அனாதை நாட்டிலிருந்து..கலங்கியக் கண்ணீரை
விளங்காத உலகம்;
குளம் கண்டக் கண்கள்
பசிக்கொண்ட ஏக்கம்!

குண்டுச்சத்தங்கள் எங்கள்
செவிப்பரையைக் கிழிக்க;
கொத்துக் கொத்தாய்
எங்களை அழிக்க!

மனவியாதிக் கொண்ட
தலைமுறை உருவெடுக்க;
ஒட்டுமொத்த உலகத்தின்
மனிதநேயங்களை கருவறுக்க!

படிக்கவேண்டிய நாங்கள்
பசிக்குத் துடித்துக்கொண்டிருக்க;
பத்திரிக்கைகளோப் படம் எடுத்துப்
பணம் படைத்துக்கொண்டிருக்க!

அழுவதற்குப் பலமில்லாமல்
பழுதுப்பட்ட வயிறுடன்
பாவப்பட்டப் பார்வையுடன்
ஏங்கிக் கொண்டிருக்கும்
ஏழைக்குழந்தை;
அங்கீகாரம் அளிக்கப்பட்ட
அனாதை நாட்டிலிருந்து;
ஆப்கானிஸ்தானிலுருந்து!


கலங்கியக் கண்ணீரை
விளங்காத உலகம்;
குளம் கண்டக் கண்கள்
பசிக்கொண்ட ஏக்கம்!

குண்டுச்சத்தங்கள் எங்கள்
செவிப்பரையைக் கிழிக்க;
கொத்துக் கொத்தாய்
எங்களை அழிக்க!

மனவியாதிக் கொண்ட
தலைமுறை உருவெடுக்க;
ஒட்டுமொத்த உலகத்தின்
மனிதநேயங்களை கருவறுக்க!

படிக்கவேண்டிய நாங்கள்
பசிக்குத் துடித்துக்கொண்டிருக்க;
பத்திரிக்கைகளோப் படம் எடுத்துப்
பணம் படைத்துக்கொண்டிருக்க!

அழுவதற்குப் பலமில்லாமல்
பழுதுப்பட்ட வயிறுடன்
பாவப்பட்டப் பார்வையுடன்
ஏங்கிக் கொண்டிருக்கும்
ஏழைக்குழந்தை;
அங்கீகாரம் அளிக்கப்பட்ட
அனாதை நாட்டிலிருந்து;
ஆப்கானிஸ்தானிலுருந்து!

No comments:

Post a Comment