எல்லைத் தாண்டிய பயங்கரவாதம்,

கடக்கும்
காலங்களுக்கு நடுவே
கானல் நீராய் நம்
உறவுகள்!!
 
 
போருக்குச் செல்வதைப் போலவே
புறப்படுகிறோம் 
நாட்டை விட்டு;
நாதியற்று!!
 
 
வயதின்
முக்கால்வாசி
முடிந்துவிட்டது
கவலைபட்டே;
சிரிக்கும் கொஞ்ச நேரமும்
சில்லறைக்காக ஏங்குகிறது
கறைந்துவிடுமோ கைப்பேசியின் தொகை!!
 
 
நீரிலே மிதக்கும் 
என் விழிகள்;
நீயில்லாமல் தடுமாறும்
என் வழிகள்!!
 
 
அனல் காற்றும்
அங்கலாய்க்கும் என்
உள்ள சூட்டினைக் கண்டு!!
 
 
பணம் மட்டும்
குறிக்கோளாய்
பலநாள்;
சேர்த்து சேர்த்துப்
பார்த்தாலும்
சேரவில்லை எதுவும்;
என்னையும் உன்னையும் போல்!!
 
 
பள்ளிக்குச் செல்லும்
பிள்ளையும்;
பாடப்புத்தகத்தில் என் 
புகைப்படம்;
அத்தாவை அறிமுகப்படுத்த!!
 
 
நெடுநாள் கழித்து
நாடு திரும்பியதால்
புகைப்படத்தோடு என்னை
பொருத்தம் பார்க்கும் என் பிள்ளை!!
 
 
எல்லோரும் சிரித்தாலும்
எல்லைத் தாண்டிய
பயங்கரவாதம் இதுதான்;
கொஞ்சி
கெஞ்சிப் பார்த்தாலும்
சொல்ல மறுக்கும் என் பிள்ளை
அத்தா என்று புகைப்படத்தைத் தவிர்த்து!!
கடக்கும்
காலங்களுக்கு நடுவே
கானல் நீராய் நம்
உறவுகள்!!
 
 
போருக்குச் செல்வதைப் போலவே
புறப்படுகிறோம் 
நாட்டை விட்டு;
நாதியற்று!!
 
 
வயதின்
முக்கால்வாசி
முடிந்துவிட்டது
கவலைபட்டே;
சிரிக்கும் கொஞ்ச நேரமும்
சில்லறைக்காக ஏங்குகிறது
கறைந்துவிடுமோ கைப்பேசியின் தொகை!!
 
 
நீரிலே மிதக்கும் 
என் விழிகள்;
நீயில்லாமல் தடுமாறும்
என் வழிகள்!!
 
 
அனல் காற்றும்
அங்கலாய்க்கும் என்
உள்ள சூட்டினைக் கண்டு!!
 
 
பணம் மட்டும்
குறிக்கோளாய்
பலநாள்;
சேர்த்து சேர்த்துப்
பார்த்தாலும்
சேரவில்லை எதுவும்;
என்னையும் உன்னையும் போல்!!
 
 
பள்ளிக்குச் செல்லும்
பிள்ளையும்;
பாடப்புத்தகத்தில் என் 
புகைப்படம்;
அத்தாவை அறிமுகப்படுத்த!!
 
 
நெடுநாள் கழித்து
நாடு திரும்பியதால்
புகைப்படத்தோடு என்னை
பொருத்தம் பார்க்கும் என் பிள்ளை!!
 
 
எல்லோரும் சிரித்தாலும்
எல்லைத் தாண்டிய
பயங்கரவாதம் இதுதான்;
கொஞ்சி
கெஞ்சிப் பார்த்தாலும்
சொல்ல மறுக்கும் என் பிள்ளை
அத்தா என்று புகைப்படத்தைத் தவிர்த்து!!

No comments:

Post a Comment