மறந்த அத்தியாயம்கொழுத்த வயதில் செழித்து;
உறவுகளால் திளைத்தப் பருவம்
மாயமாகி தற்போது காயமாகி
இளமைக் காணாமல்!

அனுபவம் பெருத்து
இளமைக்கு
அனுமதி மறுத்து;
மீண்டும் திரும்பும்
மழலைப் பருவம்!

அந்நியோன்யத்தை இழந்து
ஆதரவு குறைந்து 
அகதியாய் தனித்துவிடப்பட்ட 
அத்தியாயம்!

தோய்ந்த வயதில்
சாய்ந்துக் கொள்ள
தோள்வேண்டும்;
தோள்கொடுக்கும்
முதியோர் இல்லத்தை
தாளிடவேண்டும்!

தள்ளாடும் வயதில்
திண்டாட்டம் எதற்கு;
கைக்கழுவும் பிள்ளைகளே
காரணம் இதற்கு!

கனம் சுமந்த
கடைக்கோடி இளமைக்கு
கரம்கொடுக்கத் தவறினால்
கருணை நபி கடுஞ்சாபம் இருக்கு
கொழுந்துவிட்டு எரியும்
நரகம் உனக்கு!


கொழுத்த வயதில் செழித்து;
உறவுகளால் திளைத்தப் பருவம்
மாயமாகி தற்போது காயமாகி
இளமைக் காணாமல்!

அனுபவம் பெருத்து
இளமைக்கு
அனுமதி மறுத்து;
மீண்டும் திரும்பும்
மழலைப் பருவம்!

அந்நியோன்யத்தை இழந்து
ஆதரவு குறைந்து 
அகதியாய் தனித்துவிடப்பட்ட 
அத்தியாயம்!

தோய்ந்த வயதில்
சாய்ந்துக் கொள்ள
தோள்வேண்டும்;
தோள்கொடுக்கும்
முதியோர் இல்லத்தை
தாளிடவேண்டும்!

தள்ளாடும் வயதில்
திண்டாட்டம் எதற்கு;
கைக்கழுவும் பிள்ளைகளே
காரணம் இதற்கு!

கனம் சுமந்த
கடைக்கோடி இளமைக்கு
கரம்கொடுக்கத் தவறினால்
கருணை நபி கடுஞ்சாபம் இருக்கு
கொழுந்துவிட்டு எரியும்
நரகம் உனக்கு!

No comments:

Post a Comment