கவிதைக்கு கைத்தடியாய்,

 
உள்ளத்தில் உதித்த  
வார்த்தைகளை 
வரிகளாய்  வார்த்தெடுக்கும் போது;
கரம் மட்டும்
கட்டுப்பட மறுக்கிறது!!
 
கொழுத்த சிந்தனைக்கு நடுவே
எழுத்துக்களும் தர்ணா போராட்டம்!
 
அழுத்தத்தின் நடுவே
எழுத்துக்களின் தடுமாற்றம்;
நண்பர்களிடம் ஏற்படும் மனமாற்றம்!!
 
வரிக்கு வரி
சோதனைச்சாவடியாக 
தவழும் தவறுக்கு 
தார்மீக விமர்சனம் ;
உணரமுடிகின்றது
உங்கள் கரிசனம்!!  
 
நொண்டியடிக்கும்
கவிதைக்கு கைத்தடியாய்
செல்லமாய் உங்கள் முனகல் மட்டும்;
 
அனைத்தையும் எழுதிமுடிப்பது
அலுவலகத்தில் என்பதால் என்னவோ
ஆங்காங்கே பிழைகள்
அலுவலகத்தை போன்றே!!
 
உள்ளத்தில் உதித்த  
வார்த்தைகளை 
வரிகளாய்  வார்த்தெடுக்கும் போது;
கரம் மட்டும்
கட்டுப்பட மறுக்கிறது!!
 
கொழுத்த சிந்தனைக்கு நடுவே
எழுத்துக்களும் தர்ணா போராட்டம்!
 
அழுத்தத்தின் நடுவே
எழுத்துக்களின் தடுமாற்றம்;
நண்பர்களிடம் ஏற்படும் மனமாற்றம்!!
 
வரிக்கு வரி
சோதனைச்சாவடியாக 
தவழும் தவறுக்கு 
தார்மீக விமர்சனம் ;
உணரமுடிகின்றது
உங்கள் கரிசனம்!!  
 
நொண்டியடிக்கும்
கவிதைக்கு கைத்தடியாய்
செல்லமாய் உங்கள் முனகல் மட்டும்;
 
அனைத்தையும் எழுதிமுடிப்பது
அலுவலகத்தில் என்பதால் என்னவோ
ஆங்காங்கே பிழைகள்
அலுவலகத்தை போன்றே!!

No comments:

Post a Comment