Comment