உண்மையான அன்பு..
முகம் இரண்டும்
விலகிச் செல்ல;
முதுகு இரண்டும்
ஒட்டிக் கொள்ள;
கட்டுப்பட்டோம் ஆங்கிலத்திற்கு;
“ஈகோஎன்ற ஒர் எழுத்துக்கு!

துண்டுப்பட்ட மனம் மட்டும்
விம்மி விம்மிக் கதற;
மெண்டு விழுங்கும்
நினைவுகளோ உன்னைக்
கண்டப்படித் தேட!

வீங்கிப்போனப் பாசத்தாலே
வெடித்து நிற்கும் பிரிவு;
நீர்த்துப்போகும் சண்டை
மட்டும் அணுதினமும் வரவு!

தனித்து நின்று
நினைத்துப் பார்த்தால்
சினம்கூடத் தணிந்துப் போகும்;
கனம்கூட இனித்துப் போகும்!

முற்றிப்போன அன்பினாலே
தொட்டதெற்கெல்லாம் வம்பு;
கண்பட்டவுடன் கலைந்துப் போகும்
மாயமென்ன இயம்பு!

தோற்று ஓடட்டும்
நாற்றமெடுக்கும் கோபம்;
மனம் கசந்து முகம் சிவந்தால்
யாருக்கென்ன இலாபம்!முகம் இரண்டும்
விலகிச் செல்ல;
முதுகு இரண்டும்
ஒட்டிக் கொள்ள;
கட்டுப்பட்டோம் ஆங்கிலத்திற்கு;
“ஈகோஎன்ற ஒர் எழுத்துக்கு!

துண்டுப்பட்ட மனம் மட்டும்
விம்மி விம்மிக் கதற;
மெண்டு விழுங்கும்
நினைவுகளோ உன்னைக்
கண்டப்படித் தேட!

வீங்கிப்போனப் பாசத்தாலே
வெடித்து நிற்கும் பிரிவு;
நீர்த்துப்போகும் சண்டை
மட்டும் அணுதினமும் வரவு!

தனித்து நின்று
நினைத்துப் பார்த்தால்
சினம்கூடத் தணிந்துப் போகும்;
கனம்கூட இனித்துப் போகும்!

முற்றிப்போன அன்பினாலே
தொட்டதெற்கெல்லாம் வம்பு;
கண்பட்டவுடன் கலைந்துப் போகும்
மாயமென்ன இயம்பு!

தோற்று ஓடட்டும்
நாற்றமெடுக்கும் கோபம்;
மனம் கசந்து முகம் சிவந்தால்
யாருக்கென்ன இலாபம்!

4 comments:

 1. தாங்களின் கவிதைக்குள் ஒரு சார்புநிலையும் உள்ளது. ஆமாம் அனுபவம் தானே ஆசான்
  அன்புடன்
  அ.மு.அன்வர் சதாத்

  ReplyDelete
 2. கவிதை அழகாய் சொல்லபட்டு இருக்கிறது . ஒரு சில் எழுத்துப் பிழைகள் இருக்க கூடும்.
  கவனித்தால் இன்னும் அழகாய் இருக்கும்.

  ReplyDelete
 3. முற்றிப்போன அன்பினாலே
  தொட்டதெற்கெல்லாம் வம்பு;--- unmai...

  ReplyDelete
 4. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி mum அவர்களே.

  ReplyDelete