திரும்பாதப் பக்கங்கள்திரும்பாதப் பக்கங்கள்;
முடித்துவிட எத்தனித்து
முற்றுப்புள்ளி வைத்து;
தொடர்கதையானக்
கறுப்புச் சரித்திரங்கள்!

விளையும் கதிரை
அறுவடைச் செய்து;
மவுனமாய் அஞ்சலி
மட்டும் செலுத்திவிட்டு;
மரணித்துப்போகும்
மனித நேயங்கள்!

பெட்டிற்குள் வைத்து
மண்ணிற்குள் புதைக்கும்
மொட்டுகள் விதைகளா
இல்லை தொடர்கதைகளா!

வாய்விட்டுக் கதறும்
உணர்ச்சிப்பெருக்கிற்கு
வாயடைத்துப் போகும்
வரலாறுகள்!

கொன்றவன் கொடியவன்;
தடுக்காமல் குரல் கொடுக்காமல்
உலக நாடுகளின்
மயான அமைதி அதனினும்
கொடியது!


திரும்பாதப் பக்கங்கள்;
முடித்துவிட எத்தனித்து
முற்றுப்புள்ளி வைத்து;
தொடர்கதையானக்
கறுப்புச் சரித்திரங்கள்!

விளையும் கதிரை
அறுவடைச் செய்து;
மவுனமாய் அஞ்சலி
மட்டும் செலுத்திவிட்டு;
மரணித்துப்போகும்
மனித நேயங்கள்!

பெட்டிற்குள் வைத்து
மண்ணிற்குள் புதைக்கும்
மொட்டுகள் விதைகளா
இல்லை தொடர்கதைகளா!

வாய்விட்டுக் கதறும்
உணர்ச்சிப்பெருக்கிற்கு
வாயடைத்துப் போகும்
வரலாறுகள்!

கொன்றவன் கொடியவன்;
தடுக்காமல் குரல் கொடுக்காமல்
உலக நாடுகளின்
மயான அமைதி அதனினும்
கொடியது!

1 comment:

  1. வலி கொண்ட சரித்திரங்கள் மனப்பதிவாய்...........நன்றி .

    ReplyDelete