இதயம் திக்கும்..வாழ வழியில்லாமல்
வழிக் காட்டும்
வலிக் கொடுக்கும்
வெளிநாட்டில் நான்!

விட்டுச் சென்ற
நம் நினைவுகள்;
இரவினில் கதவைத் தொட்டு
இமைகளை தட்டும் – கண்ணீரால்
இதயம் திக்கும்!

வாயில்லாத் தலையணை
வசதியாய் இருக்கும்
வாய்பொத்தி அழுவதற்கு!

நீண்ட நேரம்
பேசினாலும் சுற்றிச் சுற்றி
வருவாய் சுருக்கமாய் முடிப்பாய்;
வலைப்போடும் வளைகுடாவிலிருந்து
வருவது எப்போது – உன்
விடுமுறை எப்போது!

சோர்ந்துப் போய்
சாய்ந்து உட்காரும் நேரத்தில்
மருந்தாய் மனதிற்கு
விருந்தாய் உன் நினைவுகள்!

காதோடு சூடேற்றும் கைப்பேசியும்
மடியோடு முகாமிட்டிறுக்கும்
மடிக்கணிணியும் மாற்றுச்சீட்டாய்
வெட்டுப்படும் தனிமைக்குத்
துணையாய்!


வாழ வழியில்லாமல்
வழிக் காட்டும்
வலிக் கொடுக்கும்
வெளிநாட்டில் நான்!

விட்டுச் சென்ற
நம் நினைவுகள்;
இரவினில் கதவைத் தொட்டு
இமைகளை தட்டும் – கண்ணீரால்
இதயம் திக்கும்!

வாயில்லாத் தலையணை
வசதியாய் இருக்கும்
வாய்பொத்தி அழுவதற்கு!

நீண்ட நேரம்
பேசினாலும் சுற்றிச் சுற்றி
வருவாய் சுருக்கமாய் முடிப்பாய்;
வலைப்போடும் வளைகுடாவிலிருந்து
வருவது எப்போது – உன்
விடுமுறை எப்போது!

சோர்ந்துப் போய்
சாய்ந்து உட்காரும் நேரத்தில்
மருந்தாய் மனதிற்கு
விருந்தாய் உன் நினைவுகள்!

காதோடு சூடேற்றும் கைப்பேசியும்
மடியோடு முகாமிட்டிறுக்கும்
மடிக்கணிணியும் மாற்றுச்சீட்டாய்
வெட்டுப்படும் தனிமைக்குத்
துணையாய்!

2 comments:

  1. வெளிநாட்டுத் தனிமை !! சோகம் இழையோடும் வரிகள்...

    ReplyDelete
  2. ஸலாம்

    மனதுக்கு கஷ்டமா இருக்கு .. வெளிநாடு வாழ்கையை பற்றி நினைத்தால் ...

    ReplyDelete