அனாதை விடுதி..



இறுகிப்போன இதயமும்
சுருங்கிப்போன முகமும்;
காலாற நடைப்போட
கரம் இன்னொரு தோள் தேட!
வயதாகிவிட்டதென பல்
பல் இளிக்க!

கனமாக உள்ளேன் என்று
கண்காணாத் ஆசிரமத்தில்
என்னை இறக்கிவிட்டு
பறக்கத் துடித்தான்
நான் சுமந்தப் பிள்ளை!

அவனைச் சுமந்தக் காலங்கள்
சுகமாய் நினைத்து;
வலியால் விழிக் கக்கும்
நீரையும் துடைத்துவிட்டு
பின் சிரித்துவிட்டு! 

மலர்ந்த நினைவுகள்
இறந்துப் போக ;
வளர்ந்தப் பிள்ளையின்
மனமோ கல்லாகிப் போக!

விம்மிய அழுகையை
விரலில் பொத்திக் கொண்டு;
கம்மியக் குரலில்
மெல்லமாய் அழைத்துவிட்டு
அவனை அணைத்துவிட்டு 
அழுதுவிட்டு சொன்னேன்
"உடம்பைக் கவனிச்சிக்கோ"


இறுகிப்போன இதயமும்
சுருங்கிப்போன முகமும்;
காலாற நடைப்போட
கரம் இன்னொரு தோள் தேட!
வயதாகிவிட்டதென பல்
பல் இளிக்க!

கனமாக உள்ளேன் என்று
கண்காணாத் ஆசிரமத்தில்
என்னை இறக்கிவிட்டு
பறக்கத் துடித்தான்
நான் சுமந்தப் பிள்ளை!

அவனைச் சுமந்தக் காலங்கள்
சுகமாய் நினைத்து;
வலியால் விழிக் கக்கும்
நீரையும் துடைத்துவிட்டு
பின் சிரித்துவிட்டு! 

மலர்ந்த நினைவுகள்
இறந்துப் போக ;
வளர்ந்தப் பிள்ளையின்
மனமோ கல்லாகிப் போக!

விம்மிய அழுகையை
விரலில் பொத்திக் கொண்டு;
கம்மியக் குரலில்
மெல்லமாய் அழைத்துவிட்டு
அவனை அணைத்துவிட்டு 
அழுதுவிட்டு சொன்னேன்
"உடம்பைக் கவனிச்சிக்கோ"

2 comments:

  1. மிக சிறப்பான கவிதை! உணர்வுகளை படம்பிடித்து காட்டிய வரிகள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. மிக்க நன்றி சுரேஷ் அவர்களே.

    ReplyDelete