கண்கூசும் கடமைகள்..
பிணி மறந்து
பணிச் செய்வேன்;
உறக்கத்திலும்
கிறக்கமாகவே இருக்கும்
பணிச் சுமைப் பனியாக!

கணிப்பொறி எனும்
பொறிக்குள் அகப்பட்டதால்;
வலுவிழந்த விழிகளுக்கு
மானம் காக்கும் சட்டையாக
மூக்குக் கண்ணாடி!

எழுவதற்குக் கரம் நோக்கும்
மழலையாக - பாராட்டு எனும்
தாலாட்டிற்காக ஏங்கும்
இன்னொருக் குழந்தை!

தட்டிக்கொடுக்க வேண்டியத்
தலைமையோ தலையில்
தட்டித்தடுக்கும்!

பிடிக்காத அரசியல்
அலுவலகத்திற்குப்
பிடித்துப்போனதால்;
ஒட்டுரிமை இழந்த
வாக்காளனாக!

உறக்கம் தொலைத்த
உழைப்பை;
தான் செய்யாததை;
நான் செய்ததை;
என் தலைமை செய்ததாகக்
அவர் தலைமையிடம் உரைக்கும்!

மனமொடிந்து கண நேரமாகாது
காலத்தோடு வீடு நான் சேர - ஆனால்
கண்கூசும் கடமைகள்
மனமொடிந்த மனதிற்கு மருந்தாய்!

வழியில்லாமல் வலிக்கொண்டுப்
பழிச்சுமந்துப் பலியாகப்
பாலையில்!பிணி மறந்து
பணிச் செய்வேன்;
உறக்கத்திலும்
கிறக்கமாகவே இருக்கும்
பணிச் சுமைப் பனியாக!

கணிப்பொறி எனும்
பொறிக்குள் அகப்பட்டதால்;
வலுவிழந்த விழிகளுக்கு
மானம் காக்கும் சட்டையாக
மூக்குக் கண்ணாடி!

எழுவதற்குக் கரம் நோக்கும்
மழலையாக - பாராட்டு எனும்
தாலாட்டிற்காக ஏங்கும்
இன்னொருக் குழந்தை!

தட்டிக்கொடுக்க வேண்டியத்
தலைமையோ தலையில்
தட்டித்தடுக்கும்!

பிடிக்காத அரசியல்
அலுவலகத்திற்குப்
பிடித்துப்போனதால்;
ஒட்டுரிமை இழந்த
வாக்காளனாக!

உறக்கம் தொலைத்த
உழைப்பை;
தான் செய்யாததை;
நான் செய்ததை;
என் தலைமை செய்ததாகக்
அவர் தலைமையிடம் உரைக்கும்!

மனமொடிந்து கண நேரமாகாது
காலத்தோடு வீடு நான் சேர - ஆனால்
கண்கூசும் கடமைகள்
மனமொடிந்த மனதிற்கு மருந்தாய்!

வழியில்லாமல் வலிக்கொண்டுப்
பழிச்சுமந்துப் பலியாகப்
பாலையில்!

No comments:

Post a Comment