கடல் கடந்து என்
கரம் சேர்ந்து இருக்கும் உன்
கடிதம்!
அழிந்த எழுத்துகளும் உன்
அழுகைதான் காரணம் என
சொல்லாமல் சொல்ல;
கனத்த இதயமோ
ரணமானது மெல்ல!!
வழியில்லாமல்
வளைகுடாவில் நானும்;
விதியே என வீட்டிற்குள் நீயும்!
என் சொந்தங்களை கரையேற்ற
உன் சோகம் பணயமாக
பயணம் வந்தேன்
பாலைவனத்திற்க்கு!
என்னோடு சேர்ந்து
இன்னுமொரு கூட்டம்
வலியோடு இருந்தாலும்
வாய் விட்டு சிரிப்போம்!
கலகலப்பாக
கட்டிலுக்கு சென்றாலும்
கணப் பொழுதில்
கனமாகும் நெஞ்சம்;
உன் நினைவோடு
கனவுக்கு காலடிவைத்தாலும்
அங்கேயும் நீ கேட்பது என்னவோ
என் விடுமுறையைப் பற்றிதான்!!
பசியோடு இருந்தாலும் என்
பக்கத்தில் நீ வேண்டும்;
நடத்தியதுப் போதும் குடும்பம் பாலையோடு
முடித்துவிட்டு வந்துவிடு நாளையோடு என்று!
வெகுளியாய் உன் கையெழுத்திற்கு முன்
வெறுப்பாய் என் கண் முன்னே வெளிநாடு;
காலத்தோடு வந்துவிடுகிறேன்
காலாவதியாவதற்கு முன்னே
வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை
காலம் போனப் பின்னே!
Tweet
நிதர்சனம் உரைக்கும் வலியுடன் கூடிய வரிகள்....!!
ReplyDeleteநெஞ்சம் கனக்கும் காதல் ஏக்கம்... வாழ்வின் வறுமை விரட்ட... நீங்களும்.., வாழ்க்கைத் தனிமை விரட்டும் உங்கள்.., உங்கள் மனைவி..( அ ) காதலி.., யும்.. உணர்வுகளோடு போராடும் உண்மைப் புரிகிறது. நல்ல கனத்தக் கவிதை. வாழ்த்துக்கள். தமிழின் உணர்வுக்கு... தொடருங்கள். வருகைத் தாருங்கள்... ( ithayasaaral.blogspot.com )
ReplyDelete