புரியாதத் தத்துவம்புரியாதத் தத்துவம்
புருவங்களை உயர்த்தும்;
ரணம் கொடுக்கும் வார்த்தைகளை
தினம் தொடுக்கும் அறிவாளிகள்!

சமதர்ம சமாதனப் பேச
மிடுக்கு ஆடையுடன்
ஒலிக்கும் குரல்
தரங்கெட்ட தரணியிடமிருந்து!

அனாச்சாரத்தில் அமர்ந்து
கலாச்சாரத்தைப் உரைக்கும்;
உலகத்திற்கு எப்போது உறைக்கும்!

மூடிச் செல்லும் எங்களுக்கு
முத்திரையிடும் உலகம்;
பெண்ணடிமை என்று!

மாற்று வண்ணத்தில்
வேற்று மக்கள் அணிந்தால்
ஒட்டுப்போடும் உலகம்;
நாங்கள் அணிந்தால் மட்டும்
வேட்டு வைக்கும் கிரகம்!

காட்டாறு உணர்வுக்கு
அணைப்போட நினைத்து;
அணைத்ததை படம்பிடித்த
பத்திரிக்கைக் கதையுண்டு இங்கே
பாதிரியார்கள் கன்னிகாஸ்திரி
பாதங்கள் கோலம் போடும் அங்கே!

நித்திரையைக் கெடுக்கும்
உன் மனதிற்க்காக நான்
முகத்திரையிட்டு வந்தேன்;
ஆபாசத்திற்கு முத்திரையிட்டுள்ளேன்!

ஒழுக்கத்திற்கு உடையிட்டு
நடைப்போட்டு வந்தோம்;
எதிர்புக்குரல் ஒலித்தாலும்
எதிர்த்து நின்று ஜெயிப்போம்!


புரியாதத் தத்துவம்
புருவங்களை உயர்த்தும்;
ரணம் கொடுக்கும் வார்த்தைகளை
தினம் தொடுக்கும் அறிவாளிகள்!

சமதர்ம சமாதனப் பேச
மிடுக்கு ஆடையுடன்
ஒலிக்கும் குரல்
தரங்கெட்ட தரணியிடமிருந்து!

அனாச்சாரத்தில் அமர்ந்து
கலாச்சாரத்தைப் உரைக்கும்;
உலகத்திற்கு எப்போது உறைக்கும்!

மூடிச் செல்லும் எங்களுக்கு
முத்திரையிடும் உலகம்;
பெண்ணடிமை என்று!

மாற்று வண்ணத்தில்
வேற்று மக்கள் அணிந்தால்
ஒட்டுப்போடும் உலகம்;
நாங்கள் அணிந்தால் மட்டும்
வேட்டு வைக்கும் கிரகம்!

காட்டாறு உணர்வுக்கு
அணைப்போட நினைத்து;
அணைத்ததை படம்பிடித்த
பத்திரிக்கைக் கதையுண்டு இங்கே
பாதிரியார்கள் கன்னிகாஸ்திரி
பாதங்கள் கோலம் போடும் அங்கே!

நித்திரையைக் கெடுக்கும்
உன் மனதிற்க்காக நான்
முகத்திரையிட்டு வந்தேன்;
ஆபாசத்திற்கு முத்திரையிட்டுள்ளேன்!

ஒழுக்கத்திற்கு உடையிட்டு
நடைப்போட்டு வந்தோம்;
எதிர்புக்குரல் ஒலித்தாலும்
எதிர்த்து நின்று ஜெயிப்போம்!

5 comments:

 1. //நித்திரையைக் கெடுக்கும்
  உன் மனதிற்க்காக நான்
  முகத்திரையிட்டு வந்தேன்;
  ஆபாசத்திற்கு முத்திரையிட்டுள்ளேன்//

  எனக்கு பிடித்த வரிகள்

  ReplyDelete
 2. நான் பின் தொடர்வதில் அம்பதாவது

  ReplyDelete
 3. உங்கள போல ஒரு ஆள தான் தேடிக்கிட்டு இருந்தோம். இணயதொட நிறுதிடுவீங்களா? இல்ல புத்தக மார்க்கமா வருவீங்களா? அதுக்காக சினிமா பக்கம் போயிட மாட்டீங்கணு நம்புறேன்.

  and

  நீங்க உங்க Blog ல உள்ள கவிதைகல Category யா பிரிச்சு போடலாமே. Label பண்ணுங்க.

  ReplyDelete
 4. masha allah brother Yaser............... good

  May allah increase u in knowledge

  ReplyDelete