மலரும் நினைவுகள்...


தற்காலிகம் என்றொரு வார்த்தை
மட்டும் நிரந்தரமாய்;
சுதந்திரமான நம்
நினைவுகள் நிழற்படமாய்!

மலரும் நினைவுகள்
மனதைப் பிழிய
கன்னத்தை பதம் பார்க்கும்
கண்ணீர்த் துளிகள்!

புற்களும் பற்களைக்
காட்டும் வறண்டப் பாலையில்
வாழையடி வாழையாக -இப்படி
வாழாவெட்டியாக!

புத்தம் புது வியாதிகள்
போர்கொடிக் காட்டும்;
கெட்டியாகப் பிடித்தப் பணமும்
கொட்டியாக வேண்டும்
மருத்துவருக்குக் கட்டியாகவேண்டும்!

மாதவருமானம் மணித்துளிகளில்
காணாமல் போக
என் விடுமுறையும்
கானலாகப் போக!

விடுமுறை எப்போ என்ற
உன் குரல் மட்டும்
செவிகளில் எதிரொலிக்கும்
பதிலளிக்க முனையும் போதெல்லாம்
படுத்தப் படுக்கையாய் என் நாவு!

தற்காலிகம் என்றொரு வார்த்தை
மட்டும் நிரந்தரமாய்;
சுதந்திரமான நம்
நினைவுகள் நிழற்படமாய்!

மலரும் நினைவுகள்
மனதைப் பிழிய
கன்னத்தை பதம் பார்க்கும்
கண்ணீர்த் துளிகள்!

புற்களும் பற்களைக்
காட்டும் வறண்டப் பாலையில்
வாழையடி வாழையாக -இப்படி
வாழாவெட்டியாக!

புத்தம் புது வியாதிகள்
போர்கொடிக் காட்டும்;
கெட்டியாகப் பிடித்தப் பணமும்
கொட்டியாக வேண்டும்
மருத்துவருக்குக் கட்டியாகவேண்டும்!

மாதவருமானம் மணித்துளிகளில்
காணாமல் போக
என் விடுமுறையும்
கானலாகப் போக!

விடுமுறை எப்போ என்ற
உன் குரல் மட்டும்
செவிகளில் எதிரொலிக்கும்
பதிலளிக்க முனையும் போதெல்லாம்
படுத்தப் படுக்கையாய் என் நாவு!

1 comment:

  1. macha amazing da
    never back our life
    miss u da.....

    ReplyDelete