விழிகளில்
வியர்வையுடன்
வீதியில் நாங்கள்!!
போர்களத்திற்க்காக
ஆங்கிலத்தை
அன்னியமாக்கி
கல்வியறிவை
களவாடிய எங்கள்
அப்பாவி முன்னோர்கள்!!
பொறுத்ததுப்
போதும் என
பொங்கி எழுந்தால்
போய்விட்டது அறுபதாண்டு!!!
அனாதையாகி
அரபுதேசத்தில்!
அடிமையானதை
அறிந்துக்கொள்ளவே
அதற்கும் சில
ஆண்டுகள்!!
கல்லாமையால்
இல்லாமையானோம்;
போனது
போகட்டும் இனி
கல்விக் களத்தை
போர்க்களமாக்குவோம்!!
இருக்கின்ற
இடஞ்சலுக்கு நடுவே
இயக்கம் என்கிற போர்வையிலே
ஆளாளுக்கு
ஆவிப் பிடிக்கும்
அவலம்!!
உணர்வுகளை தட்டியெழுப்பி
ஒற்றுமையில்
ஒன்றுப்பட்டு
வைகறையில் காணுவோம்
விடியலை!!
சல்லடையாய் இருந்து
சில்லறையாய் ஆவதைவிட
மொத்தமாய் இருந்து
சப்தமாய் குரல் கொடுப்போம்!!
கரம் கோர்போம்;
புறம் தவிர்ப்போம்;
முரண்டுப் பிடித்தால்
வறண்டுத்தான் போகும்
வரும் தலைமுறை;
சிந்திப்போம் மீண்டும் ஒருமுறை!!
Tweet
No comments:
Post a Comment