எங்கள் எலும்புகள்..விதைக்கப்பட்ட எங்கள்
தியாகங்கள் இன்று
இருட்டறையில் அடைக்கப்பட்டு;
வரலாற்றில் அழிக்கப்பட்டு!

எங்கள் எலும்புகள்
கொடிக்கு கம்பமாய்;
வெற்றிக்கு பிம்பமாய்;
தியாகிகள் என்றப் பெயருக்கு
ஜம்பமாய்!

அடிமையை எதிர்த்து
கொடுமைக்குக் கொதித்து;
புனிதப்போர் என முழக்கமிட்டு  
முழந்தாளிட்டு முத்தமிட்டு
உயிர்விட்ட உத்தம சமூகம்!


செதுக்கப்பட்ட எங்கள் வரலாறுகள்
புதைக்கப்பட்டு இன்று
நாங்கள் புறந்தள்ளப்பட்டு;
அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டு!

சோரம் போன வீரமும்
மாண்டுப்போன நீதியும்
சேர்ந்துப் போனதால்
உரிமைக்குக் குரல்கொடுத்து
இன்று வீதியில் நாங்கள்!


விதைக்கப்பட்ட எங்கள்
தியாகங்கள் இன்று
இருட்டறையில் அடைக்கப்பட்டு;
வரலாற்றில் அழிக்கப்பட்டு!

எங்கள் எலும்புகள்
கொடிக்கு கம்பமாய்;
வெற்றிக்கு பிம்பமாய்;
தியாகிகள் என்றப் பெயருக்கு
ஜம்பமாய்!

அடிமையை எதிர்த்து
கொடுமைக்குக் கொதித்து;
புனிதப்போர் என முழக்கமிட்டு  
முழந்தாளிட்டு முத்தமிட்டு
உயிர்விட்ட உத்தம சமூகம்!


செதுக்கப்பட்ட எங்கள் வரலாறுகள்
புதைக்கப்பட்டு இன்று
நாங்கள் புறந்தள்ளப்பட்டு;
அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டு!

சோரம் போன வீரமும்
மாண்டுப்போன நீதியும்
சேர்ந்துப் போனதால்
உரிமைக்குக் குரல்கொடுத்து
இன்று வீதியில் நாங்கள்!

2 comments:

  1. //உரிமைக்குக் குரல்கொடுத்து
    இன்று வீதியில் நாங்கள்!//

    நெகிழ செய்யும் வரிகள்....அருமை.

    ReplyDelete
  2. நிச்சயமாய எங்கள் எலும்புகள் கொடிக்கம்பமாய் மாறும். அருமையான கவிதை.

    ReplyDelete