நரை விழுந்துத்
தடைப் போடும் நடை
வந்தாலும் குடையாக;
நிழற் கொடுக்க வேண்டும்!
நீ வெட்கப்பட்ட
நாட்களை நான்
சொல்லிக்காட்ட வேண்டும்
நீ மீண்டும் வெட்கப்பட வேண்டும்!
வாழத் தவறிய
நாட்களுக்கு மாற்றாக
உன் தோளில் சாய வேண்டும்;
நம் பொய்ச்சாயம்
கழைய வேண்டும்!
உன் சுருங்கிப் போன
சருமத்தில் நான்
சாய்ந்துக் கொள்ளவேண்டும்;
முடியாத உன் சுவாசம்
எனக்குத் தலைச் சீவவேண்டும்!
ஓடி ஆடி விளையாட முடியா
குழந்தையாக இன்று;
குழந்தைப் பெற வேண்டிய
வயதில்; வளைகுடாவில் அன்று! Tweet
No comments:
Post a Comment