முத்தம் முதலில் கைப்பேசிக்குத்தான்,,

கணவனானேன்!
இப்போது
கனவுகளில் மட்டும்
வாழ்பவனானேன்!!
 
 
திக்கித் திக்கிப் பேசும்
என் மழலையின்
திகட்டாத மொழியும்;
 
 
தத்தித் தடுமாறி
பிஞ்சுக் கால்களால் என்
நெஞ்சில் நிற்பதையும்
நினைத்து நினைத்துக்
களைத்துப் போனேன்!!
 
 
மாதந்தவறாமல்
பணம் அனுப்பி
வசதி பெருகியது;
வாழ்க்கைச் சுருங்கியது!!
 
 
பாலைவனத் தோழர்களுடன்
சிரித்து சிரித்துப் பேசினாலும்
உடல் மட்டுமே குலுங்கும்
உள்ளம் என்றுமே குமுறும்!!
 
 
வாய்களினாலே
வாழ்க்கை நடக்கும்;
சப்தத்தால் எப்படி பெருகும்
சந்ததி;
முத்தம் முதலில் கைப்பேசிக்குத்தான்!!
 
 
கண்களைக்
கடந்துப் போகும் என்
கண்ணீர்...
சப்தம் போட்டால் மட்டுமே
உனக்குத் தெரியும்;
சந்தடியே இல்லாமல் என் கைப்பேசி
கண்ணீர் மழையில்!!
 
 
புதியதாகவே உன்
புகைப்படம்
ஒவ்வொரு நாளும்!
 
 
புதைந்துப் போயிருக்கும் நீ;
என் உள்ளத்தில்;
அடுத்துப்
புகைப்படமாய் என்
பெட்டிக்குள்!!!
கணவனானேன்!
இப்போது
கனவுகளில் மட்டும்
வாழ்பவனானேன்!!
 
 
திக்கித் திக்கிப் பேசும்
என் மழலையின்
திகட்டாத மொழியும்;
 
 
தத்தித் தடுமாறி
பிஞ்சுக் கால்களால் என்
நெஞ்சில் நிற்பதையும்
நினைத்து நினைத்துக்
களைத்துப் போனேன்!!
 
 
மாதந்தவறாமல்
பணம் அனுப்பி
வசதி பெருகியது;
வாழ்க்கைச் சுருங்கியது!!
 
 
பாலைவனத் தோழர்களுடன்
சிரித்து சிரித்துப் பேசினாலும்
உடல் மட்டுமே குலுங்கும்
உள்ளம் என்றுமே குமுறும்!!
 
 
வாய்களினாலே
வாழ்க்கை நடக்கும்;
சப்தத்தால் எப்படி பெருகும்
சந்ததி;
முத்தம் முதலில் கைப்பேசிக்குத்தான்!!
 
 
கண்களைக்
கடந்துப் போகும் என்
கண்ணீர்...
சப்தம் போட்டால் மட்டுமே
உனக்குத் தெரியும்;
சந்தடியே இல்லாமல் என் கைப்பேசி
கண்ணீர் மழையில்!!
 
 
புதியதாகவே உன்
புகைப்படம்
ஒவ்வொரு நாளும்!
 
 
புதைந்துப் போயிருக்கும் நீ;
என் உள்ளத்தில்;
அடுத்துப்
புகைப்படமாய் என்
பெட்டிக்குள்!!!

No comments:

Post a Comment