மூட்டைப் பூச்சி



கடன் அரிப்பாலே
கடல் கடந்துப் பாலையில்;
இங்கு வேலையில்;
மூட்டை முடிச்சுடன்!

கனமான நினைவுகளுடன்
கட்டிலில் சாய்ந்தால்
முத்தமிட நம்மை
முட்டித்தள்ளும்
மூட்டைப் பூச்சி!

வெளிச்சம் கண்டு
வெட்கம் கொண்டு
ஒளிந்துக் கொண்டு;
இரவைக்கண்டு
இருளைக் கொண்டு
இடுக்கில் மூட்டை!  

ஒழிப்பதற்கு
விழித்திருந்தாலும்
கடித்துவிட்டுக்
கடுபேற்றிவிட்டுச் செல்லும்!

இரக்கமே இல்லாமல்
இமை மூட மறுக்கும்
உறக்கத்திற்கு;
கட்டித்தழுவும் நேரத்திலே
கொட்டிவிட்டுச் செல்லும்;
குருதியைக் குடித்துவிட்டுச் செல்லும்!


கடன் அரிப்பாலே
கடல் கடந்துப் பாலையில்;
இங்கு வேலையில்;
மூட்டை முடிச்சுடன்!

கனமான நினைவுகளுடன்
கட்டிலில் சாய்ந்தால்
முத்தமிட நம்மை
முட்டித்தள்ளும்
மூட்டைப் பூச்சி!

வெளிச்சம் கண்டு
வெட்கம் கொண்டு
ஒளிந்துக் கொண்டு;
இரவைக்கண்டு
இருளைக் கொண்டு
இடுக்கில் மூட்டை!  

ஒழிப்பதற்கு
விழித்திருந்தாலும்
கடித்துவிட்டுக்
கடுபேற்றிவிட்டுச் செல்லும்!

இரக்கமே இல்லாமல்
இமை மூட மறுக்கும்
உறக்கத்திற்கு;
கட்டித்தழுவும் நேரத்திலே
கொட்டிவிட்டுச் செல்லும்;
குருதியைக் குடித்துவிட்டுச் செல்லும்!

3 comments:

  1. muttai kadiyum oru sugam thane saudiyil

    ReplyDelete
  2. இன்னும் சற்று கெட்ட வார்த்தை பயன் படுத்தி திட்டி இருக்கலாம் இந்த மூட்டையை :)

    ReplyDelete