வந்துவிட்டோம் வட்டத்திற்குள்,,,

மழுங்கிய மக்களை
விழுங்கிய இயக்கங்கள்;
மயக்கமான நெறி - காரணம்
இயக்கமான வெறி!!
 
 
தோய்ந்த மக்களை
தோள்கொடுத்துத்
தூக்கியது இயக்கம்;
இன்று
காலரைப் பிடிக்க அதே
தோள்களைத் தேடும்
இயக்கம்!!
 
 
கண்மணி நாயகம்
காட்டித் தந்த வழி;
இன்றுக்
கட்டித்தழுவி
சாக்கடைச்
சண்டை எங்கள்
சகோதரத்துவம்!! 
  
 
ஒரே இயக்கமென்றால்
முத்தமிடுவோம்;
மாற்று இயக்கமென்றால்
துரத்திவிடுவோம்!!
 
 
சத்திய மார்கத்திற்குள்
சலிக்காத 
சண்டை;
கானல் நீராய்ப் போன
சகோதரத்துவம்!!
 
 
ஒன்றுப்படவே குரல்கொடுப்போம்
ஒயாமல் - ஆனால்
தனித் தனியே!!
 
 
வெற்று இடமாய்ப் போன
எங்கள்
சஹாபாக்களின்
சகோதரத்துவம்;
இறக்கும் தருவாயிலும்
தண்ணீரைக் கொடுத்து
தரணியை விட்டு
தூயவனிடம் சென்ற உத்தமர்கள்!!
 
 
வேண்டாம் இந்தக் கொடுமை;
விட்டு விடுவோம் பகைமை;
வெறுப்பதும்
அணைப்பதும்
இருக்கட்டும் இறைவனுக்காக;
ஒன்றுச்சேர்வோம் அந்த
ஒருவனுக்காக!!
 
 
வந்துவிட்டோம்
வட்டத்திற்குள்
கலிமா சொல்லி;
இனி
வெட்டாட நினைத்தால்
வெற்றிடமாக்குவோம்!!
மழுங்கிய மக்களை
விழுங்கிய இயக்கங்கள்;
மயக்கமான நெறி - காரணம்
இயக்கமான வெறி!!
 
 
தோய்ந்த மக்களை
தோள்கொடுத்துத்
தூக்கியது இயக்கம்;
இன்று
காலரைப் பிடிக்க அதே
தோள்களைத் தேடும்
இயக்கம்!!
 
 
கண்மணி நாயகம்
காட்டித் தந்த வழி;
இன்றுக்
கட்டித்தழுவி
சாக்கடைச்
சண்டை எங்கள்
சகோதரத்துவம்!! 
  
 
ஒரே இயக்கமென்றால்
முத்தமிடுவோம்;
மாற்று இயக்கமென்றால்
துரத்திவிடுவோம்!!
 
 
சத்திய மார்கத்திற்குள்
சலிக்காத 
சண்டை;
கானல் நீராய்ப் போன
சகோதரத்துவம்!!
 
 
ஒன்றுப்படவே குரல்கொடுப்போம்
ஒயாமல் - ஆனால்
தனித் தனியே!!
 
 
வெற்று இடமாய்ப் போன
எங்கள்
சஹாபாக்களின்
சகோதரத்துவம்;
இறக்கும் தருவாயிலும்
தண்ணீரைக் கொடுத்து
தரணியை விட்டு
தூயவனிடம் சென்ற உத்தமர்கள்!!
 
 
வேண்டாம் இந்தக் கொடுமை;
விட்டு விடுவோம் பகைமை;
வெறுப்பதும்
அணைப்பதும்
இருக்கட்டும் இறைவனுக்காக;
ஒன்றுச்சேர்வோம் அந்த
ஒருவனுக்காக!!
 
 
வந்துவிட்டோம்
வட்டத்திற்குள்
கலிமா சொல்லி;
இனி
வெட்டாட நினைத்தால்
வெற்றிடமாக்குவோம்!!

No comments:

Post a Comment