எங்கோ!
ஒர் மூலையில்
ஈரக்குலைகளின் கதறல்கள்!!
கேட்பாருண்டு
கொடுப்பாரில்லை;
பத்திரிக்கைகள்
பசியைத் தீர்க்க
பக்கம் பக்கமாய்
எழுதி தீர்த்தாலும்
சுடாது எங்கள்
சுரணைக் கெட்ட சமூகத்திற்கு!!
மரத்துப் போன
மனதிற்கு
மருந்து இல்லை;
அடிப்பட்டால்
அதிகப் பட்சமாக
அலறல் சப்தம் மட்டுமே!!
கற்களைக் கொண்டு
களத்திற்கு சென்று
காவியம் படைக்கும்
புது சரித்திரம்
தீராத எங்கள் நாட்டிற்கு வந்த தரித்திரம்!!
வீழ்ந்துக் கிடக்கும் கட்டிடங்களை
எழுப்ப உண்டு நிதி;
அன்னியர்களின்
அரவணைப்பால்
அடகுவைத்த
அரபிகளின் மதி!!
எங்கள் குடல்களே
எங்களை திண்ணும்
புதுவித விருந்து;
என்றுதான் கிடைக்குமோ
வலிக்கு மருந்து!!!
ஆண்டு ஆண்டுக் காலமாய்
அடித்து துரத்தினாலும்
ஒடாது எங்கள்
பாதம் இந்த மண்ணைவிட்டு!
முடியாவிட்டால்
முத்தமிடுவோம்
மரணத்தைத் தொட்டு!!!
உரிமையை இழந்து
ஊமையாய் இருப்பதை விட
ஊசிவெடியாய் இருப்பது மேல்!!!
Tweet
No comments:
Post a Comment