நகரமுடியாமல்...

காயாத கண்களும் கதைச்
சொல்லும் நம் உறவைப்பற்றி;
சொல்லாமல் சொல்லும் நம் பிரிவைப்பற்றி!

மாதந்தோறும் அனுப்பினாலும் பணம்;
மனம் மட்டும் இன்னும் நிறையாமல்;
மசக்கையைப் போல் வீங்கித்தான் கொண்டிருக்கிறது
உன் நினைவுகள் – பெருமூச்சு விட
பிரசவம் என் விடுமுறைதானோ!!

எந்திர வாழ்க்கை
எதற்கெடுத்தாலும் நேரம்தான் இங்கே;
கும்மாளமாய் குளிக்க நினைத்தாலும்
குரல்களால் மிரட்டலிடும் ஒரு
கூட்டம் கதவினருகில்!!

அத்தனை பரபரப்பிலும்
அலுக்காமல் அணைப்பது உன்
நினைவுகள் மட்டும்தான் நிழலாய்!!

வகை வகையாய் உண்டாலும்
வராது உன் கைப்பக்குவம்;
உண்டு உருண்டுப் படுத்தாலும்
சுமையாய் நம் சோகம் மட்டும் தனியாய்!!

வண்ண வண்ணமாய்
வாங்கித் தந்தாலும் அத்தனையும் பெட்டிக்குள்ளே;
பதில் கேட்டால் பளிச்சென்று
கேள்விக் கேட்டாய் இல்லாமல் நீ;
நான் எப்படிக் கட்டிக்கொள்ள!

வருஷக் கணக்காய் இருந்தாலும்
வங்கி கணக்கில் ஒன்றுமில்லை;
வருஷத்திற்கு ஒரு முறை
வந்துப் போவதால்
வயல் வேலையே பரவாயில்லை!!

உனக்கு நான் ஆடையாய்
எனக்கு நீ ஆடையாய் இருக்கவேண்டிய நாமோ;
இஸ்திரிப் பண்ணி அழகாய் ஆளுக்கொரு நாட்டில்!!

காதோடு நரை விழுந்தப் பின்னும்
நகரமுடியாமல் பலப்பேர் இங்கே;
மனைவிக்குப்பதில் மாற்றமாய்
மருந்துப்பாட்டில்தான் துணையாய்;
வளைகுடா எங்களுக்கெல்லாம் வந்தது வினையாய்!!!
காயாத கண்களும் கதைச்
சொல்லும் நம் உறவைப்பற்றி;
சொல்லாமல் சொல்லும் நம் பிரிவைப்பற்றி!

மாதந்தோறும் அனுப்பினாலும் பணம்;
மனம் மட்டும் இன்னும் நிறையாமல்;
மசக்கையைப் போல் வீங்கித்தான் கொண்டிருக்கிறது
உன் நினைவுகள் – பெருமூச்சு விட
பிரசவம் என் விடுமுறைதானோ!!

எந்திர வாழ்க்கை
எதற்கெடுத்தாலும் நேரம்தான் இங்கே;
கும்மாளமாய் குளிக்க நினைத்தாலும்
குரல்களால் மிரட்டலிடும் ஒரு
கூட்டம் கதவினருகில்!!

அத்தனை பரபரப்பிலும்
அலுக்காமல் அணைப்பது உன்
நினைவுகள் மட்டும்தான் நிழலாய்!!

வகை வகையாய் உண்டாலும்
வராது உன் கைப்பக்குவம்;
உண்டு உருண்டுப் படுத்தாலும்
சுமையாய் நம் சோகம் மட்டும் தனியாய்!!

வண்ண வண்ணமாய்
வாங்கித் தந்தாலும் அத்தனையும் பெட்டிக்குள்ளே;
பதில் கேட்டால் பளிச்சென்று
கேள்விக் கேட்டாய் இல்லாமல் நீ;
நான் எப்படிக் கட்டிக்கொள்ள!

வருஷக் கணக்காய் இருந்தாலும்
வங்கி கணக்கில் ஒன்றுமில்லை;
வருஷத்திற்கு ஒரு முறை
வந்துப் போவதால்
வயல் வேலையே பரவாயில்லை!!

உனக்கு நான் ஆடையாய்
எனக்கு நீ ஆடையாய் இருக்கவேண்டிய நாமோ;
இஸ்திரிப் பண்ணி அழகாய் ஆளுக்கொரு நாட்டில்!!

காதோடு நரை விழுந்தப் பின்னும்
நகரமுடியாமல் பலப்பேர் இங்கே;
மனைவிக்குப்பதில் மாற்றமாய்
மருந்துப்பாட்டில்தான் துணையாய்;
வளைகுடா எங்களுக்கெல்லாம் வந்தது வினையாய்!!!

No comments:

Post a Comment