இனிய மார்க்கம்


புரிந்துக்கொள்ளும் வழிகள்
பூட்டப்பட்டதால்;
புன்னைகைக்கும் உதடுகள்
புண்ணாக்கிவிட்டுச் செல்லும்!

அமைதிப் பரப்பும்
மார்க்கத்திற்கு;
அவசரமாய்
அரக்கு வைத்து
அழகுப்பார்த்த
அவசர அசுரர்கள்!

பெண்மைக்குப்
பெருமைச் சேர்த்து;
ஆண்மைக்கு அளவுவைத்து;
உறவுகளுக்குச் சந்தோஷம்
கொடுக்கும்!

எல்லைகளை
எளிமையாக்கி;
தண்டனைகளைக்
கடுமையாக்கி;
வசந்தம் கொடுக்கும்
இனிய இஸ்லாம்!

புறத்தைத் தடுத்து;
அகத்தை அழகுச் செய்யும்;
பொய்யிற்கு முட்டுக்கட்டையிட்டு;
புறத்தையும் மெருகேற்றும்!

சாதிகள் இல்லையென்று;
சரிசமம் செய்யும்;
பிரிவனைச் செய்பவரை
பிரித்தெடுத்துக் கொய்யும்!

உதவி என்றுக் கேட்டால்
கரம் நீட்டும்;
உரிமையைத் தட்டிவிட
நினைத்தால்;
எழுச்சிக்கொடுக்கும்!

சினம் கொல்வதே வீரம்;
வட்டி வாங்குவதுப் பாவம்;
சொல்லச் சொல்ல இனிக்கும்
சொல்லி முடிக்க வரிகள் திக்கும்!

வாசம் வீசவில்லை
வாள் கொண்டு;
ஏற்றுக் கொண்டதிற்குக்
காரணம்;
இதன் மணம் கண்டு!

புரிந்துக்கொள்ளும் வழிகள்
பூட்டப்பட்டதால்;
புன்னைகைக்கும் உதடுகள்
புண்ணாக்கிவிட்டுச் செல்லும்!

அமைதிப் பரப்பும்
மார்க்கத்திற்கு;
அவசரமாய்
அரக்கு வைத்து
அழகுப்பார்த்த
அவசர அசுரர்கள்!

பெண்மைக்குப்
பெருமைச் சேர்த்து;
ஆண்மைக்கு அளவுவைத்து;
உறவுகளுக்குச் சந்தோஷம்
கொடுக்கும்!

எல்லைகளை
எளிமையாக்கி;
தண்டனைகளைக்
கடுமையாக்கி;
வசந்தம் கொடுக்கும்
இனிய இஸ்லாம்!

புறத்தைத் தடுத்து;
அகத்தை அழகுச் செய்யும்;
பொய்யிற்கு முட்டுக்கட்டையிட்டு;
புறத்தையும் மெருகேற்றும்!

சாதிகள் இல்லையென்று;
சரிசமம் செய்யும்;
பிரிவனைச் செய்பவரை
பிரித்தெடுத்துக் கொய்யும்!

உதவி என்றுக் கேட்டால்
கரம் நீட்டும்;
உரிமையைத் தட்டிவிட
நினைத்தால்;
எழுச்சிக்கொடுக்கும்!

சினம் கொல்வதே வீரம்;
வட்டி வாங்குவதுப் பாவம்;
சொல்லச் சொல்ல இனிக்கும்
சொல்லி முடிக்க வரிகள் திக்கும்!

வாசம் வீசவில்லை
வாள் கொண்டு;
ஏற்றுக் கொண்டதிற்குக்
காரணம்;
இதன் மணம் கண்டு!

2 comments:

  1. முஹம்மது சித்திக்December 1, 2010 at 3:16 PM

    நச் !!!!!

    ReplyDelete
  2. புரியாதவர்களுக்கு புரிந்தால் சரி..நச்சென்று மார்க்கத்தை அழகாய் சொல்லிவிட்டீர்கள் கவிதை வரிகளில்

    ReplyDelete