தொலைத்து விட்ட உறவுகளுக்காக..

துடிக்கின்ற இதயத்தில்
தூண்டிலாக உன் நினைவுகள்!


வெடிகின்ற வேதனைக்கு
அருமருந்தாய் நம் மழலையின் உளறல்!!


தவறிழைக்கும் போது
தலையில் குட்டி கன்னத்தை கிள்ளும் என் அன்னை!


முரட்டு பார்வையால்
விரட்டும் தந்தை!!


காண கிடைக்காத காட்சிகளாய் போயின
இந்த பாலைவனத்திலே!!


அனைத்தும் முடித்து
அமைதியாய் படுக்கைக்கு சென்றாலும்;
கனத்துப்போன இதயத்திற்க்கு மட்டும்
கைகள் மட்டுமே ஒத்தடமாய்!!


தொலைந்துப் போன உறவுகள் அல்ல;
தொலைத்து விட்ட உறவுகளுக்காக
தேடிவந்திருக்கிறேன் பணம்!!


வறுத்தெடுக்கும் வெயிலும்
கறுத்துப் போன தோலுமாய் இங்கே;
அழுக்கு உடையில் அலுவல் செய்தாலும்
அழகாய் உடையணிந்து ஆளுக்கொரு புகைப்படம் வீட்டிற்க்கு!!
துடிக்கின்ற இதயத்தில்
தூண்டிலாக உன் நினைவுகள்!


வெடிகின்ற வேதனைக்கு
அருமருந்தாய் நம் மழலையின் உளறல்!!


தவறிழைக்கும் போது
தலையில் குட்டி கன்னத்தை கிள்ளும் என் அன்னை!


முரட்டு பார்வையால்
விரட்டும் தந்தை!!


காண கிடைக்காத காட்சிகளாய் போயின
இந்த பாலைவனத்திலே!!


அனைத்தும் முடித்து
அமைதியாய் படுக்கைக்கு சென்றாலும்;
கனத்துப்போன இதயத்திற்க்கு மட்டும்
கைகள் மட்டுமே ஒத்தடமாய்!!


தொலைந்துப் போன உறவுகள் அல்ல;
தொலைத்து விட்ட உறவுகளுக்காக
தேடிவந்திருக்கிறேன் பணம்!!


வறுத்தெடுக்கும் வெயிலும்
கறுத்துப் போன தோலுமாய் இங்கே;
அழுக்கு உடையில் அலுவல் செய்தாலும்
அழகாய் உடையணிந்து ஆளுக்கொரு புகைப்படம் வீட்டிற்க்கு!!

No comments:

Post a Comment