நொண்டியடிக்கும் நினைவுகள்..


மணம் வீசும்
உன் உள்ளங்கையில்
மருதாணி ஜொலிக்கும்;
தொட்டுப்பார்த்து
தடம் ஏதும் கிட்டாமல்
தவியாய் தவிக்கும்!

இரவின் இருளில்
குமுறும் நெஞ்சம்;
நொண்டியடிக்கும்  என்
நினைவுகள் தேடும் தஞ்சம்!

கட்டியவள் உன்னை
அழவிட்டு;
அரபு நாட்டில் நான்;
பணம் என 
மனம் தேற்றினாலும்;
தினம்  என்பதேக்
கனமாகக் கடக்கும்!

மடல் கண்டு
மனம் ஏங்கும்;
முகம் சிரிக்க
உதடுகள் பிரியும்!

சுருங்கிப்போன
உலகத்தில் நாம் மட்டும்
தொலைவாக;
தொலைத்தொடர்பு  இருந்தாலும்
தொலையாத நம் பாரம்!

விலகி நிற்கும்
நம் பிள்ளை;
பழகிவிட எத்தனித்தாலும்
பயந்து ஓடுவான்!

விடைக்கொடுக்க
நினைக்கும் போது
வழி மறித்து நிற்கிறான்!

பாசங்களை
பலிக்கொடுத்துவிட்டு
பாலைக்குச் செல்கிறேன்!

மணம் வீசும்
உன் உள்ளங்கையில்
மருதாணி ஜொலிக்கும்;
தொட்டுப்பார்த்து
தடம் ஏதும் கிட்டாமல்
தவியாய் தவிக்கும்!

இரவின் இருளில்
குமுறும் நெஞ்சம்;
நொண்டியடிக்கும்  என்
நினைவுகள் தேடும் தஞ்சம்!

கட்டியவள் உன்னை
அழவிட்டு;
அரபு நாட்டில் நான்;
பணம் என 
மனம் தேற்றினாலும்;
தினம்  என்பதேக்
கனமாகக் கடக்கும்!

மடல் கண்டு
மனம் ஏங்கும்;
முகம் சிரிக்க
உதடுகள் பிரியும்!

சுருங்கிப்போன
உலகத்தில் நாம் மட்டும்
தொலைவாக;
தொலைத்தொடர்பு  இருந்தாலும்
தொலையாத நம் பாரம்!

விலகி நிற்கும்
நம் பிள்ளை;
பழகிவிட எத்தனித்தாலும்
பயந்து ஓடுவான்!

விடைக்கொடுக்க
நினைக்கும் போது
வழி மறித்து நிற்கிறான்!

பாசங்களை
பலிக்கொடுத்துவிட்டு
பாலைக்குச் செல்கிறேன்!

No comments:

Post a Comment