சினம் தணியாதுகல்லான மனமும்
கனியும் எங்கள்
கதைக் கேட்டால்;
இறுக்க மூடியிருக்கும்
இறுக்கமான மனிதாபிமானத்தின்
செவிப்பறைகள்!

மூடியிருக்கும்
உலகத்தின் கதவுகள்;
இனித் தட்டப்போவதில்லை
தகர்த்தெறிவோம்!

வெறிப்பிடித்த உனக்கு
வெள்ளை மாளிகையில்
வரவேற்பு;
இடம் கொடுத்த எங்களுக்கு
கழுத்தறுப்பு!

கொட்டித் தீர்த்தாலும்
குண்டுமழையை;
கொன்றுக் குவித்தாலும்
எங்களை;
கரம்பிடித்தக் கற்களை
உன் குருதிப்பார்க்காமல்;
எங்கள் சினம் தணியாது
இனம் அழியாது!

மானம் காக்க வீரமுண்டு;
மடிந்துவிட்டால் சுவர்கமுண்டு;
இலையாய் இருந்து மிதிபடுவதைவிட
எறும்பாய் மாறி கடிப்பதே மேல்!


கல்லான மனமும்
கனியும் எங்கள்
கதைக் கேட்டால்;
இறுக்க மூடியிருக்கும்
இறுக்கமான மனிதாபிமானத்தின்
செவிப்பறைகள்!

மூடியிருக்கும்
உலகத்தின் கதவுகள்;
இனித் தட்டப்போவதில்லை
தகர்த்தெறிவோம்!

வெறிப்பிடித்த உனக்கு
வெள்ளை மாளிகையில்
வரவேற்பு;
இடம் கொடுத்த எங்களுக்கு
கழுத்தறுப்பு!

கொட்டித் தீர்த்தாலும்
குண்டுமழையை;
கொன்றுக் குவித்தாலும்
எங்களை;
கரம்பிடித்தக் கற்களை
உன் குருதிப்பார்க்காமல்;
எங்கள் சினம் தணியாது
இனம் அழியாது!

மானம் காக்க வீரமுண்டு;
மடிந்துவிட்டால் சுவர்கமுண்டு;
இலையாய் இருந்து மிதிபடுவதைவிட
எறும்பாய் மாறி கடிப்பதே மேல்!

No comments:

Post a Comment