வெற்றிகள் வெற்றிடமாய் போகும்

மண்ணில் உதிர்ந்தது உதிரம் அல்ல,
உரங்கள் !
வித்திட்ட விதைகள் மலரும் ஒரு நாள்
மடிவாய்  நீ அந்நாள்!

தக்பீர் சொன்னால் கடிக்க நாய்க்கு  பயிற்சி;
நீ இருக்க எதற்கு இன்னொரு முயற்சி?

உரிமைக்காக உயிர் கொடுக்கும் போராளிக்கு
நீ வைத்த பெயர் தீவிரவாதி?
சொந்த மண்ணில் கால் பதிப்பவனுக்கு
நீ கொடுக்கும் அடைமொழி அத்துதிமீரளா?

இதயங்களை இரும்பாக்கி
மனித நேயத்தை மரணப் படுக்கைக்கு அனுப்பி இருக்கும்
என்னருமை உலக மக்களே
உங்கள் மனம் கூட
மதத்தினைக் கண்டுதான் இறங்குமோ?

அணு ஆயுதத்தை எப்படி கணக்கீடுகிறாய் நீ?
குறித்துக்கொள் எங்கள் ஒவ்வொரு உயிரும் இனி
உனக்கு அணு அணுவான சோதனைத்தான்!!!

கதறும் எம்  பெண்மணிகள் மகனை
இழந்ததற்காக அல்ல;
இழப்பதற்கு இனி மகன்கள்  இல்லையே என்பதற்காக!

தனித்து விடப்பட்ட நாங்கள்
துளிர்த்து எழுவோம் - அப்போது
உன் வெற்றிகள் வெற்றிடமாய் போகும்!

ஒன்றும் இல்லாமல் ஆவாய் - நாங்கள்
ஒன்றுப்படும் நாளில்!!!
மண்ணில் உதிர்ந்தது உதிரம் அல்ல,
உரங்கள் !
வித்திட்ட விதைகள் மலரும் ஒரு நாள்
மடிவாய்  நீ அந்நாள்!

தக்பீர் சொன்னால் கடிக்க நாய்க்கு  பயிற்சி;
நீ இருக்க எதற்கு இன்னொரு முயற்சி?

உரிமைக்காக உயிர் கொடுக்கும் போராளிக்கு
நீ வைத்த பெயர் தீவிரவாதி?
சொந்த மண்ணில் கால் பதிப்பவனுக்கு
நீ கொடுக்கும் அடைமொழி அத்துதிமீரளா?

இதயங்களை இரும்பாக்கி
மனித நேயத்தை மரணப் படுக்கைக்கு அனுப்பி இருக்கும்
என்னருமை உலக மக்களே
உங்கள் மனம் கூட
மதத்தினைக் கண்டுதான் இறங்குமோ?

அணு ஆயுதத்தை எப்படி கணக்கீடுகிறாய் நீ?
குறித்துக்கொள் எங்கள் ஒவ்வொரு உயிரும் இனி
உனக்கு அணு அணுவான சோதனைத்தான்!!!

கதறும் எம்  பெண்மணிகள் மகனை
இழந்ததற்காக அல்ல;
இழப்பதற்கு இனி மகன்கள்  இல்லையே என்பதற்காக!

தனித்து விடப்பட்ட நாங்கள்
துளிர்த்து எழுவோம் - அப்போது
உன் வெற்றிகள் வெற்றிடமாய் போகும்!

ஒன்றும் இல்லாமல் ஆவாய் - நாங்கள்
ஒன்றுப்படும் நாளில்!!!

No comments:

Post a Comment