கனமானக் காலணியும்
காய்ச்சிப் போன கரமும்;
நெருங்கும் போதே
நெடியேற்றும்!
முகம் சுழித்து;
விரல் இடுக்கில் சுவாசத்திற்கு
சிக்கித்தவிக்கும் மூக்கு;
வாசத்திற்கு!
நாற்றத்திலே
நகர்வலம்;
அறிந்தவருக்கு
தெரிந்திடுமோ என்று
முகம்மூடி வாய்மூடிய
”பல்தியா”க்காரன்!
உறவுகளின் வளத்திற்கு
குளமானக் கண்களுடன்;
கொல்லும் சோகங்களுக்கு
இடையே மினுமினுக்கும்
குடும்பங்கள்!
கறைப்படிந்த என் ஆடைகள்
குடும்பத்தை கரைச் சேர்க்கும்;
குப்பை அள்ளும் நான்
குடும்பத்திற்கு கதாநாயகன்!
அழுக்குப்படிந்த என்
ஆடை குடும்பத்தின்
அடுப்பு உலைக் கொதிக்கும்;
கறுத்துப்போன என் முகமோ
பெருமிதத்தில் சிரிக்கும்!
Tweet
No comments:
Post a Comment