இப்படிக்குப் கைப்பேசி!கேட்கும்போதே
முணுமுணுக்கும்;
மனதோடு மணியடிக்கும்

தூரத்தைப் பாரமாக்காமல்
நேரத்தை விரயமாக்காமல்
பெருகிவிட்டச் சனத்தொகையில்
சுருங்கிவிட்டத் தொலைத்தொடர்பு!

சிரித்தப்படிச் சிணுங்கினாலும்
அகம் கனத்து
சினம் கொண்டு
புறம் நோக்குவார்கள்
எரிச்சலோடு எச்சிலை விழுங்கியவாறு
பெண்ணைப் பெற்றோர்!

கிள்ளுப்பிராண்டி கியாப்பிராண்டி
மறந்துப்போனப் பள்ளி மொட்டுகளும்;
சொல்லி விளையாடும்
செல் விளையாட்டு;
செல்லாத விளையாட்டு – யாருக்கும்
சொல்லாத விளையாட்டு!

ஒட்டிக்கொண்ட என்னை
வெட்டிவிட முடியாமல்
கட்டியழும் கல்லூரிக் கொழுந்துகள்!

அசிங்கங்களைப் படமெடுத்து
அதற்கும் படையெடுத்து;
துர்நாற்றத்தை சுவாசங்கொண்டு
அதற்கு விரசம் கொள்ளும்!

வளர்ச்சிக் காணும் உலகில்
கவர்ச்சிக் காட்டி
உங்கள் கைகளாலே
உங்கள் கண்ணைக் குத்தும்
விஞ்ஞான வாரிசு!

இப்படிக்குக் கைப்பேசி!


கேட்கும்போதே
முணுமுணுக்கும்;
மனதோடு மணியடிக்கும்

தூரத்தைப் பாரமாக்காமல்
நேரத்தை விரயமாக்காமல்
பெருகிவிட்டச் சனத்தொகையில்
சுருங்கிவிட்டத் தொலைத்தொடர்பு!

சிரித்தப்படிச் சிணுங்கினாலும்
அகம் கனத்து
சினம் கொண்டு
புறம் நோக்குவார்கள்
எரிச்சலோடு எச்சிலை விழுங்கியவாறு
பெண்ணைப் பெற்றோர்!

கிள்ளுப்பிராண்டி கியாப்பிராண்டி
மறந்துப்போனப் பள்ளி மொட்டுகளும்;
சொல்லி விளையாடும்
செல் விளையாட்டு;
செல்லாத விளையாட்டு – யாருக்கும்
சொல்லாத விளையாட்டு!

ஒட்டிக்கொண்ட என்னை
வெட்டிவிட முடியாமல்
கட்டியழும் கல்லூரிக் கொழுந்துகள்!

அசிங்கங்களைப் படமெடுத்து
அதற்கும் படையெடுத்து;
துர்நாற்றத்தை சுவாசங்கொண்டு
அதற்கு விரசம் கொள்ளும்!

வளர்ச்சிக் காணும் உலகில்
கவர்ச்சிக் காட்டி
உங்கள் கைகளாலே
உங்கள் கண்ணைக் குத்தும்
விஞ்ஞான வாரிசு!

இப்படிக்குக் கைப்பேசி!

No comments:

Post a Comment